இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

செவ்வாய், 21 மே, 2013



அஸ்ஸலாமு அலைக்கும், அன்பார்ந்த உறவினர்களே, நண்பர்களேஇன்ஷாஅல்லா 22/05/2013இன்று தாயகம் செல்கிறேன் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.அனைவரும் துவா செய்யவும்.

ஹாஜா


சனி, 18 மே, 2013

சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு


சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு

 




அயராத உழைப்பு அசாத்திய வெற்றி




சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கே அதிகம் உள்ள நிலையில், இந்த துறையில் பெண்களால் பிரகாசிக்க முடியாத அளவிற்கு பல தடைகள் ஏற்படுகின்றன. ஆனால், அதனையும் தாண்டி திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் தொடங்கி, பல பெண்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் இன்பவள்ளி. 55 வயதான இன்பவள்ளி என்ற பெண் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக சுய தொழில் ஒன்றினை தொடங்கினார். ஆரம்பத்தில் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வந்தார். பின்னர் பல வகை திண்பண்டங்களை தயாரித்து தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினரிடமே ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் இன்பவள்ளி.
வங்கிக் கடன் போன்ற வசதிகள் கிடைக்காத நிலையில் வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இன்பவள்ளியின் தொழில், இன்று 15பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதுதான் அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
எந்த தொழிலை மேற்கொண்டாலும் முயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை, தேடல் ஆகியவை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நடமாடும் உதாரணம் இந்த இன்பவள்ளி.

வெள்ளி, 17 மே, 2013

As you know, we're doing mini incubator (less than 100 chicken eggs) and industrial incubator (from 24 to 33792 chicken eggs),as well as some mini plucker and industry pluckers.and Food machine etc...


Meanwhile, we'd develop a lot of new items. such as NEW JN8-48 with 132 quail eggs and 66 pigeon eggs tray.12v mini plucker and etc...
     
You're welcome to visit our blogger.
சிறிய இடத்தில் தோட்டம் அமைப்பதற்கான சில டிப்ஸ்... Updated: Friday, May 17, 
 
வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக விளங்குவது தான் தோட்டம். பெரிய வீட்டில் பார்த்தால் தோட்டத்திற்கென்று ஒரு பெரிய இடம் ஒதுக்கி, அதை பராமரிக்க தனியாக வேலையாட்களும் இருப்பர். அப்படியானால் சின்னதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு தோட்டம் என்பது வெறும் கனவு தானா? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. தோட்டம் என்றால் பெரிய இடத்தில் தான் போட முடியும் என்றில்லை. கிடைத்த சின்ன இடத்தில் கூட தோட்டத்தை உருவாக்கலாம். சிறிய இடத்தில் அமைத்த சின்ன தோட்டம் கூட பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் இட வசதிக்கேற்ப தங்களின் தோட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அது ஜன்னலருகே இருக்கும் இடமாகட்டும் அல்லது வீட்டின் உள்ள முற்றமாகட்டும். பெரிய இடத்தில் தோட்டம் அமைப்பது என்பது ஒரு வகையில் ஒரு புதிர் தான். நடக்கும் தவறு எதனால் ஏற்படுகிறது என்ற குழப்பம் நிலவும். ஆனால் சிறிய இடத்தில் போடும் தோட்டத்தில் எந்த வகையான தவறும் நடக்க வாய்ப்பில்லை. தவறாக நட்ட செடி கூட, சிறு தோட்டத்தில் பார்க்க அழகாகத் தான் தெரியும். tips gardening small spaces அதற்கு முதலில் யோசிக்க வேண்டியது கிடைத்த சிறு இடத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தான். மிகவும் சின்ன இடம் என்பதால் ஒரு மேஜையும், கொஞ்சம் நாற்காலிகளும் போடுமளவுக்குத் தான் இடம் இருக்கும். அப்படி தேவையில்லாமல் இருக்கும் சிறு இடங்களை, வீட்டினுள் இருந்து பார்க்கும் போது ஒரு ஓவியத்தைப் போல் அழகாக தெரிந்தால் எப்படி இருக்கும்? பெரும்பாலும் சிறு தோட்டம் அமைக்கும் போது சவாலான விஷயமாக இருப்பது, தோட்ட எல்லைகளின் நெருக்கம். இது பெரும்பாலும் அசிங்கமாகவே அமையும். இந்த குறையையே நிறையாக மாற்றலாம் தெரியுமா? எப்படியெனில், இந்த எல்லைகளை சுற்றி கொடிகளை படர விடலாம். தோட்டத்தில் உள்ள செடிகளின் பெரிய இலைகளுக்கு முன் இருக்கும், இந்த கொடிகளின் சிறு இலைகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும். இல்லையெனில், தோட்டத்தில் உள்ள வேலிக்கு கருப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். இது கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வேண்டுமெனில், கிரீன் வால் என்ற வேலி வகையையும் அமைக்கலாம். இது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் செடிகள் நன்கு வளர உதவி புரியும். சரி இப்போது இணைப்பைப் பற்றி யோசிக்கலாமா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மஞ்சள் நிற இலைகளைக் கொண்ட மரங்களை வளர்த்துள்ளாரா? அப்படியானால் நீங்களும் மஞ்சள் நிற இலைகளை கொண்ட செடிகளை தோட்டத்தில் வளர்த்து வரலாம். அப்படிச் செய்தால், வீட்டிற்குள் இருந்து பார்க்கும் போது உங்கள் சிறிய தோட்டம் கூட பெரியதாக தெரியும். தோட்டம் அமைக்கும் திட்டம் எளிமையாக இருக்க வேண்டும். இந்த எளிமை குறைய குறைய, சிக்கல்கள் அதிகமாகும். அழகும் குறைந்து கொண்டே போகும். தோட்டத்துக்கு தேவையான பொருட்களையும், செடிகளையும் குறைந்த அளவிலேயே தேர்ந்தேடுக்க வேண்டும். வீட்டையும், தோட்டத்தையும் இணைக்க ஒரு பாதையை உருவாக்கி, அந்த பாதையில் வீட்டில் உள்ள தரையை போலவே மரப்பாதை, சிமெண்ட் அல்லது டைல்ஸ் போட்டு அழகை கூட்டலாம். இப்படி செய்தால் இந்த இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும், மேலும் தோட்டத்து எல்லைகள் தெளிவில்லாமலும் போய்விடும். வேண்டுமானால் இந்த இடத்தை பெரிய பொருட்களால் நிரப்பி, மேலும் அழகைச் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, ஒரு பெரிய சிலையையோ அல்லது மேஜை நாற்காலிகளையோ போடலாம். இது இன்னும் மெருகேற்றும் வகையில் அமையும். இருப்பினும், செடிகளை கவனமாக தேர்ந்தேடுங்கள். ஏனெனில் இருப்பதிலேயே சின்ன மரம் தான் வெகு விரைவில் 6 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலத்திலும் வளரும். அதனால் பராமரிப்பது கடினமாகும். எனவே செடிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை.

ஞாயிறு, 12 மே, 2013


சுயதொழில் பயிற்சிகள்

ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் முற்றிலும் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.
இந்நிறுவனத்தில் கற்பிக்கப்படாத பயிற்சிகளே இல்லை எனலாம். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முதல் ஆடை வடிவமைப்பு, மோட்டர் ரீவைண்டிங், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரை 100 வகைப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: http://www.rudsetitraining.org/pages/training.html
ரூட்செட் நிறுவனம்,விமான நிலைய சாலை, காவல்நிலையம் அருகே, பெருங்குடி, மதுரை -12,
தொலைபேசி: 0452 269069, 9486369825


சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி

தொழில் முனைவதன் மேலாண்மைபற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (institute for entrepreneurship and career development). 

''சுய தொழில் தொடங்க முடிவு செய்பவர்கள்இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில்,சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். அடுத்துஅந்தத் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள்அதை மேலாண்மை செய்வதில் தான் திணறிநடைமுறைப்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்துதெளிவு பெற்ற பின்னரே,திட்டமிட்ட தொழிலில் இறங்க வேண்டும். இவ்வாறு சிறப்பான திட்டமிடுதலுடன் முழுத் தெளிவு உள்ள ஒருவருக்கு வங்கிக் கடனுதவி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
இன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவுஅவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள்.'முதலீடு வேண்டுமோதன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ?’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்துநமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போலபள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாகநமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்துமற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள்தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.
தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல்படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம்தன்னம்பிக்கை,நேர்மறை எண்ணம்எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவுரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்!'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்!
இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால்... அப்புறம்என்ன... அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க!
புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்!
தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்
வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்
திட்ட அறிக்கை
தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரித்தல்
சந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை தயாரித்தல்
நேரடி கணினி வழி குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பதிவுகள்
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் குறித்த தகவல்கள்
திறன் மேம்பாட்டுப் பயிற்சி
உங்களுக்காக இவை... 
நாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால்புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னைகோவைசத்தியமங்கலம்திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்கு www.nstedb.com என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!
அரசு கடனுதவித் திட்டங்கள் 
மத்திய அரசு 
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!

மாநில அரசு 
வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு லட்சம் வரையிலும்சேவை சார்ந்த தொழில்களுக்கு லட்சம் வரையிலும்வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC),தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும்இது பற்றி தகவல் அறியவிண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!



பிரியாணி மிக்ஸ்.. பலே லாபம்


பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடி கள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் கூறியதாவது:

கணவர் மற்றும் மகன் ஷார்ஜாவில் பணிபுரிகின்றனர். இங்கு பெற்றோருடன் வசிக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கும். அவற்றை சமைக்க தேவையான பொருட்கள் அங்கு கிடைக்காது. தேடிப்பிடித்து வாங்கினாலும் விலை அதிகம். எளிய முறையில் அவர்கள் சமைக்க ரெடிமேடு சாம்பார், ரசப் பொடி, பாயசம் மிக்ஸ், வெஜிடேரியன், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து கொடுத்து வந்தேன். கணவர், மகனின் வருமானத்தை சார்ந்து இருக்காமல் சுயமாய் சம்பாதிக்க, தொழில் துவங்க எண்ணினேன். தெரிந்ததை தொழிலாக செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்பதால் முதலில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து விற்றேன்.

பேச்லர்கள், குடும்ப பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாயசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகுத்தூள் தயாரித்து விற்றேன். ஒவ்வொரு முறையும் ருசி, தரம் பரிசோதித்த பின்னரே விற்க அனுப்புகிறேன். சுவை, ஆரோக்கியம், குறைந்த லாபம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டுள்ளதால் நிரந்தர விற்பனை உள்ளது. பெண்கள் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக் கும் தொடரும். தொழிலும் லாபகரமாக இருக்கும்.

முதலீடு: அரிசி மற்றும் தானிய மசாலா பொருட்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்ய கிளீனிங் மெஷின் ரூ.25 ஆயிரம், மசாலா பொருட்களை வறுக்க பிரையிங் மெஷின் ரூ.75 ஆயிரம். அவற்றை பொடியாக்க கிரைண்டிங் மெஷின் ரூ.20 ஆயிரம், அவற்றை பாக்கெட் போட பேக்கிங் மெஷின் ரூ.1 லட்சம் என ரூ.2.2 லட்சம் தேவை.

கட்டமைப்பு : மெஷின்கள் அமைக்க 30க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.
மூலப்பொருட்கள் : சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப்பொருள்கள். பலசரக்கு பொருள் கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு: மாதம் தலா அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் வெஜிடேரியன் மிக்ஸ், 2 ஆயிரம் சிக்கன், மட்டன் பிரியாணி பாக்கெட், ஆயிரம் பாயசம் மிக்ஸ் பாக்கெட்கள் மற்றும் தலா 500 கிலோ மஞ்சள் தூள், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, 300 கிலோ மிளகாய் தூள் பாக்கெட்கள் தயாரிக்கலாம். இதற்கு மூலப்பொருட்கள் செலவு,6 வேலையாட்கள் சம்பளம், மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.5.7 லட்சம் தேவை.

