இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

KVIC விவசாய லோன்கள்

KVIC விவசாய லோன்கள்

KVIC அமைப்பு  கிராமபுற வேலை வாய்ப்புகளை  அதிகபடுத்த  மற்றும்  சிறு தொழில் செய்வோரை மேலும்  மேலும் ஊக்குவிக்க பல்வேறு விதமான கடன்களை வழங்குகிறது.அதிகபட்சமாக 30% மானியத்துடன் 25 லட்சம் வரை கடன் பெற இயலும்.ஆனால் செய்யப்படும் தொழில்கள் KVIC அங்கிகாரம் பெற்ற தொழில்களாக இருக்க வேண்டும். நீங்கள்  செய்கிற தொழில் கிழே கொடுக்கபட்டுள்ள அட்டவணையில் உள்ள ஒன்றாக இருக்க வேண்டும்.
விவசாயம் சார்ந்த தொழில்கள்
——————————————–
தேனீ வளர்த்தல்,கத்தாழை வளர்த்தல்,பசை, பிசின் தயாரித்தல்,அரக்குத் தயாரித்தல்,மூங்கில் கூடை செய்தல்,விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்,வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்,போட்டோ பிரேம்
நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்,இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்,வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்
தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள் பற்றிய அட்டவணை
—————————————————————————————————————
1. மண்பாண்டம் தயாரித்தல்
2. கிளிஞ்சல் மற்றும் சுண்ணாம்பு
3. கல்வெட்டுதல், ஜல்லி அரைத்தல், செதுக்குதல் (கட்டிடம் மற்றும் கோயிலுக்கு)
4. கல்லில் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருட்கள்
5. சிலேட்டு மற்றும் சிலேட்டுப் பென்சில் செய்தல்
6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல்
7. பாத்திரம் கழுவும் பவுடர்
8. எரி பொருளாகப் பயன்படும் கரி
9, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செயற்கை கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள்
10.  கோலப்பொடி
11. வளையல்
12. பெயிண்ட், வார்னிஷ், டிஸ்டம்பர் மற்றும் கலர் பொடிகள்
13. கண்ணாடிப் பொம்மைகள்
14. கண்ணாடி அலங்காரத் தொழில்
15. செயற்கை வைரம் கட்டிங்
வனம் சார்ந்த தொழில்கள்
16. தேனீ வளர்த்தல்
17. கத்தாழை வளர்த்தல்
18. பசை, பிசின் தயாரித்தல்
19. அரக்குத் தயாரித்தல்
20. மூங்கில் கூடை செய்தல்,
21. விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்
22. வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்
23. போட்டோ பிரேம்
24. நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்
25. இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்
26. வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்
கையால் செய்த  காகிதம் மற்றும் ார்ப்பொருட்கள்
27. கைக்காகிதம்
28. காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம் பை மற்றும் அட்டை பெட்டிகள்
29. புத்தக பைண்டிங் கவர், நோட்புக் செய்தல்
30. சணற் பொருட்கள் (நூல் தவிர)
31. கயிறு மற்றும் நார்பொருட்கள்
வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள் / சார்புத் தொழில்கள் 
32. அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் பதனிடுதல் / மசாலா பவுடர் / அப்பளம் / ரொட்டி பேக்கரி பொருட்கள் செய்தல்
33. இடியாப்பம்
34. சமையல் எண்ணெய் தயாரித்தல்
35. கோதுமை, ரவை தயாரித்தல்
36. சிறிய ரைஸ் மில்
37. பனை பொருட்கள் / பனை வெல்லம்
38. கரும்பு வெல்லம் / கண்டசாரி சர்க்கரை செய்தல்
39. மிட்டாய், தின்பண்டம் தயாரித்தல்
40.  கரும்புச்சாறு செய்தல்
41. கேழ்வரகு, மக்காச்சோளப் பொருட்கள் தயாரித்தல்
42. முந்திரிப்பருப்பு தயாரித்தல்
43. பால்பொருட்கள் தயாரித்தல்
44. மாட்டுத் தீவனம் / கோழித் தீவனம் தயாரித்தல்
பாலிமர் மற்றும் ரசாயண சார்புத் தொழில்கள்
45. தீப்பெட்டி
46. அகர்பத்தி
47. பட்டாசு
48. தோல் பதனிடுதல்
49. சோப்பு தயாரித்தல்
50. ரப்பர் பொருட்கள்
51. ரெக்ஸின்
52. பி.வி.சி. பொருட்கள்
53. கொம்பு, எலும்பு, தந்தப் பொருட்கள்
54. மெழுகுவர்த்தி, சூடம் மற்றும் அரக்கு
55. பிளாஸ்டிக் பொருட்கள்
56. பொட்டு தயாரித்தல்
57. மருதாணி தயாரித்தல்
58. வாசனைத் தைலம் தயாரித்தல்
59. ஷாம்பு தயாரித்தல்
60. ஹேர் ஆயில்
61. டிடர்ஜெண்ட், சலவை பவுடர்
பொறியியல் மற்றும் மரபு சார எரிசக்தி
62. தச்சுவேலை
63. இரும்பு வேலை
64. அலுமினியப் பாத்திரங்கள்
65. சாண எரிவாயு
66. கழிவுப் பொருட்கள் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்தல்
67. பேப்பர் பின், ஸ்டவ் பின், ஊக்கு, கிளிப்புகள் தயாரித்தல்
68. அலங்கார பல்புகள், கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கண்ணாடி
69. குடை தயாரித்தல்
70. சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் கருவிகள்
71. பித்தளைப் பாத்திரங்கள்
74. பாத்திரம் இல்லாத பித்தளை, செம்பு, வெண்கலப் பொருட்கள்
75. ரேடியோ
76. கேஸட் பிளேயர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
77. வோல்டேஜ் ஸ்டெபிலைசர்
78. எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் அலாரம் கடிகாரம்
79. கேஸட் ரெக்கார்டர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
80. மரத்தினால் செய்யப்படும் அழகுப் பொருட்கள்
81. தகரப் பொருட்கள்
82. வயர் நெட்
83. இரும்பு கிரில்
84. மோட்டார் வைண்டிங்
85. வண்டி, மாட்டு வண்டி, சிறிய படகுகள் தயாரித்தல், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் அசெம்பிளிங்
86. இசைக்கருவிகள் தயாரித்தல்
ஜவுளி தொழில் (கதர் நீங்கலாக) மற்றும் பிற தொழில்கள்
87. பாலிவஸ்திரா
88. லோக்வஸ்திரா
89. பனியன்
90. ரெடிமேட் துணிகள் தயாரித்தல் / டெய்லரிங்
91. பொம்மை தயாரித்தல்
92. சாயம் / சாய அச்சுத் தொழில்
93. கம்பளி மற்றும் நூல்கண்டுகள்
94. எம்பிராய்டரி
95. மருத்துவத் துறைக்கானபேண்டேஜ்கள்
96. ஸ்டவ் திரிகள்
97. எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள்
98. லாண்டரி /  சலவையகம்
99. பார்பர் / முடித்திருத்தகம்
100. பிளம்பிங்
101. வீட்டில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல்
102. டயர் வல்கனை சிங்
103. பம்ப்செட், டீசல் எஞ்சின் பழுதுபார்த்தல்
104. விவசாயப் பொருட்களுக்கான ஸ்பிரேயர், பூச்சி மருந்து பம்ப்செட்டுகள் பழுதுபார்த்தல்
105. ஒலி, ஒளி அமைப்புகளுக்கான ஒலி பெருக்கி, ஆம்பிளிபையர், மைக் போன்றவை வாடகைக்கு விடுதல்
106. பேட்டரி சார்ஜ் செய்தல்
107. பேனர் / கலைத்தட்டிகள் வரைதல்
108. சைக்கிள் ரிப்பேர் கடை
109. கட்டிட வேலைகள்
110 பேண்ட் வாசிக்கும் குரூப்கள்
111. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் (பைபர் கிளாஸ்)
112. வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்
113. இசைக்கருவிகள்
114 உணவகம் (மதுபானம் நீங்கலாக)
115. தேனீர் விடுதி
116. அயோடின் கலந்த உப்பு

திங்கள், 7 அக்டோபர், 2013

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு


நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சாகாவரம் பெற்ற இந்தத் தொழிலைப் பற்றிதான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்...
ம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங் களில்தான் எழுதி வருகின்றனர். எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டுப் புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டு களுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்துவிடலாம். நோட்டு தயாரிப்பின்போது மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
நிலம் மற்றும் கட்டடம்!
இந்தத் தொழில் தொடங்க 1,000 முதல் 1,500 சதுர அடி வரை இடம் தேவை. இதில், குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டடம் இருக்க வேண்டும்.
மூலப் பொருள்!
நோட்டுப் புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர் சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது. கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கிலோ 52-55 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.

இயந்திரம்!  
மூலப் பொருள் தொடங்கி நோட்டுக்களாக மாறுகிற வரை மொத்தம் ஐந்து இயந்திரங்கள் தேவை. ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் என்கிற இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும். இதில், முதல் நான்கு இயந்திரங்களும் கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது. இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அட்டையில் படங்களையும் எழுத்துக்களையும் பிரின்ட் செய்வதற்காகவே இந்த மெஷின். ஏற்கெனவே பிரின்ட் செய்யப்பட்ட அட்டைகள் சந்தையில் கிடைப்பதால், அதை வாங்கி, நோட்டுடன் பைண்ட் செய்து தந்துவிடலாம். தவிர, இந்த மெஷினின் விலையும் அதிகம். பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.
தயாரிப்பு முறை!
நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்தே தயாரிப்பு வேலைகள் மாறும்.
ரூலிங் மெஷின்!
இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படு கிறது. இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.  

கட்டிங் மெஷின்!
எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.
பின்னிங் மெஷின்!
வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.
பைண்டிங் மெஷின்!
இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை (நிuனீ) கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.  

பிரின்டிங் மெஷின்!
இந்த மெஷின் மூலம்தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மைனஸ் :
இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறு மாதம் வேலை இருக்கும். அடுத்துவரும் சில மாதங்களுக்குப் பெரிதாக வேலை இருக்காது. இதுதான் இந்தத் தொழிலில் இருக்கும் பாதகம். தவிர, தொழில் நன்றாக இருக்கும்போது மூலப் பொருளின் விலை உச்சத்தில் இருக்கும் என்பதும் பாதகமான விஷயமே.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தயாரித்த நோட்டுக்கள் விற்க முடியாத நிலை நிச்சயம் உருவாகாது. எனவே, புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி குழந்தைகளை ஈர்த்தால் இந்தத் தொழிலில் நிச்சயம் வெற்றிதான்!    
- பானுமதி அருணாசலம், அ.முகமது சுலைமான்.
படங்கள் : ச.இரா. ஸ்ரீதர்

லக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமிப்பந்தில் வியாபாரம் மிகப் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
எந்தப் பொருளையும், எந்தப் பகுதிக்கும் காலதாமதமின்றி எடுத்துச் செல்வதற்காக வளரும் நாடுகள் கட்டுமானத் துறையில் (Infrastructure) அதிகம் முதலீடு செய்து புதிய விமான நிலையங்கள், பெரிய துறைமுகங்கள், நான்கு வழிச் சாலைகள், புதிய இரயில் பாதைகள் போன்ற உலகை இணைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. அதே போல மிகப் பிரம்மாண்டமான கப்பல்களும், விமானங்களும் இரண்டு அடுக்கு இரயில் பெட்டிகளும் அதிகப் பொருட்களைக் கையாளும் வசதிகளோடு உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் புதிய கடல் வழித்தடங்களைக் கண்டுபிடித்து கண்டங்களுக்கு மத்தியில் சரக்குப் போக்குவரத்தை அதிகப்படுத்திட சாட்டிலைட் உதவியுடன் பூமியின் அமைப்பை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஐரோப்பாவிற்கு பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்காக வட கிழக்கு ஆர்டிக் கடலில் ரஷ்யா வழியாக ஒரு புதிய கடல் வழியை சீனா பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதுவரையிலும் சீனாவிலிருந்து ஐரோப்பா சென்ற கடல் பாதையிலிருந்து மாறி இந்தப் புதிய பாதையில் செல்வதால் 11 ஆயிரம் மைல் தூரம் குறைகிறது. இதனால் சீனத் தயாரிப்புகள் ஐரோப்பாவில் குவியப் போகிறது.

உலகின் அனைத்துப் பகுதியிலும் வியாபாரத்தைப் பெருக்க நாடுகளுக்கு மத்தியில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreement), சர்வதேசப் பணப் பரிவர்த்தனைகள், கூட்டு முதலீடுகள் போன்ற சர்வதேச வியாபாரத்திற்கு வலு சேர்க்கும் வேலைகள் விரைவு படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது உலகம் முழுவதுவம் காணப்படும் சர்வதேசப் பொருளாதாரத் தேக்க நிலை (Recession) என்பது கண்மூடித்தனமான வளர்ச்சி என்ற தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேர்மையற்ற தன்மையின் விளைவுகளே!

தொடர்ச்சியாக பெருகி வரும் வியாபாரத்தை இந்த தற்காலிக தேக்க நிலை பெரிய அளவில் பாதிக்காது.

இந்தியாவில் பல துறைகள் கணிசமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. உணவு பதப்படுத்தல், மருந்து, எரிசக்தி, ஜவுளி போன்ற மனித வாழ்வின் அடிப்படைத் துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டு புதிய புதிய தொழிற்கூடங்கள் உருவாகி வருகின்றன.

வளர்ந்து வரும் இந்த வாய்ப்புகளை இந்தியாவின் பல சமூகங்களும் நுணுக்கமாக ஆய்வு செய்து அதற்கான ஏற்பாடுகளோடு அவற்றை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்தியாவில் சாதிய இழிவுகளால் கேவலமான அடக்குமுறைகளுக்கு ஆளான நாடார் சமூகம் காமராஜர் காலத்தில் வியாபாரத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி முதலீடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக ”மகமை” போன்ற வருமானத்தின் ஒரு பகுதியை தங்கள் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தினர். நாடார் சமூக சிறு, குறு, பெருந்தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து ஒரு வங்கியை உருவாக்கி (Mercantile Bank) அதை வியாபாரிகளுக்கான வங்கி என்று பொதுமைப் படுத்தியுள்ளனர். நாடார்களின் வர்த்தக வெற்றிக்கு மெர்கன்டைல் வங்கி பெரிதும் உதவுகிறது.

அதேபோல மார்வாடி சமூகம் தங்கள் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு பல சங்கங்களை, அமைப்புகளை நடத்துகின்றனர் அவர்கள் செய்யாத தொழிலும் இல்லை. இந்தியாவில் அவர்கள் இல்லாத ஊரும் இல்லை.

அதேபோல முஸ்லிம்களில் ஒரு பிரிவினரான தாவூதி போரா சமூகத்தில் ஏழை, தொழில் இல்லாதவர் என்று ஒருவரைக் கூடக் காண இயலாத அளவிற்கு தொழிலுக்கு முதலீடு பற்றாக்குறை என்ற பேச்சே எழாத அளவில் அந்த சமூகம் தனக்கான கட்டமைப்புகளை வைத்துள்ளது. அவர்களிடையே ”ஜகாத்” முறையாகப் பங்கீடு செய்யப்படுகிறது.

புனாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ”மிலிந்த் காம்ப்ளே” என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ”டிக்கி” என்ற (Dalit Indian Chamber of Commerce and Industry) வர்த்தக அமைப்பை உருவாக்கி அடுத்த 10 ஆண்டுகளில் தலித் சமூக இளைஞர்களை தொழில் துறையில் ஈடுபடுத்தி குறைந்தது நூறு தலித் கோடீஸ்வரர்களை உருவாக்கும் இலக்கோடு பணியாற்றி வருகிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 2.5 லட்சம் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். பல இலட்சம் புதிய தொழில் அதிபர்கள் உருவாகியுள்ளனர்.

வணிகச் சமூகம் என்று வரலாறு முழுவதும் அறியப்பட்ட முஸ்லிம் சமூகம் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ளதா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஹலாலான வியாபாரத்தின் மூலம் தான் எல்லையில்லா இலாபத்தை ஈட்ட முடியும். அதனால்தான் உற்பத்தியைக் காட்டிலும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது நமது முந்திய தலைமுறை.

ஆனால் இன்று சேவைத் துறையின் (Service Sector) பெருக்கம், பன்னாட்டுத் தொழில் நிறுவங்களின் வருகை, வளைகுடா வேலை வாய்ப்பு ஆகியவை மாத ஊதியத்திற்கு பணியாற்றுவதை இலகுவாக்கி அதற்கு உதவும் பொறியியல் போன்ற படிப்புகளையும் கவர்ச்சியாக்கியுள்ளது.
தொழில் ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய தேவையும், நிர்பந்தமும் உள்ள மக்களை ஒருங்கிணைத்தாலே போதும்; மாற்றம் உருவாகும்.
பொறியியல் படிப்பை நன்றாகப் படித்தவர்களில் சிலர், பெரும் பொருள் ஈட்டுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் அந்த வருமானத்திற்கும் எல்லை உண்டு. தொழில் துறையில் விரிவாக்கத்திற்கும், இலாபத்திற்கும் எல்லை இல்லை. அது இறைவனின் அருளையும் அபிவிருத்தியையும் பெற்றது.

கேரள முஸ்லிம்கள் தொடக்க காலத்தில் வளைகுடா நாட்டிற்கு அடிப்படை வேலைக்குச் சென்றாலும் கிடைத்த தொடர்புகளைப் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டு இன்று பெரும் தனவந்தர்களாக மாறியுள்ளனர். புதிது புதிதாக இளம் தொழில் அதிபர்கள் உருவாகி வருகின்றனர்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் இளைஞர்களை தொழில் முனைவோராக (Entrepreneur) உருவாக்கும் எந்த கட்டமைப்பும் முஸ்லிம் சமூகத்தில் இதுவரை உருவாக்கப்படவில்லை. தானாக உருவாகி வருபவர்கள் மிகக் குறைவு, அப்படி உருவாகி வருபவர்களிடம் சமூக அக்கறை இருப்பது குறைவு. சமூகத்தால் உருவாக்கப்படுவோருக்குத்தான் சமூகத்துடனான தொடர்புகள் அதிகமாக இருக்கும்.

தமிழக முஸ்லிம் சமுதாயம் தொழில் துறையில் வளர்ச்சி பெறுவதற்கு மிக அடிப்படையாக ஒரு வர்த்தக அமைப்பு (Chamber of Commerce) உடனடியாக உருவாக்கப்பட வேண்டியத் தேவை உள்ளது.

இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு பெரிய தொழில் செய்பவர்கள், பாரம்பர்யத் தொழில் செய்பவர்கள் முதலில் இசைவு தெரிவிப்பது கடினம். பசித்தவர்களுக்கு பழங்கஞ்சி பஞ்சாமிர்தம் என்பது போல சிறு, குறு தொழில் செய்யும் வேட்கையுடைய முஸ்லிம்களை இணைத்தாலே பின்னால் அது எல்லோரையும் இணைக்கும் பெரிய நிறுவனமாகி விடும்.
முஸ்லிம்களிடையே இதுபோன்ற வளர்ச்சிக்கான கருத்துக்கள் கூறப்படும் போது உடனடியாக “நம்மகிட்ட ஒற்றுமை இல்ல பாவா” என்று யாருக்கும் விளங்காத ஒரே ஒரு வார்த்தையைக் கூறி முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். தொழில் ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய தேவையும், நிர்பந்தமும் உள்ள மக்களை ஒருங்கிணைத்தாலே போதும்; மாற்றம் உருவாகும்.

மிகப் பெரிய மாற்றங்களை நோக்கி உலகம் ஓடுகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு மாநிலமான ராஸ் அல் கைமா அரசின் சார்பில் அங்கே உருவாக்கபட்டுள்ள தடையில்லா வர்த்தக மையத்தின் (RAK Free Trade Zone) அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்து - ஆங்கில நாளேட்டில் அதன் அறிவிப்பு வந்தது. ஏறக்குறைய 500 தொழில் முனைவோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் குக்கிராமத்தில் இருந்தும் ஆர்வலர்கள் வந்திருந்தனர். முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பலவிதமான தொழில் மற்றும் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகளுக்கு அந்த நிகழ்வு வழிகாட்டியது. மற்றவர்களை விட நம் சமூகம் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதிக்க முடியும் என்று தோன்றியது.

பயன்படுத்துவது யார் என்ற பெருமூச்சும் சேர்ந்தே வந்தது.

பணத்தை வைத்துக் கொண்டு அதைப் பாதுகாப்பதிலேயே நெஞ்சு வீங்கி வாழ்நாளை செலவிடும் மக்கள் நம்மில் அநேகம் பேர் உள்ளனர்.

அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றில் பெருமானார் செய்து சாதித்த ஒன்றில் நேர்மையான வழியில் திட்டமிடுதலோடு சிறிய முதலீடுகளை ஒன்று திரட்டி பெரும் முதலீடுகளோடு கூட்டு முயற்சியாக ஈடுபடுகின்ற போது வெற்றி நிச்சயம். இது போன்ற வாய்ப்புகளைக் கலந்து பேசுவதற்கும், ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் தான் முஸ்லிம்களுக்கென்று வர்த்தக அமைப்பு தேவை.

- CMN சலீம்