இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

வியாழன், 6 மார்ச், 2014

பெட் பாட்டில் தயாரிப்பு PET BOTTLE MANUFACTURING PROJECT REPORT

கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக வந்திருப்பவைதான் பெட் பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களைவிடக் கூடுதல் பாதுகாப்பும், காற்றழுத்தத்தைத் தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவை இந்த பெட் பாட்டில்கள். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் அல்லது இந்தப் பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்பதால் பெட் பாட்டில் தயாரிக்கும் தொழிலுக்கு நிறைய வரவேற்பு!

மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்னச் சின்னப் பாட்டில்கள் விற்பனைக்கான வாய்ப்புகளாக உள்ளன. எந்தப் பகுதியிலும் இந்தத் தொழிலை தொடங்கலாம் என்பது இதிலிருக்கும் கூடுதல் சிறப்பு.

பெட் என்பது கிரானுவல் டைப்பில் வரும். இதை இன்ஜெக்ஷன் மோல்டிங் என்கிற முறையில் பிரீஃபார்ம் (Preform) என்கிற சிறிய பாட்டில்களாகத் தயாரிப்பார்கள். இது சிறிய காற்று அடைக்கப்பட்ட பலூன்போல இருக்கும். இதுதான் பெட் பாட்டில் தயாரிப்பின் மூலப்பொருள்.

பெட் பாட்டில் தயாரிக்க அந்த இயந்திரங்களில் பொருத்துவதற்குத் தேவையான அளவு அச்சுக்களை இணைக்க வேண்டும். இந்த இயந்திரத்துடன் காற்று அழுத்தம் உள்ள கம்ப்ரஸர் இணைப்பு வேண்டும். இந்த பிரீஃபார்ம் பாட்டில்களை இயந்திரத்தில் பொருத்தி அழுத்தமான வெப்பக் காற்றை உட்செலுத்தினால், சிறிய பாட்டில் போன்ற வடிவம் விரிவடைந்து, நாம் பொருத்தி உள்ள அச்சின் வடிவம் பெற்று பாட்டில்களாக மாறும். அவற்றை வெளியே எடுத்து குளிர்வித்து, அதற்கான மூடியை இணைத்து விற்பனைக்கு அனுப்பலாம்!

பொதுவாக, பெட் பாட்டிலுக்கான பிரீஃபார்ம் விற்பனை செய்பவர்களே பெட் பாட்டில் மூடியையும் தயாரித்துத் தருவார்கள். நாம் மூடியுடனோ அல்லது மூடியில்லாமலோ விற்பனை செய்யலாம்.

திட்ட அறிக்கை! (ரூ.)

பெட் பாட்டில் தயாரிக்கும் ஓர் இயந்திரத்தை வாங்க ரூ.5 லட்சம் ஆகும். நாம் இரண்டு இயந்திரங்கள் வாங்கலாம். ஒரு மணி நேரத்தில் 1,200 பாட்டில்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கான கம்ப்ரஸர் இயந்திரம் ரூ.6 லட்சம் ஆகும்.

கட்டடம்: வாடகை (அ) சொந்தமாக
இரண்டு இயந்திரங்கள் : 10 லட்சம்
கம்ப்ரஸர் இயந்திரம் : 6 லட்சம்
மின்சாரம் : 1 லட்சம்
நடைமுறை மூலதனம் : 6 லட்சம்
மொத்தம் : 23 லட்சம்

மானியம் (ரூ.)

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் 25 - 35% வரை மானியம் பெற முடியும். அல்லது நீட்ஸ் திட்டத்தில் 25% மானியத்துடன் துவங்கலாம்.

நமது மூலதனம் : 1.15 லட்சம்
மானியம் 25% : 5.75 லட்சம்
காலக்கடன் :16.10 லட்சம்

உற்பத்தி!

ஒரு மணி நேரத்துக்கு 1,000 பாட்டில்கள் வீதம் ஒரு ஷிப்ட்-க்கு 8,000 பாட்டில்கள் வரை செய்யலாம். நாம் இரண்டு இயந்திரங்களை வைத்திருப்பதால், 16 ஆயிரம் பாட்டில்கள் உற்பத்தி செய்ய முடியும். பிரீஃபார்ம் பாட்டில்கள் 1 கிலோ ரூ.140. ஒரு பாட்டில் 19-21 கிராம் வரை வரும். நாம் ஒரு லிட்டர் அச்சில் தயாரிப்பதாக எடுத்துக்கொண்டால், ஒரு கிலோ பிரீஃபார்ம் மூலம் 50 பாட்டில்கள் கிடைக்கும்.

நமது ஒருநாள் உற்பத்தியான 16 ஆயிரம் பாட்டிலுக்கு 320 கிலோ பிரீஃபார்ம் தேவை. ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் எனக் கணக்கிட்டால் 8 டன் மூலப்பொருள்

தேவைப்படும் (320ஙீ25=8,000 கிலோ).
ஒரு டன் மூலப்பொருளின் (1,000 கிலோ) விலை ரூ.1.40 லட்சம் எனில், 8 டன்னுக்கு ரூ.11.20 லட்சம் தேவை. நடைமுறை மூலதனம் குறைவாக இருப்பவர்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளலாம்.

செலவுகள்! (ரூ.)
மூலப்பொருள்: 11.20 லட்சம்
வேலையாட்கள்:
மேலாளர் : 1X10,000 = 10,000
பணியாளர்கள் : 5X7000 = 35,000
உதவியாளர்கள் : 2X5000 = 10,000
விற்பனையாளர் : 1X8,000 = 8,000
______________
மொத்தம் 63,000
______________
மின்சாரம் 50 ஹெச்.பி : 20,000

சாதாரணமாக ஒரு பிரீஃபார்ம் 20 கிராம் இருக்கும். ஒரு கிலோவுக்கு 50 எண்ணிக்கை என்று கொண்டால், ஒன்றின் விலை ரூ.2.80. ஒரு பாட்டில் விற்பனை விலை ரூ. 3.20.
சிறிய ஆர்டர்கள் எனில் ரூ.3.60 வரை விற்கலாம். சராசரி விலை ரூ.3.40 எனக் கொண்டால், தினசரி 16,000 பாட்டில்களும் மாதமொன்றுக்கு 4 லட்சம் பாட்டில்களும் உற்பத்தி செய்வோம். ஆர்டர்களைப் பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கலாம்!

மொத்த வருமானம்: 4,00,000ஙீ3.40 = 13,60,000 (அதிகமாகத் தயாரிக்கும்போது வருமானமும் அதிகரிக்கும்)
மொத்த செலவுகள்: (ரூ.)
வாடகை : 10,000
மூலப் பொருட்கள் : 11,20,000
மின்சாரம் : 20,000
தொழிலாளர்கள் : 63,000
கடன் வட்டி (12.5%) : 16,700
கடன் தவணை (72 மாதம்) : 22,300
இயந்திரப் பராமரிப்பு : 10,000
விற்பனை செலவு : 10,000
தேய்மானம் : 20,000
மேலாண்மை செலவு : 10,000
மொத்தம் : 13,02,000
மொத்த வருமானம் : 13,60,000
மொத்த செலவு : 13,02,000
லாபம் : 58,000
மூடியுடன் கேட்கும்போது மூடி விலை 25 பைசா முதல் 30 பைசா வரை கூடுதலாகச் செலவாகும்.

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)
Photo

பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பாது


imageபாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு சுயதொழில் பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை இங்கு சொல்கிறார்கள்.இத் தொழில் தொடங்க ஆவல் உள்ளவர்கள், திட்ட அறிக்கை, வங்கி கடன் போன்ற தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கி, துறையினரிடம் கேட்டு தொடங்கவும். நான் இங்கு கோடு தான் போட்டிருக்கிறேன். நீங்கள் ரோடு போட்டு கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்பணம் தரும் பாக்​கு​மட்டை!
இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.
வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பா. பிருந்தாதேவி பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.
இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனது கணவர் ஜி. பாண்டியராஜன் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்துவந்தது. என்ன தொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோது, அதில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு குறித்து விளம்பரம் வந்திருந்தது. அதை படித்ததும் எனக்குள் ஓர் ஆர்வம் பிறந்தது. இந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. விளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். திருச்சியில் சென்று பயிற்சி பெற்று, சிவகாசியில் காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களை வாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைத்தேன். மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெற்றேன். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம் கிடைத்தது. இந்த மானியம் கிடைத்ததால் நான் உற்சாகம் அடைந்தேன். இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. மூன்று பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்களுடன் நானும் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தேன்.
பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?
இதில் பல ரகங்கள் உள்ளன. நான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.
இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?
சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன். அரசு இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?
சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்தது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.
மேலும், தற்போது கோயில்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.
இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ? வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன். பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். என்னிடம் பயிற்சி பெற்று பலர், திண்டுக்கல், நாகர்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது. உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?
பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும். தற்போது, நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன். எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு
பாக்கு மட்டையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு, அதை நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. இயந்திரம் மின்சார உதவியுடன் வெப்பமாகி பாக்கு மட்டை தட்டாக உருவாகிறது. வட்டம், சதுரம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் அச்சு முறையில் வடிவமைக்கப்படுகிறது. மிகவும் குறுகிய நேரத்தில் சாதாரணமாக 100 தட்டு வரை தயாரிக்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சதுர வடிவ தட்டுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. எனவே, உற்பத்தியாளர்கள் வடிவத்தை மாற்றி வட்ட வடிவத்திலும், அறுங்கோண வடிவத்திலும் மாற்றி விற்பனை செய்கிறோம். சீஸன் சமயத்தில் நாளொன்றுக்கு 3000 தட்டு வரை உற்பத்தி செய்யலாம். பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி உணவுத் தட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதிலும் பாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் பாக்கு தட்டுகளுக்கு மவுசு ஏற்பட்டது.
ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைத்ததால், பாக்கு தட்டு தயாரிக்கும் குடிசைத் தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாக்கு தட்டு தயாரிக்கும் சிறு தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. 400க்கும் மேற்பட்டோர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
தற்போது பாக்கு தட்டுகள் மட்டுமின்றி, பாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள், டம்ளர்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் புதிய முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பாத்திரங்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்ளூரில் உலா வந்த பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வளர்ந்த நாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிந்து வருவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாக்கு மட்டை தட்டுகளின் செய்முறை
பாக்குமட்டை தட்டுகள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பாக்கு மரங்களின் மட்டைகளில் இருந்து தயரிக்கப்படுகிறது இவை முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும் பாக்குமரங்களில் இருந்து மட்டைகள் மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவை சிறந்த கண்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு சேமித்து பின் நன்னீரில் நனைத்து ஊறவைத்து அதனை முற்றிலும் மனிதர்களால் இயக்கப்படும் ஒரு எந்திரத்தில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும் பின் சுடச்செயதும் நமக்கு வேண்டிய வடிவத்தை தரும் வகையில் உருவாக்கபப்டுகிறது இதில் எந்தொரு இடத்திலும் செயற்கையான வண்ணங்களோ அல்லது மனமோ வேறு எந்த ஒரு ரசயனமோ இடப்படுவது இல்லை முற்றிலும் பணம் கொழிக்கும் பாக்குமட்டை தட்டு.
குறைந்த முதலீட்டில் சம்பாதிக்க வாய்ப்பு சேலம்: சேலம் எஸ்.பி.எஸ்., இன்ஜினியரிங் நிறுவனத்தினரின் உதவியுடன், பணம் கொழிக்கும் பாக்கு மட்டை தட்டு தொழில் செய்து, குறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இயற்கையை அழித்து வரும் பலவித பொருட்களை, நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக், பாலித்தின் போன்ற பொருட்களால் இயற்கை மட்டுமின்றி, மனிதர்களின் உடல்நலமும் சீர்கேடாகிறது. அதற்கு மாற்றாக பாக்கு மட்டைத் தட்டுகளின் பயன்பாடும், அதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பாக்கு மட்டை தட்டுகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து, அவற்றை சந்தைப்படுத்தி வரும் சேலத்தின் மிகப் பிரபலமான எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:எமது நிறுவனம் 1997 லிருந்து இந்த பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது. நாங்கள் முதன் முதலில் பெடல் டைப் மெசினை செய்து பார்த்தோம். பிறகு ஹேண்டில் டைப் மெசினை அறிமுகம் செய்தோம். பலர் கேட்டதால் ஆட்டோ மெசினை சேலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம். தற்போது தானாக இயங்கக்கூடிய ஆட்டோமெடிக் இயந்திரம் அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முறையாக நாங்கள் வடிவமைத்து சந்தைப்படுத்தியுள்ளோம். இந்த இயந்திரத்தில் பாக்கு மட்டையை வைத்து பட்டனை அழுத்தினால், தானாகவே இயங்கி தட்டு வடிவம் ஆனவுடன் தானாகவே இயங்கி தட்டுகள் வெளிவந்து விடும். மற்ற இயந்திரத்தை விட தட்டுகளை அழகாகவும், நேர்த்தியாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்யலாம். ஏற்றுமதி தரம் வாய்ந்த தட்டுகளாகவும், விருப்பத்திற்கேற்றவாறு லோகோ, போன், டிசைன் போன்றவற்றை எம்போசில் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஹீட்டர்களுக்கு டிஜிட்டல் டெம்ப்ரேச்சர் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் எவ்வளவு வெப்பம் வைக்கலாம் என்று உறுதி செய்யலாம். குறைந்த மின் செலவே போதுமானது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரசாதம். எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் ஒர்க்ஸ், சேலம்-8, மொபைல்97906 98985, 97912 03708 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இயற்கையான ஒன்றே ஆகும்.
பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!