மாதம் ரூ.85 ஆயிரம் லாபம்

மாதம் உற்பத்தியாகும் ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பொருளுக்கு, உற்பத்தியாளருக்கான லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.57 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்கள் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலம், டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழியாக சில்லரை கடைகளுக்கு சென்றடைகிறது. 3 பேருக்கும் தலா 15 சதவீதம் லாபம் வரும் வகையில் கொடுக்கப்படுவதால் மார்க்கெட்டிங் எளிதாகிறது.

10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்கலாம்

சமையல் சுத்தமாய் தெரியாதவர்கள்கூட பேச்லர் பிரியாணி மிக்ஸ் மூலம் எளிதில் 10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ சிக்கனோ, மட்டனோ சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இவை 10 நிமிடத்தில் முடிந்துவிடும். பின்னர் நெய் ஊற்றி கிளறினால் சுவையான பிரியாணி ரெடி. சிக்கன், மட்டனுக்கு பதில் காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ்) பயன்படுத்தினால் வெஜிடேரியன் பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பது எப்படி?

வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ், பாயசம், சாம்பார் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவை தயாரிக்கலாம். ஒவ்வொரு பொருள் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களின் அளவுகள், ஒவ்வொருவரின் கைப்பக்குவத்துக்கும், தனி முத்திரைக்கும் ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளலாம்.
வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ்: மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி வெஜிடபிள் ஆயில், சீரக சம்பா அரிசியுடன் கலந்து அரை கிலோ வீதம் பாக்கெட் போட வேண்டும். 6 மாதம் வரை கெடாது. சிக்கன், மட்டன் பிரியாணி மிக்சுக்கும் இதே பொருட்கள், இதே முறை.

பாயசம் மிக்ஸ் : ஜவ்வரிசி, பால்பவுடர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா பருப்பு, ஏலக்காய்  ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து 200 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். 6 மாதம் வரை கெடாது.

மட்டன் மசாலா : மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். சிக்கன் மசாலாவுக்கு இதே பொருட்களை கூட்டிக் குறைத்து சேர்த்து தயாரிக்க வேண்டும். 

சாம்பார் பொடி: மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம்.


பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி


சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம். 

5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். தினசரி சம்பளமாக நாங்கள் தலா ரூ.100 எடுத்து கொள்கிறோம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது. 

பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளிலும் எங்கள் பேப்பர் தட்டுகளை விற்று வருகிறோம். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு ஏற்ற தொழில் இது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்து விற்கலாம். நல்ல வருமானமும் கிடைக்கும். 



கட்டமைப்பு: இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை,  தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3 ஆயிரம்). முதலீடு: பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்),  பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.

உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர் நைஸ் (டன் ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர் திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங் கவர்,  லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன. 

உற்பத்தி செலவு: வாடகை, மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள், கூலி உள்பட பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ.1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30, சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட் தயாரிக்க ஆகும் செலவு ரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம் தேவை.

வருவாய்: ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு:  கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும். 



தயாரிப்பது எப்படி? 


பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை.  தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம். 

கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும். 
பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும். 

நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.

 பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.


பினாயில் தயாரிப்பு


வீடுகள், தொழிற்சாலைகள் என பினாயில் பயன்பாடு இல்லாத இடமே கிடையாது. இவற்றை தரமான முறையில் தயாரித்து விற்றால் நிரந்தர  வாடிக்கையாளர்களை பெற முடியும். அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் உடுமலை போடிபட்டியை சேர்ந்த இந்திராணி. அவர் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன புதிதில் கணவரின் வருமானம் போதவில்லை.

பினாயில் தயாரிப்பது குறித்து, இங்குள்ள ஆசிரியர் ஒருவர், பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்தார். அதைக் கற்றுக்கொண்டு, பினாயில் தயாரிப்பை தொழிலாக செய்ய தொடங்கினேன். அப்போது ரூ.100 செலவில் பினாயில் லிக்விட், சென்ட் வாங்கி வீட்டில் உள்ள பாத்திரங்களை கொண்டு பினாயில் தயாரித்தேன். காலி பாட்டில்களில் ஊற்றி,  கடைகளுக்கு விற்றேன். அன்றாட செலவுக்கு பணம்  கிடைத்தது.

பின்னர், தொழிலை சிறிது சிறிதாக விரிவு படுத்தினேன். கணவர் உதவிகரமாக இருந்தார். அவர் பினாயில் பாட்டில் களை சைக்கிளில் எடுத்து சென்று உடுமலையில் உள்ள வீடுகள், மருத்துவமனை கள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு விற்றார். பினாயில் லிக்விட் 3 தரத்தில் உள்ளது. முதல் தரத்தை கொண்டு பினாயில் தயாரித்தால் பல மாதங்களுக்கு நீர்த்துப்போகாமலும், காலாவதியாகாமலும் இருக்கும். முதல் தரத்தில் தயாரித்ததால் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.

8 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள நேசக்கரங்கள் அமைப்பு மூலம் ஜான்சிராணி மகளிர் சுய உதவி குழு உருவாக்கி, நிதியுதவி பெற்று, உற்பத்தி அளவை அதிகரித்தேன். மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கோழிப்பண்ணைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்கிறேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் சென்ட்களை பயன்படுத்தி, பிரத்யேகமாக பினாயில் தயாரித்து கொடுத்ததால், மேலும் மேலும் வாடிக்கையாளர்களும் கிடைத்தனர். வாடிக்கையாளர்களை பெறு வதற்காக மேற்கொள்ளும் உற்பத்தி தரத்தை, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதுதான் தொழி லுக்கு நிரந்தர வெற்றியை கொடுக்கும்.

புதிய தொழில் முனைவோர் துவக்கத்தில் குறைந்த அளவில் உற்பத்தி செய்து விற்று, படிப்படியாக உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். பெண்கள் வீட்டிலேயே பினாயில் தயாரிக்கலாம். இதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் பின்விளைவுகளை ஏற்படுத்தாது. குடும்பத்தினர் உதவியுடன்  வீடுகள், மருத்துவமனைகள், விடுதிகள், ஓட்டல்களுக்கு நேரடியாக சப்ளை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

முதலீடு

20 லிட்டர் வாளி 2 (ரூ.400), கப் 2 (ரூ.60), புனல் 2 (ரூ.30). முதலீட்டு செலவுக்கு ரூ.500 போதும். தயாரிப்பு பொருட்கள் : பினாயில் பேஸ்ட், சென்ட் (மல்லிகை, தாமரை, தாழம்பூ, மரிக்கொழுந்து உள்ளிட்ட வெவ்வேறு மணங்களில் உள்ளன) கெமிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பினாயில் தயாரிக்க தனி இடம் தேவை யில்லை.  மூலப் பொருட் களையும், தயாரித்த பினாயிலையும் வைக்க வீட்டில்  உள்ள ஒரு அலமாரி போது மானது.  பினாயில் தயாரிக்கும் போதும். வெளி யேறும் நெடி அதிகமாக இருக் கும் என்பதால், காற்றோட்டமுள்ள வராண்டாவில் தயாரிப்பது நல்லது. நெடி காற்றில் பறந்துவிடும்.

எப்படி தயாரிப்பது?

பினாயில் லிக்விட் ஒரு லிட்டர், சென்ட் 150 மிலி, நல்ல தண்ணீர் 30 லிட்டர். 20 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 வாளியை அருகருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மற்றொன்று காலியாக இருக்க வேண்டும். ஒரு கப் எடுத்துக்  கொண்டு, அதில் 30 முதல் 35 மிலி பினாயில் லிக்விட்டை ஊற்ற வேண்டும். மற்றொரு கப்பில் தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து நன்றாக ஆற்ற வேண்டும்.

இந்த கலவையை வாளியில் ஊற்ற வேண்டும். இப்படியே செய்து பினாயில் கலவையை வாளியில் ஊற்றி வர வேண்டும். வாளியில் ஊற்றிய பிறகும் நன்றாக கலக்கி விட வேண்டும். அப்போதுதான் லிக்விடும், தண்ணீரும் கலக்கும். இடையில் மக்கில் 15 மிலி சென்ட் எடுத்து அதில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி வாளியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மில்லி சென்ட், 30 லிட்டர் தண்ணீர் முழுவதையும் கலக்க வேண்டும்.

பிறகு தயாரான  பினாயிலை கப்பில் எடுத்து புனல் வழியாக காலி பாட்டிலில் ஊற்ற வேண்டும். பினாயில் லிக்விட், தண்ணீரோடு முழுமையாக கலக்காவிட்டால் திரிந்து விடும். திரியாமல் நன்று கலப்பதற்காக தான் மாறி, மாறி ஆற்ற வேண்டியது முக்கியம்.

உற்பத்தி செலவு 

ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மிலி சென்ட் ஆகியவற்றுடன் 30 லிட்டர் தண்ணீர் கலந்தால் 31 லிட்டர் பினாயில் கிடைக்கும். இதை தயாரிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு நாளில் 5 லிட்டர் பினாயில் லிக்விட், 750 மில்லி சென்ட் மூலம் 155 லிட்டர் பினாயில் வீதம், மாதத்தில் 25 நாளில் 3875 லிட்டர் பினாயில் தயாரிக்கலாம்.

ஒரு லிட்டர் பினாயில் லிக்விட் ரூ.200, சென்ட் ஒரு லிட்டர் ரூ.1300. மாதம் 25 நாள் உற்பத்திக்கு 125 லிட்டர் பினாயில் லிக்விட் தேவை. ஒரு லிட்டர் ரூ.200 வீதம் ரூ.25 ஆயிரம் தேவை. சென்ட் 18.750 லிட்டர் தேவை. ஒரு லிட்டர் ரூ.1300 வீதம் ரூ.24,375 தேவை. உற்பத்தி மற்றும் டெலிவரி கூலி ஒரு நாளைக்கு ரூ.300 வீதம் 25 நாள் கூலி ரூ.7,500, மினரல் வாட்டர் காலி பாட்டில்கள் தலா 70 காசு வீதம் 3875 காலி பாட்டில்கள் ரூ.2,700. இவ்வாறு ஒரு மாத உற்பத்தி செலவுக்கு ரூ.53,375 தேவை.

மாதம் ரூ.24 ஆயிரம்

ஒரு லிட்டர் பாட்டில் பினாயில்  லிட்டர் தயாரிக்க ரூ.13.75 ஆகிறது. அது ரூ.20க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாட்டிலிலும், 5 லிட்டர், 10 லிட்டர் கேன்களிலும் விற்கப்படுகிறது. கேனுடன் 5 லிட்டர் பினாயில் ரூ.130க்கும், 10 லிட்டர் பினாயில் ரூ.250க்கும் விற்கப்படுகிறது. மாதம் 3875 லிட்டர் விற்பதன் மூலம் ரூ.24 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

தேவை அதிகம்

பினாயில் லிக்விட் கிருமி நாசினி. அதில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதால், அப்படியே பயன்படுத்தலாம். மேலும் தண்ணீர் கலக்க வேண்டியதில்லை. இதை சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் தெளித்தால் கிருமிகள் அழியும், சென்ட் கலப்பதால் வாசனையாக இருக்கும். ஈ மொய்க்காது. வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகம் உள்ளது. தரமான வாசனையுள்ள பினாயில்களுக்கு கிராக்கி உள்ளது. மக்களுக்கு வாடிக்கையாக சப்ளை செய்யலாம். குறைந்த லாபத்தில் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.