உலகம் முழுவதும், ஒரு மதிப்பீட்டின்படி 884 மில்லியன் மக்கள் இன்னமும் அசுத்தமான நீரையே குடிக்கின்றனர் மற்றும் குடிநீரின்றி அவதிபடுகின்றனர். நோய்களால் இறப்பவர்களில் 40 சதவீதத்தினர் நீரால் பரவும் தொற்று நோய்களால்தான்.....
LifeStraw என்ற நிறுவனம் புதிய நீர் உறிஞ்சு வடிகட்டியை கண்டுபிடித்துள்ளனர். இது நீர் நிலைகளில்( குளம், ஆறு, ஓடை ) இருந்து நேரடியாக நீரை வாய் மூலம் உறிஞ்சி குடிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான நீரிலிருந்து 99.999% பாகடீரியாக்களையும், மாசுக்களையும் நீக்குகிறது.
இது கிராமபுறத்தினருக்கும், மலைவாழ் மக்களுக்கும், நெந்தூர பயணிகளுக்கும் வரப்பிரசாதமாக அமையும். இதை பயன்படுத்தி பார்ப்பதற்காக ஆப்ரிக்க பழங்குடியினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக