இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

வியாழன், 27 பிப்ரவரி, 2014

சிறு தொழில் தொடங்குவோருக்கு சில ஆலோசனைகள்

நம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க

வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட் டியாக இருந்து தொழிலை தொட ங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்க ளுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலி ருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப் போம் .
கேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள் ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப் பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.
கேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா?

பதில்: கண்டிப்பாக வேலை வாய்ப்பு பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது.
கேள்வி: 36 வயது உள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் விண்ணப் பிக்க முடியுமா?
பதில்: பொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந் தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது.
கேள்வி: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க லாமா?
பதில்: இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆகையால் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.
கேள்வி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாரிசுகளுக்கு, முன்னாள்ராணுவத்தினருக்கான வயது வரம்பு சலுகை கிடைக்குமா?
பதில்: முன்னாள் ராணுவத்தினருக்கு என வழங்கப்படும் வயது வரம்பு சலுகை முன் னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே பொருந் தும். அவர்களின் குடும்பத்திற்கோ, பாதுகா வலில் உள்ளவர்களுக்கோ பொருந்தாது.
கேள்வி: பள்ளி மாற்றுச் சான்று பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்: பள்ளித்தலைமை ஆசிரியரிட ம் தொடர்புகொண்டு, மாற்றுச் சான்றித ழை பெற்றுவந்தால் விண்ணப்பதாரரி ன் கல்வித்தகுதி ஏற்றுக்கொள்ளப்படு ம்.
கேள்வி: திட்ட அறிக்கை தயாரிக்க எவ்வளவு செலவாகும்?
பதில்: விண்ணப்பதாரர்கள் உத்தேசித்துள் ள திட்டம் குறித்த உத்தேச வரவு-செலவு மற்றும் முதலீட்டு விபரங்களை நீங்களே தயாரிக்கலாம். மாவட்ட தொழில் மையங் களிலும், சிறு குறு நடுத்தர தொழில் நிறு வனங்களின் மேம்பாட்டு நிறுவனங்களிலு ம் கிடைக்கக் கூடிய மாதிரி திட்ட அறிக்கை களை பார்வையிட்டும் திட்ட அறிக்கைக ளை தயாரிக்கலாம்.
கேள்வி: தொலைநிலைக் கல்வி (Distance Education) மூலம் படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியுமா?
பதில்: விண்ணப்பிக்க முடியும்.

கேள்வி: பழைய இயந்திரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா?
பதில்: பழைய இயந்திரங்களை விலை நிர்ண யம் செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டு மே தொடர்பானது. எனவே அந்த மதிப்பீடு அரசாங்கத்திலும், வங்கியிலும் ஏற்றுக்கொள் ளப்படுவதில்லை. மேலும் பழைய இயந்திரங் கள் தாம் முதலில் நிறுவப் பட்ட இடத்தில் ஏற் கனவே வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்ற கடமையை செய்து முடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே பழைய இயந்திரங்க ள் கொள்முதலுக்கு கடன் கிடையாது.
கேள்வி: பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலு க்கு, கூடுதல் இயந்திரம் வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?
பதில்: U.Y.G.E.P. திட்டம் புதிய தொழில் களுக்கு மட்டுமே. எனவே இதில் விரிவாக்க த்திற்கு கடனுதவி கிடையாது. நீங்கள் உங் கள் சேவைப்பகுதிக்கான வங்கி மேலாள ரை அணுகி சிறு தொழிலுக் கான கடனுத வியை கேட்டு பெற்றபின், மாவட்ட தொழி ல் மையத்தை அணுகி விரிவாக்கத்துக்கான மானியத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கேள்வி: U.Y.G.E.P. திட்டத்தில் கடன் பெற்றால் அந்த நிறுவனத் திற்கு தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனங்களுக்கான மானிய ங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்ப தாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப் படையில் மானியம் வழங்கப்படும்.
கேள்வி: ஏற்கனவே வேறு ஒரு மானிய கடனுதவி திட்டத்தில் கடனுதவி பெற்று, கடனை முழுவதுமான திருப்பி செலுத்தியவர் கள், U.Y.G.E.P. திட்டத்தில் புதிதாக கடன் பெற முடியுமா?
பதில்: ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தா ல், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை. நிதி நிறுவனங்களில் சிறுதொழில் கடனுதவியை பெற்று தகுதி அடிப்படையில் மானியம் பெற்று பயன் அடையவும்.
கேள்வி: ஹாலோ பிளாக் தொழிலுக்கு, சிறு கட்டிடடம் கட்டுவதற்கான உத்தேச மதிப்பீட்டை திட்ட முதலீட்டில் சேர்த்துக் கொள் ளலாமா?
பதில்: தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உத்தேசித் துள்ள உற்பத்தி தொழில் தொடங் குவற்கு தேவையான கட்டிடம், இயந்திர தளவாடம் மற்றும் நடை முறை மூலதனம் ஆகியவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.5 லட்சத் துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பி.கு: உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுங்கள்!

சுயதொழில் தொடங்குவது எப்படி சில முக்கிய ஆலோசனைகள்

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக 

த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்
ஆரம்பித்தால் வெற்றி பெறலா ம். அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில்
சிறந்த பள்ளி ஒன் றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடு முறைக்கு தன் பாட்டி ஊரான காரை க்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனி மையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும்ம றைந்தது. ஏன்? அங்கு சென் னையிலி ல்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்த து. அங்குள்ள அனைவரும் அவதிப்ப டுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில் லை. தான்தங்கியிருந்த அறைக்கு சுயகண்டுபிடிப்பி ல் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்ப டி? தன் பாட்டி வீட்டிலிருந் த பசுமாட்டிலிருந்து 2கிரா ம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அத ற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினை க்கூட்டி மின் விசிறி ஓடச்செய் தான். அவனுடைய கண்டுபிடிப் பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரி சக்தி, பொறியியல் ஒலிம்பிக்கி ல் அவன் அமெரிக்கா டெக்ஸா சில் நடந்த பொ ருட்காட் சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவ னுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா?
மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத் தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகா ரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார் ந்து விசிறியால் அல்லது கா லண்டர் அட்டையால் வீசிக் கொண்டு இருப்போம். ஆனா ல் அந்தச் சிறுவன் அந்தத் தே வைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள் ளான். அவன் கண்டுபிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில்வருங்காலத்தில் மின் உற் பத்தி மாற்றுத் தொழில் ஏற்படுத்து வதிற்கும் வழி யாகும் அல்லவா? ஆகவே நமது சிறிய சேமி ப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமா ன வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக் கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக் கொண்டு தொழில் மு னைவோருக்கு மானியம் வழங்குகிற து.
மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
1) மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2)தோல் சம்பந்தமான பொ ருட்கள் தயாரிப்பு
3) வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
4) மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5) சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6) ஏற்றுமதி ஆபரணங்கள்
7) மாசுகட்டுப்பாடு உபகரணங் கள்
8) விளையாட்டுப் பொருட்கள்
9) சிக்கன கட்டுமானப் பொருட் கள்
10) ஆயத்த ஆடைகள் தயாரிப் பு போன்றவைகள்
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவீதம் மானியமாக வழங்கப்படு கிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறை ந்த மின் அழுத்த மின்சாரம் வழங்க ப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக் கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆ ண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியி ல் ஈடுபடுத்தவும் நிறுவனங்க ளுக்கு கூடுதலாக ஐந்து சதவீ தம் அதிகபட்சமாக ரூபாய் ஐந் து லட்சம் வரை வேலை வாய் ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைக ள் பெற பின்தங்கிய வட்டங் கள் என அறிவிக்கப்பட்டுள்ள ன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொ ழில் மையங்கள் நிறுவப்பட் டு 1803 தொழில் நிறுவனங்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள்மூலம் அறிந்து தொழில் தொ டங்கலாம்.
தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவிசெய்கின்றன. அதனைப் பெறுவது எப்படி? வெறும் கையி னை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.உங்களிடம் தகுதி, திறமை, உழைப்பு மற் றும் விடா முயற்சி இருந்தா ல் கண்டிப்பாக உங்களுக்கு வங்கிகளில் இருந்து கடனு தவி கிட்டும்
சுயதொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய் யும் மனப்பான்மையுடன் உரு வாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடி ப்படையில் வறுமைக்கோட்டிற் குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உத விக்குழு தொடங்கலாம். அப்ப டி தொடங்கப்பட்ட குழு அங்கீக ரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத் தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வி யறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனரா கவும், மற்றும் இரண்டு பிரதிநிதிக ள் கொண்ட செயற்குழுவினை ஏற்ப டுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன் று மாதங்க ளில் சங்க சேமிப்பில் உறுப்பினர்க ளுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச்செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச்செலுத்து ம் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங் கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கட ன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூ பாய் 1,75,00 மானியமாகப் பெ றலாம். ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல் லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர் களுக்கு ஏற்படுத்தலாமே!
ஒருங்கிணைப்பு:
முன்பெல்லாம் தொழில் தொட ங்க ஒவ்வொரு அலுவலமா க அலைந்து அனுமதி வாங்க வே ண்டியதிருந்தது. அதனை ஒரு ங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச்செய்து எளிதாக்கியுள் ளார்கள். கீழ்கண்ட மையத்தி ல் மனு செய்தாலே உங்களுக் குத் தேவையான அனுமதி கி டைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம் பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600 008
தொலைபேசி: 044-28553118, 285553866
ஃபேக்ஸ்: 28588364
தொழில் நுணுக்கங்கள்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத் தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கை யாளர்களை நம்முடைய அணு குமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதா ரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையி லுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங் குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மக ன் கவனித்து வந்தார்கள். வாடி க்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந் தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையி ட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவ ர் என்று கேள்விப்பட்டேன். வழக்கம்போல் வாங்கும் மளி கை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரி த்தபோது அது பூசனம் அடைந் திருந்தது. உடனே அதனை எடு த்துச் சென்று அந்த இளைஞரி டம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தர மறுத்து விவாதம் செய் தார். நானும் அதனை பெரிதுபடுத்த வில்லை. ஆனால் அந்த இளை ஞர் வந்து மூன்று மாதத்திற்கு ள்வாடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெ றும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தி னை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தி னர் இப்போது நடத்துகின் றனர்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற் றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணு குமுறையே வெற்றிக்கு வழிவகுக்கும.

சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு

குறையாமல் சக்கை போடு போட் டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளே வர்களில் பல பேக்கிங்களில் வந் தாலும், வாழை யடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான
விஷயமில்லை என் பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.
சந்தை வாய்ப்பு!
எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பதுஇதற்கிருக்கும் தனிச்சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய, பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப் பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வி யாபாரம் மட்டுமல்லாமல், பள் ளி மற்றும் கல்லூரி கேன்டீன்க ள், ஓட்டல்கள், மதுபான விடுதி கள், ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்ப னைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங்கள் இருந்தாலும் தரமாகவும், சுவை யாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தே டிவந்து வாங்கிச்செல்கிற நி லை இருக்கிறது.
தயாரிக்கும் முறை!
உருளைக்கிழங்கு மற்றும் நேந் திரன், மொந்தன் வாழைக் காய் களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால், இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்குமுன் காய்க ளை நன்கு கழுவி தோ லை நீக்கி, இதற்கென பிர த்யேகமாக இருக்கும் இய ந்திரத்தைக் கொண்டு தகு ந்த அளவுகளில் நறுக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்க வே ண்டும். தரமான எண்ணெ ய்யில் பக்குவமாக பொறி த்தால் சிப்ஸ்ரெடி. தேவை யான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்து, சூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.
தரக்கட்டுப்பாடு!
எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந் தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமா கவும், சுகாதாரமாகவும் செ ய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்ப டுத்தல் மற்றும் உணவுக் கலப்படத்தடுப்புத் துறைகளிலிருந் து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ்(பீரோ ஆஃப் இந்தியன்ஸ் டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன்மூலம் உங்கள் தயாரி ப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதி கரிக்கும்.
நிலம் மற்றும் கட்டடம்!
இத்தொழிலைத் தொட ங்க சுமார் 250 சதுர அடி இடம் வே ண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டட ம் கட்டவும், 75-80 சது ரடியில் குடோன் மற்று ம் பேக்கிங்அறைக்குஎன ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும், கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்ட மிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத் தது.
இயந்திரம்!
300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50 டன் சிப்ஸ் தயாரி க்கமுடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்தி, கொல்கத்தா, கோய ம்புத்தூர், சென்னை போன்ற இட ங்களில் கிடைக்கிறது.
அத்தியாவசிய தேவைகள்!
தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீ ர் தேவைப்படும்.
மூலப்பொருட்கள்!
உருளைக்கிழங்கு தமிழ் நாட்டி ல் ஊட்டியில் கொள்முதல் செ ய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரி, திருச்சி, கேர ளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்பு, காரம், எண்ணெய் அனைத்தும் சுலப மாக கிடைப்பதுதான். நம து ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன், நேந்திரன் 25 டன் தேவைப்படும். உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகித மும், நேந்திரன் சிப்ஸில் 20 சதவிகிதமும் கழிவு ஏற்படலா ம்.
வேலையாட்கள்!
சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2
பேக்கிங் வேலையாட்கள்- 2
உதவியாளர்கள் – 2
விற்பனையாளர் – 1
செயல்பாட்டு மூலதனம்!
முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத் தித் திறனுக்கு செயல் பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
சிறிய அளவிலும், கொஞ் சம் பெரிய அளவிலும் இ த்தொழிலைச் செய்ய நி னைப்பவர்கள் தாராளமா க இறங்கலாம். தரம், சுவை, வாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி னால் சிப்ஸ் தயா ரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : இரா. கலைச்செல்வன்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை
”எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக்கொடுக்காம ல் இருந்தால்தான் மார்க்கெட்டி ல் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொ ழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலா ம். குறைந்த அளவிலான உற்பத் தி எனில் இய ந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத் தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழி லில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெ ய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவை யாக இருக்கும். பாம் ஆ யிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கு ம். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெ ய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்ப டுத்தவேண்டு ம்.
எல்லா காலங்களிலும் உரு ளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந் திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லாகாலங்களிலும் கிடைக் கிறது. இதில் வாடிக்கையாளர் கள் அதிகம் விரும்புவது நேந்தி ரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவை யான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிக ளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும்கிடைக்கும்.”

மேடை அலங்காரம் முன்னேறும் மாணவன்

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்! காகிதத்தில் காசு; கலக்கும் கல்லூரி மாணவி!

தங்கம் அணிந்தால்தான் மதிப்பு என்ற காலம் போய், உடைக்கு ஏற்ற வண்ணவண்ண நகைகளை அணிவது இன்றைய ஃபேஷனாக மாறிவிட்டது. ஃபேஷன் நகைகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அழகுக் கொஞ்சும் லோலாக்கு, நெக்லஸ் போன்ற ஃபேன்சி நகைகளைக் காகிதத்தில் செய்து காசு பார்க்கிறார் ப்ரீத்தி. சவீதா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ப்ரீத்தி தன் பிசினஸ் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''பேப்பர் ஜுவல்லரியில் ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் இறங்கினேன். பிறகு அதுவே விரும்பிச் செய்யும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. எனது சிறுவயது முதலே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.   பொழுதுபோக்காகக் கலைப் பொருட்கள் தயார் செய்து வீட்டை அலங்கரித்து வந்தேன்.
கல்லூரிக்குச் செல்லும்போது கலைப் பொருட்கள் செய்வதற்கான வகுப்புகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு நகைகள் வடிவமைத்தல் பிரிவில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். நகை வடிவமைத்தலில் பேப்பர் ஜுவல்லரி என்னை மிகவும் கவர்ந்தது. அதை முழுமையாகக் கற்றுக் கொண்டேன்.
புதிய புதிய டிசைன்களில் காகித நகைகளை வடிவமைத்தேன். காகித நகைகளை பல வண்ணங்களில் தயாரித்தேன்.  இந்தக் காகித நகைகளை அணியும் கலாசாரத்தைக் கல்லூரி மாணவர்களுக்கிடையில் அறிமுகப்படுத்தி பிசினஸாக ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா எனக்குத் தோன்றியது.
ஆரம்பத்தில் நான் தயாரித்த காகித நகைகளை அன்றைய தினத்தில் நான் அணியும் உடைகளுக்கு மேட்சிங்காகப் போட்டு கல்லூரிக்குச் சென்றேன். அதைப் பார்த்த என் சக தோழிகள் 'இந்த நகைகளை எங்கு வாங்கினாய், மிக அழகா இருக்கே’ என்று கேட்க, 'நானே இதைத் தயாரித்தேன்’ என்று சொன்னதும்,  எங்களுக்கும் செய்துகொடு என்று கேட்கத் தொடங்கினார்கள். அதுவரை வெறும் பொழுதுபோக்காக நான்  செய்த விஷயம் எனக்கு பிசினஸ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.  இன்று என் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிற அளவுக்குக் கைதருகிறது இந்த பிசினஸ்.
எனது தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து 'அலன்கிரித்தா’ என்ற பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கினேன். என் கலெக்ஷன்ஸ் 25 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரை உள்ளது. லோக்கல் ஆர்டர்கள் மட்டுமின்றி மும்பையிலிருந்து எல்லாம்கூட ஆர்டர் வருகிறது. நான் விலையில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்றாலும், வெளியூர் ஆர்டர் எனில், அதற்கான டெலிவரிக் கட்டணங்கள் தவிர, வேறு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கமாட்டேன்.
இந்தத் தொழிலுக்கான முதலீடு மிகக் குறைவு. நான் படித்துக்கொண்டே இந்த பிசினஸ் செய்வதால், பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. என் தேவைகளை நானே பூர்த்திசெய்யும் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. தேவைக்குப்போக மீதமுள்ள தொகையைச் சேமித்துவைக்கிறேன்.
இப்போதைக்கு இந்த பிசினஸ் நன்றாகச் செல்கிறது. படிக்கிற நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உருப்படியாக இதைச் செய்து நாலு காசு பார்ப்பதால் என் பெற்றோருக்கும் என் மீது நல்ல நம்பிக்கை வளர்ந்துள்ளது. கல்லூரியிலும் நல்ல பெயர்தான்! இன்ஜினீயரிங் படித்து முடித்த பிறகு 'அலன்கிரித்தாவை’ இன்னும் பெரிய அளவில் வளர்க்கவேண்டும் என்பது என் ஆசை'' என்றார் ப்ரீத்தி.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பேக்கரி தொழில் தொடங்க முழு விவரம்



டந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.

ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.

தயாரிப்பு முறை:
மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.
அனுமதி:
பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.
கட்டடம்:
ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
இயந்திரம்:
ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.
மற்ற செலவுகள்:
ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
தண்ணீரும் மின்சாரமும்:
20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.
மூலப்பொருள்:
இத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.
வேலையாட்கள்!
இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.
முந்தைய செலவுகள்:

பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.
செயல்பாட்டு மூலதனம்:முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.


சந்தை வாய்ப்பு!

உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.



ரிஸ்க்:
ரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா? தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.
சாதகமான விஷயம்:
பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.
தற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது. பிரகாசமான எதிர்காலம் உள்ள இத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்?









ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

‎அட்டைப் பெட்டி தயாரிப்பு‬

பேக்கிங் செய்யவேண்டிய பொருட்களைக் கையாள்வதில் அட்டைப் பெட்டிகள் அவசியமாகிவிட்டன. பெரிய பெரிய பண்டல்கள் முதல் சின்னக் கண்ணாடி பொருட்கள் வரை பாதுகாப்பாக அனுப்பிவைக்க அட்டைப் பெட்டிகள்தான் சரியான தீர்வாக இருக்கிறது.

உணவுப்பொருட்கள், சோப்பு முதற்கொண்டு எல்லாமே அட்டைப் பெட்டிகளின் ஆதிக்கம்தான். பொதுவான அளவுகளில் செய்து விற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஆர்டர்களுக்கேற்ப வேலைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். எனவே, வணிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம்கொண்ட அட்டைப் பெட்டிகள் தயாரிப்பதும் லாபம் மிகுந்த தொழிலே. தவிர, இந்த அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தியபின் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதும், விலை குறைவானது மற்றும் எளிதாக கையாளுவதற்கு ஏற்ப குறைந்த எடை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப ஆர்டர்களை எளிதில் பிடித்துவிட முடியும். எனவே, இந்த வாரம் இதுகுறித்துப் பார்ப்போம்.

மேல்பக்கமும், கீழ்பக்கமுமாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள், இடையில் ஓர் அச்சின் மூலம் வளைவு வளைவாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள். இந்தப் பேப்பர்களைப் பசை மூலம் ஒட்டவைத்து, அதன் முன்புறமும் பின்புறமும் இணைக்கப்படும். இந்தத் தொழில் இயந்திரமயமாக்கப்பட்ட தொழில். சரியாகச் செய்தால் லாபம் நிச்சயம்.

திட்ட மதிப்பீடு!

நிலம் :

சொந்தமாக அல்லது வாடகை

இயந்திர வகை
(ஐந்து அடுக்கு பெட்டிக்கு) : ரூ.25 லட்சம்

மின்சாரம் மற்றும் இதர
செலவு : ரூ.5 லட்சம்.

நடைமுறை மூலதனம் : ரூ.7.50 லட்சம்.

இந்தத் திட்டத்துக்கு 'நீட்ஸ்’ திட்டத்தின் மூலம் மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பட்டப் படிப்பு அல்லது பட்டயப் பயிற்சி மற்றும் ஐ.டி.ஐ. பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். வயது 45-க்குள் இருந்தால் 'நீட்ஸ்’ திட்டத்தில் கடனுதவி கிடைக்கும்.
மூலதனம்!

நமது பங்கு (5%) : ரூ.1,50,000

மானியம் : ரூ.7,50,000

வங்கிக் கடன் : ரூ.21,00,000

உற்பத்தி!

