நான் ஓவன்' பொருள்கள் தயாரிப்பு பயிற்சி
By dn, சென்னை
First Published : 20 May 2013 03:42 AM IST
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) சார்பில் சென்னை கிண்டியில் "நான் ஓவன்' பொருள்கள் தயாரிக்க 5 நாள் சிறப்பு பயிற்சி மே 20-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக எம்.எஸ்.எம்.இ. துணை இயக்குநர் என். சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ. மையத்தில் "நான் ஓவனை' கொண்டு பைகள், இதர பொருள்களை தயார் செய்ய சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சியில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக "நான் ஓவனை' கொண்டு தேவைக்கேற்ற வடிவங்களில் பேக்கிங் பை, ஷாப்பிங் பை, தாம்பூலம் பை, பரிசுப் பைகள் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீட்டு உபயோகப் பொருள்கள், தொழிற்சாலைகளில் பயன்படும் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கவும், மருத்துவமனைகளில் பயன்படும் சர்ஜரி, பாதுகாப்பு உடைகள் தயாரிக்கவும் பயிற்சியளிக்கப்படுகிறது.
இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள், மூலப்பொருள் பற்றிய விவரங்கள், விற்பனை, லாப வாய்ப்புகள், தொழில் தொடங்க திட்ட அறிக்கை, நிதியுதவி பெற வழிவகை பற்றியும் பயிற்றுவிக்கப்படும்.
கல்வித் தகுதி தடையில்லை. ஆண், பெண் இருபாலரும் சேரலாம். தாழ்த்தப்பட்டவர்கள், அட்டவணையிலிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை உண்டு. இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940318891 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக