இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

புதன், 19 பிப்ரவரி, 2014

மாற்று வேலை வாய்ப்புகள்

மாற்று வேலை வாய்ப்புகள்  



பத்தாண்டுகளுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இருந்த வேலை தடங்கள் (Career Options)  மிக மிக குறைவு.  இதற்கான காரணங்களில்  ஒன்று  மாற்று  வேலைவாய்ப்புகள் இல்லாது இருந்தது. பொருளாதாரம்   முதிர்ச்சி  அடையாமல்  இருந்ததும், வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாக இருந்ததும் மற்ற காரணங்கள். இந்த  கட்டுரையின்  நோக்கம் மாற்று வேலை வாய்ப்புகளை பள்ளி முடித்த இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.மருத்துவமும்,பொறியியலும் மாணவர்களின் முக்கிய ஆர்வமாக இருந்த போதிலும் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட பிறகு இருபது ஆண்டுகளை கடந்த நிலையில் பல்வேறு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
வேலை தடங்களை தேர்ந்து எடுப்பது என்பது சமுதாயத்தால் பெருமையாகவும், கௌரவத்துடனும் மதிப்பிடபடுகிற ஒரு துறையில் வேலைக்கு சேர்வது என்பது நிச்சயமாக அல்ல. ஒரு இளைஞரின் ஆர்வமும்,எண்ணப்பாடும் (passion) எந்த துறையை சார்ந்து  உள்ளதோ அந்த துறையை தேர்ந்தெடுத்து வேலை செய்வதே அவருக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும். மேற்குலகில் இந்த விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவர்கள் எந்த துறையில் ஆர்வப்படுகிறார்கள் என்று கண்டறிய கட்டமைப்பு வலுவாக இருந்த போதிலும் அவர்கள் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்க ஊக்கப்படுத்துகிறார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் பல்வேறு துறை வேலைகளை முயற்சி செய்து தங்களுக்கு உகந்த துறையை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட அணுகுமுறை இல்லாமல் அனைவரும் ஏதோவொரு தொழிற் படிப்பு படித்து, அதிலேயே வேலை செய்து காலம் தள்ள நிர்ப்பந்திக்கபடுகிறார்கள். இந்த நிலை முற்றிலுமாக மாறவேண்டும். சில மாற்று வேலை வாய்ப்புகளுக்கான வழிகளை கீழே காண்போம்.

தொழில் முனைவோர்
வர்த்தக தொழில் முனைவோர் என்பவர்கள் புதிய தொழிலை தொடங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் பணி செய்வோர் ஆகும். மக்களின் தேவையை கண்டறிந்து அவற்றை நிறைவு செய்ய சீரிய வழிகளையும், அதற்கு வேண்டிய பணியாளர்களையும், பொருட்களையும் ஒருங்கிணைத்து தொழிலை கட்டுவது இவர்களின் வேலை. பொருளாதாரம் திறந்து விடப்பட்ட காரணத்தால் கணக்கற்ற வாய்ப்புகள்   தொழில் முனைவோருக்கு ஏற்பட்டுள்ளது. நேர்மை, சிறந்த வாடிக்கையாளர் சேவை, கட்டுப்பாடு, கட்டுபடியாகும் விலையை கொடுக்க கூடிய படைப்பாற்றல் போன்றவை  இவர்களுக்கு வேண்டிய முக்கிய தகுதிகள் ஆகும்.

சமூக தொழில் முனைவோர் (Social Entrepreneur)
சமூக தொழில் முனைவோர் என்போர் லாப நோக்கத்துடன் வர்த்தக ரீதியாக செயல்படாமல் சமுதாயத்தின் பிரச்சினைகளை களைய தொழில் திறன்களை பயன்படுத்துவோர் ஆகும். இவர்களின் குறிக்கோள் சமூக ஆதாயம் அடைவதாகும், தனி மனித ஆதாயம் அன்று. எழுபது சதவிகித இந்திய மக்கள் கிராமங்களில் வாழும் நிலையில், விவசாயம், மீன் பிடித்தல், நெசவு போன்ற  துறைகளில்  பணிபுரிவோருக்கிடையே இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சியால் உண்டான வளமை பங்கீடு சரியாய் நடைபெறவில்லை. எனவே சமூக தொழில் முனைவோருக்கு தமது கணிபொறி, வர்த்தகம், சந்தை குறித்த நிபுணத்துவத்தை பயன்படுத்த ஏராள வாய்ப்புகள் இத்துறையில் உள்ளது.

விவசாயம் சார்ந்த வர்த்தகம் ( Agro Based Industries)
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. விவசாய விளைபொருள் வளர்ச்சி உலகத்தின் அடிப்படை முன்னுரிமை ஆக உள்ளதால் இத்துறையில் வாய்ப்புகள் ஏராளம். விவசாய உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, சில்லறை வணிகம் போன்ற உப துறைகள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏதேனும் ஒரு விடயத்தில் திறமையை வளர்த்து கொண்டால் நல்ல வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்கும்.

செவிலியர்
உலகமெங்கும் செவிலியருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.நல்ல மொழித்திறனும், கருணை மனப்பான்மையும், சக மனிதர்களுக்கு உதவும் எண்ணமும் கொண்டவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம். இந்தியாவின் செவிலியர் மருத்துவர் விகிதம் வளர்ந்த நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளது.( வளர்ந்த நாடுகள் 4: , இந்திய 1.2 : 1) எனவே இத்துறையில் கணக்கற்ற வாய்ப்புகள் உள்ளன.

மருந்தக பணியாளர்
செவிலியர் போன்றே மருந்தாக பணியாளர்களுக்கும் பல இடங்களில் பற்றாகுறை நிலவுகிறது. மருந்தகங்களில் பணியாற்ற தேவையான நிபுணர்கள் அதிகம் தேவைபடுகின்றனர். இதற்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகளை மாணவர்கள் கற்கலாம். சரியான தேர்ச்சி பெற்றால் இத்துறையிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது.

மருத்துவ உபகரண பணியாளர்கள் (Medical Equipment Technicians)
மருத்துவமனைகள் ஏராளமான பணத்தை மருத்துவ உபகரணங்களை வாங்க செலவிடுகிறார்கள். இவற்றை பராமரிக்கவும், பழுதானால் பழுது பார்க்கவும் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மருத்துவமனைகளின்றி ஏராளமான மருத்துவ ஆய்வு கூடங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பணி புரியவும் ஏராளமான பணியாளர்கள் தேவை உள்ளது. இவற்றை தேர்ந்தேடுக்கும் முன்பு முன்னாள்,இந்நாள் மாணவர்களிடம் விசாரித்துவிடுவது சிறந்தது.

அனுப்புவீர் குறுஞ்செய்தி இலவசமாக…

அனுப்புவீர் குறுஞ்செய்தி இலவசமாக…


தற்கால  இளைஞர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது குறுஞ்செய்தி எனப்படும்  SMS-Short Messaging Service. இளைஞர்கள் மட்டுமல்லாமல் தொழில் முனைவோர், விற்பனைத்திட்டம் கொண்டுள்ளோர் மற்றும் பலருக்கு  குறுஞ்செய்தியின் உதவி மிகப்பெரும் தேவையாகவே உள்ளது. இத்தகைய குறுஞ்செய்தியை இணைய தளம் வாயிலாக அனுப்பும் முறை தற்பொழுது பிரபலமாகி வருகிறது.
சமீபத்திய கணக்கெடுப்பில் இந்திய மக்கள் தொகை சுமார் 1.22 நிகற்ப்புதம்(billion), இதில் 929 பத்து நூறாயிரம்(million)  சதவிகிதத்தினர் அலைபேசி  வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆகவே ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள குறுஞ்செய்தியின் பங்கு மிகப்பெருமளவில் கண்டிப்பாக  இருக்கும்.
இத்தகைய குறுஞ்செய்தியை அனுப்புவதற்கு பல இணையதளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு way2sms, fullonsms, site2sms, youmint, ultoo, என்று பல்வேறு வகையான இணையத்தளங்கள் இருக்கின்றன.
இதில் அப்படி என்ன சிறப்பம்சம் உள்ளது?
  • முக்கிய சிறப்பம்சம் என்று சொல்லப்போனால் இணையதளத்தின் மூலம் அனுப்பும் குறுஞ்செய்திக்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆகையால் இணையதளம் அதிகம் உபயோகிப்பவர்கள் கட்டண  குறைப்பானை (sms rate cutter)  பயன்படுத்துவது சற்று குறைந்துள்ளது.
அலைபேசி நிறுவனங்களின் கட்டண விவரங்கள்:
ஏர்செல்-35 ரூபாய் செலுத்தினால்  உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அதிலும் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திக்கு மேல் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் கால அவகாசம் ஒரு மாதம் ஆகும். இதே போலவே மற்ற நிறுவனங்களும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
டாடா டோகோமோ 38 ரூபாய்க்கு 45 நாள் கால அவகாசம் தருகிறது.
வோடபோன் 21 ரூபாய்க்கு 100 உள்ளூர் மற்றும் வெளியூர் குறுஞ்செய்திகள் அனுப்பலாம். 15 நாள் கால அவகாசம் தருகிறார்கள்.
இவ்வளவு செலவு செய்து அனுப்புவதை விட இணையதளம் வாயிலாக எந்தவித கட்டணமுமின்றி அனுப்பத்தானே எல்லோரும் விரும்புவர்.
  • மற்றொரு முக்கிய காரணமாக விளங்குவது இதன் எண்ணிக்கை இல்லா குறுஞ்செய்தி அனுப்பும் வசதி. இவ்வசதி மூலம் நாம் பல பேருக்கு குறுஞ்செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். விற்பனைத்திட்டம் கொண்டுள்ளோருக்கு இதன் தேவை அதிகம் இருக்கும்.
  • Smsintegra.com என்ற இணையத்தளத்தின் மூலமாக நாம் ஒரு சொடுக்கில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்ப முடியும். மற்ற இணையதளத்தில் Group Message  எனப்படும் வசதி கிடையாது. ஆனால் இவ்வசதியை பெறுவதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் இவ்வசதி மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர்.
இணைய தளக் குறுஞ்செய்தியை  கணினி வைத்திருப்பவர்கள் மட்டும் தான் அனுப்ப முடியும் என்பதில்லை, தற்போதைய புதுரக கைபேசியின் வாயிலாகவும் நாம் இவ்வசதியை பெறமுடியும்.
இதற்கென பல Application கள் உள்ளன. உதாரணத்திற்கு (Free sms India) என்ற android app. வழியாக குறுஞ்செய்தியை அனுப்பலாம்.
இத்தகைய வசதிகளை நாம் அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுவோம்.