ஐந்து அடுக்கு (ஃப்ளே) அட்டைப் பெட்டிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். 500 கிராம் எடை கொண்ட பெட்டிகள் எனில், ஒருநாளில் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும். நாம் சராசரியாக 5,000 பெட்டிகள் உற்பத்தி செய்வதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி கணக்கிட்டால் மாதத்துக்கு 62.5 டன் உற்பத்தி செய்ய முடியும். நாம் இதை 60 டன் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு டன் பேப்பர் விலை ரூ.26,000 - ரூ.27,000 வரை ஆகும். நாம் ரூ.27,000 என்று வைத்துக்கொள்வோம்.

பேப்பர்களின் இடையில் ஒட்டுவதற்கான பசை தேவைப்படும். இது பவுடராகக் கிடைக்கும். தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 60 கிலோ பசைமாவில் 300 கிலோ பசை கிடைக்கும்.

1 டன் உற்பத்திக்கு 60 கிலோ பசை தேவை. இந்தப் பசை மாவு ஒரு கிலோ 35 ரூபாய். மாதத்துக்கு 60 டன் உற்பத்தி இலக்கு என்கிறபோது ரூ.1,26,000 தேவைப்படும் (60ஜ்60ஜ்35=1,26,000).

வேலையாட்கள்! (ரூ.)

மேலாளர்: 1X15,000 = 15,000
மேற்பார்வையாளர்: 2X10,000 = 20,000
ஆபரேட்டர்கள்: 10X8,000 = 80,000
துணை வேலையாட்கள்: 3X5,000= 15,000
விற்பனையாளர்கள்: 1X10,000 = 10,000
மொத்தம் = 1,40,000

மின்சாரம்: 65 ஹெச்.பி : 35,000

மூலப்பொருள்:

காகிதம் 1 டன் : ரூ27,000. ஒரு மாதத்துக்கான உற்பத்தி இலக்கு 60 டன் எனில் ரூ.16,20,000 செலவாகும்.
(60X27,000=16,20,000)

விற்பனை வரவு!
ஒரு கிலோ ரூ.38 - 40 வரை விற்பனை செய்யலாம். நாம் ரூ.38-க்கு விற்பனை செய்கிறோம் எனக் கொண்டால் ஒரு மாத விற்பனை வரவு ரூ.22,80,000

மொத்த செலவு! (ரூ)
மூலப்பொருட்கள் : 16,20,000
பசை : 1,26,000
வேலையாட்கள் : 1,40,000
மின்சாரம் : 35,000
கடன் வட்டி (12.5%) : 21,875
கடன் தவணை
(60 மாதங்கள்) : 35,000
நடைமுறை மூலதன வட்டி: 7,800
இயந்திரப் பராமரிப்பு : 10,000
மேலாண்மைச் செலவு : 10,000
விற்பனைச் செலவு : 10,000
தேய்மானம் : 38,000
_________
மொத்த செலவு : 20,53,675
_________
மொத்த வரவு : 22,80,000
மொத்த செலவு : 20,53,675
_____________
லாபம் : 2,26,325
_____________

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி தொடங்க உள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில், வரும் ஜூன் 16-ஆம் தேதி சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக சீன ஜவுளி இயந்திர உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த காங் ஜெங், ஃபால்கன் எக்ஸிபிட்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி சூரஜ் தவன் ஆகியோர் கோவை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சீனாவின் ஷாங்காய் நகரில் நான்காவது முறையாக ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி இவ்வாண்டு ஜூன் 16-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய சர்வதேச கண்காட்சி மையத்தில் இக்கண்காட்சி நடக்க உள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் தங்கள் ஜவுளி இயந்திரங்களை காட்சிக்கு வைக்க உள்ளன.
இக்கண்காட்சியில் ஜவுளித் துறையின் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டு இயந்திரங்கள் இடம்பெற உள்ளன. இந்தியாவில் ஜவுளி இயந்திர உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் உள்ளிட்ட, உலகம் முழுவதும் ஜவுளி இயந்திர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கண்காட்சியைப் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பின்னிங், டையிங், ஃபினிஷிங், நிட்டிங், ஹொசைரி, வீவிங், டெஸ்டிங், சாயப் பொருள்கள், ரசாயனம், மென்பொருள், நான்-ஓவன்ஸ், எம்பிராய்டரி, கார்மென்ட் தயாரிப்பு தொடர்பான இயந்திரங்கள் கண்காட்சியில் அதிக அளவில் இடம்பெற உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில், வரும் ஜூன் 16-ஆம் தேதி சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக சீன ஜவுளி இயந்திர உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த காங் ஜெங், ஃபால்கன் எக்ஸிபிட்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி சூரஜ் தவன் ஆகியோர் கோவை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சீனாவின் ஷாங்காய் நகரில் நான்காவது முறையாக ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி இவ்வாண்டு ஜூன் 16-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய சர்வதேச கண்காட்சி மையத்தில் இக்கண்காட்சி நடக்க உள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் தங்கள் ஜவுளி இயந்திரங்களை காட்சிக்கு வைக்க உள்ளன.
இக்கண்காட்சியில் ஜவுளித் துறையின் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டு இயந்திரங்கள் இடம்பெற உள்ளன. இந்தியாவில் ஜவுளி இயந்திர உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் உள்ளிட்ட, உலகம் முழுவதும் ஜவுளி இயந்திர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கண்காட்சியைப் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பின்னிங், டையிங், ஃபினிஷிங், நிட்டிங், ஹொசைரி, வீவிங், டெஸ்டிங், சாயப் பொருள்கள், ரசாயனம், மென்பொருள், நான்-ஓவன்ஸ், எம்பிராய்டரி, கார்மென்ட் தயாரிப்பு தொடர்பான இயந்திரங்கள் கண்காட்சியில் அதிக அளவில் இடம்பெற உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

Solar Equipment Training at Trichy.



Solar Equipment Training at Tiruchirappalli.

கிரிஸ்டல் நகை தயாரிப்பு


''மாடர்ன் டிரெஸ்ஸா இருந்தாலும் சரி, சேலையாக இருந்தாலும் சரி அதுக்கு உரிய நகைகள் போடும்போதுதான்  மதிப்புகூடும். தங்கம், பேப்பர், குந்தன், கிரிஸ்டல் நகைகளைவிட இந்த ஜங்கிள் நகையைப் போடும்போது எல்லோர் பார்வையும் உங்க மேலதான் இருக்கும். வயசைக் குறைச்சு அழகு கூட்டுற ரகசியம் இதுல இருக்கு'' என்கிறார் திருச்சியில் ஜங்கிள் ஜுவல்ஸ் செய்யும் பாலமுரளி.
நெல், கல் வாழை, யானை குண்டுமணி, மயில் கொன்றை போன்ற 15 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு  200-க்கும் மேலான டிசைன்களில் நகை செய்கிறார்கள். '' இந்த ஜங்கிள் நகைகள் மாடல், பாரம்பரியம் என எல்லா ஆடைகளுக்கும் மேட்ச் ஆகிறதால, போற இடத்துல ஒரு கூட்டத்தைக் கூட்டிடலாம்'' என்கிறார் பாலமுரளி.
இரண்டு குழுவாகப் பிரிந்து, மிகவும் பொறுமையாகச் செய்யவேண்டிய வேலை இது. வேலை செய்பவர்கள் கைகளை உற்றுக் கவனித்தால் நம் தலை 'கிர்ர்ர்...' என சுற்றும் அளவுக்கு செம ஸ்பீடாக இருக்கிறது. ''பாசிமணி, கிரிஸ்டல், முத்து மணி, பவள மணி இல்லாமல் மூலிகை விதைகளில் இருந்து நகைசெய்ய ஐடியா கொடுத்தது பாலா சார்தான்'' என்கிறார்கள் எக்ஸ்பிரஸ் டீம் தோழிகள்.
''எங்க தாத்தா, அப்பா காலத்துல இருந்தே மூலிகைத் தோட்டம் வெச்சிருக்கோம்.  முன்னாடி, காய்ச்சல்னா வீட்டுலேயே மூலிகை கஷாயம் போட்டுத்தருவாங்க.  இப்போ சின்னதா ஒரு எறும்பு கடிச்சாலும் டாக்டர்கிட்ட ஓடுறாங்க. இப்ப உள்ள மக்களுக்கு மூலிகைகளின் பயனை எப்படிக்கொண்டு சேர்க்கலாம்னு நானும் என் நண்பன் வினோத்தும் சேர்ந்து யோசிச்சோம். இதுல இருந்து கலைப்பொருள், பெண்கள் பயன்படுத்துற நகை பண்ணலாம்னு ப்ளான் பண்ணினோம்.
ஆரம்பத்துல நாங்களே சில மாடல்ஸ் கிரியேட் பண்ணி, அதை ஆர்வமுள்ள பெண்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். அதே குழு பெண்களை வெச்சே பெரிய அளவுல நகை பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சோம். ஆனா, எனக்கு உறுதுணையா இருந்த நண்பன் வினோத், பிசினஸ் ஆரம்பிச்ச அன்னைக்கே விபத்துல இறந்துட்டான். 'அவனே போய்ட்டான்... இனிமே இது எதுக்கு’னு இருந்தேன். ஆனா, ஒரே ஒரு நாள் மட்டுமே பயிற்சிக்குவந்த பெண்கள் யாரும் என்னைவிடலை. அவங்களோட ஆர்வம் காரணமாக நானும் இதுல இறங்கினேன்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாடல்ல கிரியேஷன் பண்ணுவாங்க. இங்கே வேலைசெய்ற எல்லோரும் நிறைய படிக்கலைனாலும் திருச்சியைத்தாண்டி சென்னை, கோவைவரைக்கும் ஸ்டால் போட்டு விற்பனை செய்றாங்க. வாங்குகிற எல்லோருமே கேட்கும் முதல் கேள்வி, ' இது எதுல செஞ்சது?’ என்பதுதான். விதைனு சொன்னா நம்பமாட்டாங்க. 25 ரூபாய்ல இருந்து 750 ரூபாய் வரைக்கும் விலையில் இருந்தாலும், யாரும் விலையைப் பார்க்காம டிசைனை மட்டுமே பார்த்து வாங்குறாங்க
.
இந்த நகைகளை பாம்பே, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அமெரிக்காவரைக்கும் ஏற்றுமதி பண்றோம். அதிலும் வெப்சைட் மூலமா ஆன்லைன்ல நிறைய சேல்ஸ் ஆகுது. நம்ம சைடுல சாதாரண நெல்லுதானேனு அலட்சியப்படுத்துறாங்க. ஆனா, நெல்லுனா என்னன்னே தெரியாத மக்கள் இதை ரொம்ப விரும்புறாங்க.
திருச்சியில உள்ள பொண்ணுங்க ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. ஏன்னா... அவங்க டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா, பிடித்த  டிசைன்ல செய்யச்சொல்லி வாங்கிட்டுப் போகமுடியுது. அதிலும் பொண்ணுங்களைவிட அதிகமா பசங்கதான், அவங்க லவ்வரை இம்ப்ரஸ் பண்றதுக்காக வாங்கிட்டுப் போறாங்க. அதனால, திருச்சி பொண்ணுங்க டபுள், டிரிபிள் லக்கிதான்''  சிரிக்கிறார் பாலமுரளி!
- மா.நந்தினி

புதன், 19 பிப்ரவரி, 2014

அடுத்த தலைமுறை அவஸ்தைப்படலாமா

இந்தியா ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை வருஷத்தின் எல்லா நாட்கள்லயும் கொடுக்கிறது நம்ம பூமி.  தானியம், காய்கறி, பழங்கள், எண்ணெய் வித்துக்கள்னு கொடுத்து நம்மை வாழ வைக்குது. ஆனா, நமக்குதான் உணவின் மகத்துவம் தெரியறதில்லை.  உணவுப் பொருட்களை வீணடிக்கறதும்கூட ஒரு வகையில் உணவுப் பஞ்சத்துக்குக் காரணம்’’. அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பிக்கிறார் கவிதா  அபிராமி. தஞ்சாவூர், ‘இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவன’த்தின் (Indian Institute of Crop Processing Technology)  துறைத் தலைவர்.  உணவுகளைப் பதனிட்டு, பாதுகாத்து, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும்  கற்றுத்தரும் பணியில் இருப்பவர். 


‘‘திருச்சிக்கு அருகே இருக்கும் குமுளூர்ல ‘பி.இ. அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்’ படிச்சேன். விவசாயம் படிக்கறவங்க மண்ணின் தன்மையில ஆரம்பிச்சு  விதை, நடவு, அறுவடை செய்யும் முறைகளை எல்லாம் படிப்பாங்க. ‘விவசாய பொறியியல்’ படிப்போ, விவசாயத்துக்குத் தேவையான மெஷின்களைப்  பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பானது. உழவுக்கு எந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், விதை தூவுவதற்கு எந்த மெஷின் சிறந்தது,  அறுவடைக்கு எந்த இயந்திரத்தைப் பயன்படுத்தினால் சீக்கிரமே வேலைகள் முடியும் என்பதையெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். 

இறுதியாண்டு படிச்சப்போதான் ‘உணவுப் பதனிடுதல்’ முறைகளுக்காகவே தனி கோர்ஸ் இருப்பது தெரிஞ்சுது. கோயம்புத்தூர், ‘தமிழ்நாடு விவசாய  பல்கலைக்கழக’த்தில் ‘எம்.இ. ஃபுட் ப்ராசஸிங் இன்ஜினியரிங்’ சேர்ந்தேன். 2 வருஷப் படிப்பு. பருவ காலங்களில் தேவைக்கு அதிகமாக உணவுப்  பொருள்கள் உற்பத்தியானால் வீணாகும். அதை எப்படிப் பாதுகாத்து மற்ற நாட்களில் பயன்படுத்தலாம் என்பதைக் கத்துக் கொடுத்தாங்க. உணவுப்  பொருள்களை பதப்படுத்தி சாப்பிடுவது பற்றிய போதிய அறிவு நம்மிடம் இல்லை. 

‘இந்திய அளவில் வெறும் 3 சதவிகிதம் உணவுப் பொருள்கள் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 30 சதவிகிதம் காய்கறிகள், பழங்கள்  வீணாகின்றன’ என்பதை எங்கள் ஆய்வில் கண்டுபிடித்தோம். உலக அளவில் பால் உற்பத்தி யில் முதலிடம், இறைச்சி, வாசனைப் பொருட்கள்,  பயிர்கள் உற்பத்தியில் இரண்டாம் இடம் என பல பெருமைகள் நம்ப நாட்டுக்கு இருக்கு. ஆனா, அவற்றை வீணடிக்காமல் சரியான முறையில்  பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. இதை எப்படிச் சரி செய்யலாம்கறதை கத்துக் கொடுக்குறதுதான் ‘பதனிடுதல்’ படிப்பு. 

அறுவடையாகும் தானியங்கள், காய், கனிகளை பத்திரமா ‘பேக்’ பண்ணி குடோனுக்கு கொண்டு போறது கூட முக்கியமானது. ஏன்னா அதுல பாதி,  வழியிலேயே வீணாகலாம். பதனிடுதல் படிக்கிறவங்க முதல்ல காய்கறி, பழங்களை உயிருள்ள பொருளா நினைக்கணும். அப்போதான் அதைப்  பாதுகாக்க முடியும். பயிர்களும் செடிகளும் மரங்களும் நம்மைப் போலத்தான் சுவாசிக்குது. காற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் நமக்கு  என்ன பிரச்னை வருமோ அது அவற்றுக்கும் வரும். சரியான டெம்பரேச்சர்ல இல்லைன்னா காய்கறிகள், பழங்கள் கெட்டுப் போகும்... சரியாக பழுக்காம  வெம்பிப் போகும்.  

முனைவர் பட்டத்துக்கு ‘மாற்றியமைக்கப்பட்ட சூழலில் தக்காளியை இருப்பு வைத்தல்’ என்ற ஆய்வை செய்தேன். உயர் ஆராய்ச்சிக்காக கனடா  போனேன். பிறகு, இந்தப் பதனிடுதல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தஞ்சாவூரை சுற்றி இருக்கும் இடமெல்லாம் விவசாய பூமி. தேவைக்கு  அதிகமாகவே பொருள்கள் விளையும்... நம் கண் முன்னாடியே வீணாகும். இங்கே இருக்கும் விவசாயிகளுக்கு ‘பதனிடு தல்’பற்றிய விழிப்புணர்வு  தேவைப் படுது. அவங்க உற்பத்தி செய்வதைப் பதனிட்டு, பாதுகாத்து வைத்து, தேவையான போது கொடுக்கிறோம். 

உதாரணமா, சீசனில் தேவைக்கு அதிகமாக விளையும் மாம்பழங்களிலிருந்து மில்க்ஷேக், ஜூஸ்னு செய்யறோம். இதனால உணவுப் பொருள்கள்  வீணாவது குறையுது. உணவுப் பொருட்களில் என்னென்ன தயாரிக்கலாம் என்பதற்கான பயிற்சிகளையும் தர்றோம். இந்திய அளவில் பதனிடுதல்  தொழில்நுட்பத்துக்கான உயர்ரக இயந்திரங்களை நாங்க மட்டும்தான் வச்சிருக்கோம். அதை இங்கே இருக்கும் விவசாயிகள் பயன் படுத்திக்கிறாங்க. 

இன்னும் சில வருடங்களில் தண்ணீர், மண்வளம் குறையும். அப்போ உணவுக்கான தேவை அதிகமாகும். இப்போ நாம பதப்படுத்தி, சேமிச்சு  வைக்கலைன்னா ரொம்பக் கொடூரமான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உணவுக்காக அடுத்த தலைமுறை அவஸ்தைப்படக்  கூடாது என்பதுதான் எங்களோட நோக்கம்’’- ஆதங்கத்துடன் சொல்கிறார் கவிதா அபிராமி.         
                                            
உணவுத் தொடர்பான படிப்புகளில் சேர வேண்டுமா? 


ஆலோசனை சொல்கிறார் ‘சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ துறைத் தலைவர் திரிலோகசந்தர்... உணவு சார்ந்த படிப்புகளில் பல துறைகள் இருக்கின்றன. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராஃப்ட் படிப்பாகவும், பிளஸ் டூவில் தேறியவர்களுக்கு  டிப்ளமோ கோர்ஸாகவும் கிடைக்கிறது. பேக்கிங் ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பு. முதல் வருடம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வேண்டும். அடுத்த 6  மாதங்கள் இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங். வருடத்துக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். ‘ஃபுட் புரொடக்ஷன்’ என்ற ஒரு வருட படிப்புக்கு ரூ.25  ஆயிரம் செலவாகும். 

‘பி.ஜி. டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் ஃபுட் சர்வீசஸ்’ படித்தால் டயட்டீஷியனாகலாம். வருடத்துக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும்.  இந்தக் கட்டணங்கள் அரசு கேட்டரிங் கல்லூரிகளுக்கானவை. தனியார் கல்லூரிகளில் இதைப் போல இரு மடங்கு செலவாகும். சென்னை தரமணியில்  இருக்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’, திருச்சி துவாக்குடியில் அமைந்திருக்கும் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்  மேனேஜ்மென்ட்’ - இரண்டும் அரசு கேட்டரிங் கல்லூரிகள். இங்கே வருடத்தின் எல்லா நாட்களிலும் இலவச கேட்டரிங் பயிற்சியை வழங்குகிறார்கள். 

48 நாட்கள் பயிற்சி வகுப்பு. 18 முதல் 28 வயது வரை உள்ள ஆண், பெண்கள் பங்கேற்கலாம். எட்டாம் வகுப்பு தேறியிருந்தால் போதும். தஞ்சாவூரில்  இருக்கும் ‘பயிர் பதன தொழில் நுட்ப நிறுவனம்’, ‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்’, ‘கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்’ ஆகியவற்றில்  ‘பி.டெக்., ஃபுட் ப்ராசஸிங் இன்ஜினியரிங்’ கற்றுக் கொடுக்கப்படுகிறது. 4 வருடப் படிப்பு. எம்.டெக். படிப்பும் உண்டு. வேளாண் பல்கலையில்  முதுகலைப் படிப்பாக ‘அக்ரிகல்ச்சர் பிராசஸிங்’ வழங்கப்படுகிறது. இதற்கு வருடத்துக்கு ரூ.80 ஆயிரம் செலவாகும். சென்னை, பெசன்ட் நகர், ராஜாஜி  பவனில் உணவு பதப்படுத்துதலுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.depression the next generation?

The Director
Indian Institute of Crop Processing Technology
Ministry of Food Processing Industries, Government of India
Pudukkottai Road, Thanjavur - 613 005
Tamil Nadu
India

 
(: 91 4362 228155
Fax : 91 4362 227971
* director@iicpt.edu.in,

SOUTHERN REGION

CFNEU, A-1-A, Rajaji Bhawan, Besant Nagar, Chennai-600 090
4916004
CFNEU, Block No.1, Ground Floor Kendriya Sadan, Sultan bazar Hyderabad - 500195
4658085
CFNEU, Ground Floor, 'A' Wing, Kendriya Sadan 100 ft. Road Koramangala, Bangalore - 560034
5536270
CFNEU, No.1, Ramamurthy Road, Madurai-625002
530838
CFNEU, Andhra University Campus Waltair, Visakhapatnam - 530003
555835
CFNEU, "Peace Home", T.C.No. 26/930 Panavila Junction, Thiruvananthapuram - 695001
331239
CFNEU, 28/217-1/Tripunithura Road Manorama Junction, Cochin - 682036
311267
CFNEU, 48-12-1, Ringh Road, Gunadala Vijayawada - 520005
541662
CFNEU, 3rd Floor, Manipady Complex Old Kent Road, Pandeswar Mangalore - 575001
420692
CFNEU, No.30, Suryagandhinagar 11 Cross, Near Ambika Theatre Pondicherry - 605003
39007