இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

சனி, 4 மே, 2013

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம்

 
இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
 
               நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த2.2 லட்சம் ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு எட்டு யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 65 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும். இந்த நவீன சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

வீடுகளில் 'சோலார் பிளான்ட்' அமைக்க, 50 சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது, '' என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை துணைப்பொது மேலாளர் சையது அகமது தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது : வீடுகளில் மின்உற்பத்தி செய்து, வீட்டுத்தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோருக்கு ஐந்து கிலோவாட் வரை மானியம் உண்டு. வீட்டு கூரையின் மேல் சிறிய 'கிரிட்' இணைப்புடன் கூடிய 'சோலார் பிளான்ட் ' (ஆர்.பி.எஸ்.எஸ்.ஜி.பி.,) அமைக்க எட்டு லட்ச ரூபாய் செலவாகிறது.
இதன்மூலம் ஒரு வாட்டுக்கு 90 ரூபாய் வீதம், அதிகபட்சம் நான்கரை லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. எரிசக்தி அமைச்சகம் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஐந்து கி.வாட் மின்உற்பத்தியின் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் ஏசி,பிரிட்ஜ், கம்ப்யூட்டர், வாஷிங் மெஷின், மின்விளக்கு, மின்விசிறி, உப்புத்தண்ணீர் மோட்டார், தண்ணீர் இறைக்கும் மோட்டார் அனைத்தையும் இயக்கலாம்.

                 முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு 'பிளான்ட்டில்' பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட போட்டோ செல்கள் 85 டிகிரி வெப்பநிலையிலும், சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கான தரச்சான்றும் பெற்றுள்ளன. மழைக்காலங்களில் பேட்டரி மூலம் மின்சாரத்தை சேமித்து வைத்து, மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும். குறைவான இடவசதி : வீட்டுக்கூரை அல்லது மாடியில் 500 சதுரஅடி இருந்தால் போதும். வாரம் ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால், சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை. 'பிளான்ட்' அமைக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. வெப்சைட்டில் பார்க்கலாம். முதன்முறையாக, வீடுகளில் பயன் படும் சோலார் குக்கர்களுக்கான மானியம் 20லிருந்து 60 சதவீதமாகவும், வாட்டர் ஹீட்டருக்கு 50 சதவீதமும் தரப்படுகிறது.

         நிறுவனங்களுக்கும் சலுகை : லாபம் ஈட்டா நிறுவனங்கள், லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 100 கிலோவாட் வரை மின்உற்பத்தி செய்யலாம்.. அதிகபட்சமாக 90 லட்சரூபாய் மானியம் கிடைக்கிறது. லாபம் ஈட்டா நிறுவனங்கள் மானியம் போக, மீதமுள்ள தொகைக்கு வங்கிகளில் கடன் பெறலாம். லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மானியம் அல்லது கடன் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். இத்திட்டம்16.3.2010ல் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார் சையது அகமது.மேலும் விவரங்களுக்கு மதுரையில் உள்ள எரிசக்தி வளர்ச்சி முகமையின் அலுவலக எண்: 0452 - 253 5067ல் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக