இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

ஞாயிறு, 22 ஜூன், 2014

துணிகளில் ஸ்கிரீன்  பிரின்டிங்!

Screen fabrics pirintin!



நீங்கதான் முதலாளியம்மா! 

காகிதங்களில், விசிட்டிங் கார்டுகளில், போஸ்டர்களில், அழைப்பிதழ்களில் செய்கிற ஸ்கிரீன் பிரின்டிங்  பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதையே துணிகளிலும் செய்ய முடியும் என்பது தெரியுமா? சாதாரண காட்டன் சேலையைக் கூட காஸ்ட்லியான டிசைனர் சேலையாக மாற்றும் அளவுக்கு சூப்பராக்க முடியும் ஸ்கிரீன் பிரின்டிங்கில். ஸ்கிரீன் பிரின்டிங் முறையில் சேலை,சல்வாரில் மட்டுமின்றி, தலையணை உறை, படுக்கை விரிப்பு, திரைச்சீலை என எல்லாவற்றையும் அழகுப்படுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி.

‘‘அதிக உடலுழைப்பும் முதலீடும் தேவைப்படாத ஒரு தொழில் இது. பேப்பர், சணல், காட்டன், சிந்தெடிக்னு எல்லா மெட்டீரியல்லயும் ஸ்கிரீன் பிரின்டிங்ல டிசைன் பண்ணலாம். பிளெயின் காட்டன் சேலையோ,  சல்வார் மெட்டீரியலோ வாங்கி, அதுல நமக்கு விருப்பமான டிசைன்களை பிரின்ட் பண்ணலாம். முன்னல்லாம் இந்தத் தொழிலுக்கான ஸ்கிரீன்களை நாமளே ரெடி பண்ண வேண்டியிருக்கும். இப்ப எல்லாமே கடைகள்ல கிடைக்குது. ஸ்கிரீன் பிரின்டிங் செய்யறதுக்கான சின்ன டேபிள் அல்லது 4க்கு 4 அளவுள்ள மனை தேவை.

தவிர பைண்டர், ஃபிக்சர், கலர், கியூஸ், டிசைன்ஸ், துணினு 5 ஆயிரம் முதலீடு போதும். மனையில எத்தனை லேயர் கோணி, மல் துணி வைக்கணும்னு ஒரு கணக்கு இருக்கு. மனையைக்கூட நாமளே சுலபமா ரெடி பண்ணலாம். புடவை, சல்வாருக்கு செய்ய முடியாதவங்க, வெறும் தலையணை உறை, பெட்ஷீட், திரைச்சீலைக்கு மட்டுமே பண்ணிக் கொடுத்தாலே நிறைய பிசினஸ் கிடைக்கும். செலவெல்லாம் போக 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற மகாலட்சுமியிடம் ஒரே நாள் பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில் துணிகளில் ஸ்கிரீன் பிரின்டிங் செய்யக் கற்றுக் கொள்ளலாம். (99400 54517)

நாப்கின் தயாரித்தால்

யார் இந்த அருணாசலம் முருகானந்தம் ! 

அட இவரு IITல படிக்கவில்லை ! 
அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை !
இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை ! 
பரம்பரை சொத்து போல, பிரதமர் பதவிக்கு ஆசை கொள்ளவில்லை ! 
அட பாருங்க, அந்த தத்துவா, இந்த தத்துவா பேசவில்லை !
தாத்தா தயவில் வாழும் பேரனும் இல்லை ! 
அட காலேஜ் கூட போகவில்லை !
ஆனா பாருங்க மனுஷன் டைம்ஸ் இதழில் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்க்களில் அவரும் இடம் பெற்று இருக்கிறார் ! 
ஒரு மனுசனை உழைப்பு எந்த அளவு உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று அவர் ஒரு சிறந்த உதாரணம் ! 
கோயம்பத்தூர் பக்கத்துல இருக்கற ஒரு ஊராக பகுதியில் பிறந்து, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனிதன், இந்தியா கொண்டாவில்லை என்றாலும் உலகம் கொண்டாட காரணம் ! 
1. நாமளுக்கு கோடி கோடியாக பணம் சம்பாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லைங்க, கோயம்புத்தூர்ல ஒரு இன்ஜினியரிங் கம்பெனில ஒரு laborயாக வாழ்க்கையை தொடங்கிய மனிதம், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர் ! அது அவருக்கு ராசி நம்பர் இல்லைங்க, காரணம் வறுமை!
2. மனுஷன் , ஏன் எங்க அப்பா சொத்து சேர்த்து வைக்கவில்லை, ஏன் படிக்கலைன்னு யோசிக்கமா, பெண்கள் பிரச்சனை, பெண்கள் பிரச்சனை என்று brand செய்யப்பட்ட "‪#‎மாதவிடாய்‬" ("‪#‎menstruation‬") இயற்கை பிரச்சனையை தான் மாணவி எதிர்கொள்ளும் போது அவர்கள் 
பயன்படுத்தப் பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை பார்த்த மனுஷன், இதில் மிகப்பெரிய தவறு, சுகாதாரம் சார்ந்த பிரச்னை இருப்தாக நினைத்தார். 
3. இதற்கு ஏன் மாற்று இருக்க கூடாது என்று நினைத்த முருகானந்தம், அதற்குள் ஒளிந்து இருக்கும் உலக வர்த்தகம் மற்றும் அதன் விலை சார்ந்த விசயங்களை உள்வாங்கிய போது அதில் இருக்கும் மார்க்கெட் பற்றி யோசிக்கவில்லை, ஆதனால் காசு இல்லாத நாம கிராமப்புற பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டபடுவாங்க அப்படின்னு யோசிச்சார் ! நாப்கின் செய்வதற்கான மூலபொருள் விலை ரூபாய் 2 என்றால் அதை 40 மடங்கு அதிகமாக மார்க்கெட் செய்யபடுகிறது யதார்த்த்த்தில் ! கொஞ்சம் யோசிச்சு பார்த்தார் எல்லோராலும் வாங்க முடியுமா என்று ! 
4. பழைய துணித் துண்டுகளுக்கு பதிலாக, அதற்கு மாற்றாக அவர் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்த "நாப்கின்களை" கோடி கோடியாக இன்வெஸ்ட் பண்ணி டெஸ்ட் பண்ண வாய்ப்பு இல்லாத முருகானந்தம், தான் மனைவி, தங்கள் குடுப்பம் சார்ந்த பெண்க்கள் இடம் உதவி கேட்கும் போது அவரை பைத்தியம் என்று நினைத்தார்கள் ! அவர் அறையில் பெண்கள் சார்ந்த பொருள் இருந்த போது அவங்க அம்மா பைத்தியம் என்றே முடிவு செய்துவிட்டார்கள் ! வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்ட சூழ்நிலை, மனிதன் அசரவில்லை ! 
5. மெடிக்கல் காலேஜ் பெண்களிடம் உதவி கேக்கலாம் என்றால், மிகுத்த போராட்டத்துக்கு பிறகு அவர்கள் உதவ முன்வந்தார்கள், மனுஷன் ஒரு stageல விலகுகளின் ரத்த்த்தை வைத்து ஒரு bladder மூலம் தனக்கு தானே "‪#‎நாப்கின்‬" மாட்டி சோதனை செய்த சாதனை மனிதன்! இந்த உழைப்பு, இந்த வெறி அவருக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்த்து ! 
6. அவர் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பிரேக் through கிடைத்த்து, 
‪#‎மரச்சக்கை‬ ஒரு மாற்று பொருளாக கண்டுபிடித்தவர், அவர் நினைத்த்தை போலவே, அது ஒரு அற்புதமான மாற்றாக அமைத்த்து/// நாப்கின் செய்ய தேவையான இந்திரங்களை குறைந்த செலவில் கண்டுபிடித்து அதை இப்போது ஜெயஸ்ரீ industries என்ற பெயரில் இலவசமாக, கிராமப்புற பெண்களுக்கு கொடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கும் ஒப்படற மனிதர் ! அவர் தயாரிக்கும் நாப்கிங்களின் அடக்கவிலை ஒரு நாப்கின் ஒரு ரூபாய் !
அருணாசலம் முருகானந்தம் இந்த மனிதனை வளைத்து போட்டு காசு பண்ண நினைக்கும் corporate சக்திகள் அதிகம், ஆனா பாருங்க என் உழைப்பு விற்பனைக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.
இப்போது 21 வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல கிராமங்களும் எந்த வணிக நோக்கமும் இல்லாமல் அடிப்படை 
IIT மெட்ராஸ் இவருக்கு சிறந்த சுமூக கண்டுபிடிப்புக்கான விருதை கொடுத்த்து ! இன்னும் பல விருதுகள் ! 
https://www.youtube.com/watch?v=V4_MeS6SOwk இந்த விடியோவை மறக்காமல் பார்க்கவும் ! யதார்த்தை மொத்தமா குத்தகைக்கு எடுத்த மனிதராக நான் பார்கிறேன் ! 
பணம் வாங்கி கொண்டு விளையாடும் வீர்கள், அரசியல் லாபி மூலம் பத்மாஸ்ரீ, பத்மாவிபூஷன் விருதுகளை வாங்கும் இந்த இந்தியா திருநாட்டில் எங்க ஊரு மனுஷன் செய்த இந்த சாதனைக்கு விருது தர சொல்லி கையேந்தவில்லை, அந்த விருதுக்கு மனசாட்சி இருந்தால் அதுவே தானாக வரும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன் ! 
அற்புதமான மனிதர்கள் பிறப்பது இல்லை, நம்முடன் நம்மை சுற்றி வாழ்த்து கொன்று இருக்கிறார்கள் ! 
அருணாசலம் முருகானந்தம் அவர்களை பாராட்ட நினைக்கும் அன்பர்கள் இந்த நம்பர்ல தொடர்பு கொள்ளலாம் : 9442224069 ( தமிழ் தினசரி ஒன்றில் வந்தது ! 



"நம்ம நாட்டுல அதிகபட்சமா 20 சதவீத பெண்கள்தான் நாப்கின் பயன்படுத்துறாங்கனு சொல்லுது ஒரு புள்ளி விபரம். இப்போ நாகரீக வளர்ச்சியில குறைவா  இருக்கிற வடமாநிலங்களிலும் என் மிஷின் போய் சேர்ந்திருக்கு. காஷ்மீரில் இருக்கும் பழங்குடியின பெண்கள் சுகாதாரத்துக்கும் இந்த மிஷின் கைகுடுக்குது. பக்கத்து கிராமப் பெண்களை
மனசுல வச்சு எடுத்த இந்த முயற்சி இன்னிக்கு பல இந்திய சகோதரிகளின் சுகாதாரவிதியை  மாத்தியிருக்கு.இதைவிட ஒரு கண்டுபிடிப்புக்கு  என்ன மரியாதை வேணும்?" என்று சந்தோஷ வார்த்தைகளில் தொடங்கும் முருகானந்தம் இந்த இடத்தை அடைவதற்கு தாண்டி வந்தது பல கட்டங்கள்.

                   கைத்தறி தொழிலில் பிசியாக இருந்த முருகானந்தத்தின் அப்பா உயிரை விதிஎடுத்துக்கொள்ள வறுமை அவரது குடும்பத்தை எடுத்துக்கொண்டது. கான்வென்ட் ஸ்கூல் ஸ்டுடன்ட்  கார்பரேஷன் பள்ளி மாணவரானார். அம்மா இட்லி சுட்டு வியாபாரம் செய்து குடும்பத்தைக்கவனித்துக்   கொண்டாலும் பத்தாம் வகுப்பிற்கு மேல் அனுமதிக்கவில்லை
வறுமை.

                 பேக்டரிஒர்க் ஷாப்  என வேலைக்குப் போக ஆரம்பித்த போது  இயந்திரங்கள் பழக்கமாயிருக்கின்றன. சில வருடங்களில் திருமணம் ஆக அதற்கடுத்துதான் மாற்றத்திற்கான ஒரு விதை விழுந்திருக்கின்றது.

           "ஒருநாள் டி.வியில நாப்கின் விளம்பரம் வந்தப்போ 'இதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. அதுக்கு ஆகுற செலவுல ஒரு நாள் சாப்பாட்டு செலவையே முடிச்சிடலாம் நமக்கு துணிதான் கதின்னு'என் மனைவி சொன்னப்போ எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

                     பொண்ணுக பீரியட்ஸ் அப்போ சுகாதாரமில்லாத துணிகளைப் பயன்படுத்தும் போது பல பிரச்சனைகள் ஏற்படுங்கிறதை   மருத்துவ நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கேன். கோவை மாதிரிபெரு நகரத்துல இருக்கிற படிச்சிருக்கிற என் மனைவிக்கே இப்படி ஒரு பிரச்னை இருக்குனா கிராமத்துல இருக்கிற பெண்களை யோசிச்சப்போ ரொம்ப பரிதாபமாயிருச்சு.

                     இதுக்கு ஏதாவது பண்ணனும்னு யோசிச்சு மெடிக்கல் ஷாப்ல ஒரு நாப்கின் வாங்கிப் பார்த்து இது ஒரு காட்டன் அடைக்கப்பட்ட பாக்கெட்டுன்னு நெனச்சிக்கிட்டுஅதே மாதிரி தயாரிச்சு என் மனைவி, பக்கத்திலுள்ள தோழிகள்னு கொடுத்தேன் எல்லாரும் 'இது வேஸ்ட்னு' சொன்னாங்க. ஆனா காரணம் சொல்லல.

                    பிறகு ஒரு நாப்கினை எடுத்து திரவத்தை  விட்டப்போ அது   திரவத்தை எடுத்துக்கிச்சு ஆனா தக்க வைக்க முடியல உடனே அமெரிக்காவுல உள்ள நாப்கின் கம்பெனியில இருந்து மூலப்பொருளை வரவழைச்சேன். அதை ஆய்வுக்குட்படுத்தினப்போ அது காட்டனில்லை 'பைன் வுட்பைபர்ங்கறது' தெரிஞ்சது. இது திரவத்தை உறிஞ்சுரதோட தேக்கியும் வச்சுக்கிடுது. " என்றவர் மூலப்பொருளின் ரகசியத்தை அறிந்த பின் மிஷினையும் வாங்கி விடலாம் என்று நினைத்து விலைகேட்டவருக்கு தலை  கிர்ர்ர்ர்....  நாலரைக் கோடி ரூபாய்.
                      படுத்தவர் இரண்டு நாள் கழித்து எழுந்து அந்த மெக்கானிசத்தை புத்தகங்கள்,பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டு தானே அந்த இயந்திரத்தை சின்ன அளவுல 60,000 ரூபாய்   செலவுல 2005 ஆம் ஆண்டுகண்டுபிடித்துள்ளார் . எட்டு மணி நேரத்தில் 1000 நாப்கின்கள்தயாரிக்கும்திறன் கொண்டது இந்த இயந்திரம்.

                   "சொந்தமா தொழில் செஞ்சு உயரனும்னு பல பெண்கள் நெனைக்கிறாங்க. அவங்களுக்குத்தான் என் மிஷினை விற்பனை செய்றேன். நாப்கின் தயாரிக்கிற பயிற்சியையும் நானே வழங்குகிறேன். இந்தியா முழுக்க 18 மாநிலங்களில் 300 மிஷின்களை வித்திருக்கேன். பல பொருட்களின் விலையேற்றம் காரணமா மிஷினோட விலை 85 ஆயிரம் ஆகியிருக்கு" என்றவரிடம்இயந்திரத்தின் தரத்தைப் பார்த்து அதன் காப்புரிமையை உள்,வெளிநாட்டு நிறுவங்கள் பலவிலைபேசியிருக்கின்றன.  ஆனால் முருகானந்தமோமுழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த முன்னேற்றத்திற்க்கே இதை  அர்ப்பணித்திருக்கிறார்.

                    "சமுதாய மேம்பாட்டிற்கான  சிறந்த கண்டுபிடிப்பு" என்ற வரிசையில் சென்னையிலுள்ளIIT முருகானந்தத்திற்கு  முதல் பரிசை வழங்கியுள்ளது. ஏராளமான விருதுகளைப் பெற்ற இந்தக் கண்டுபிடிப்பு சமீபத்தில் குடியரசுத் தலைவரின் தேசிய விருதையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

திங்கள், 12 மே, 2014

சாதிக்கும் கல்லூரி மாணவர்கள்!

சாதிக்கும் கல்லூரி மாணவர்கள்!
இரண்டு பார்ட்னர்கள் இருந்தாலே பிசினஸில் பல பிரச்னைகள் வர, சென்னையில் பல கல்லூரிகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் சேர்ந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை (Event Management Company) நடத்தி வருகிறார்கள்.
இளவயதில் ஈகோவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிற பருவத்தில் எப்படி இது சாத்தியம் என இந்த கம்பெனியைத் தொடங்கிய ராகவேந்திரா கூறியது
''ஒரு சராசரியான மாணவனின் வாழ்க்கையை நான் விரும்பவில்லை. புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். 12-ம் வகுப்பு முடித்தவுடன் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத் தேர்வு செய்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் எனக்குள் இருந்த எண்ண ஓட்டம் அதிகமானது. என் நண்பர்கள் வினீத் ரமேஷ் மற்றும் ஸ்ருதன்ஜெய் நாராயண் ஆகிய இருவரிடமும் இந்த எண்ணம் இருந்தது. எனவே, நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு தொழில் செய்ய முடிவெடுத்தோம்.
சென்னையில் நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. மாதந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஏன் ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தரும் கம்பெனியை நடத்தக்கூடாது என்ற எண்ணம் எங்கள் மூன்று பேரிடமும் தோன்றியது. உடனடியாக நாங்கள் மூன்றுபேரும் சேர்ந்து 'அயாமரா’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தும் கம்பெனியை தொடங்கினோம்.
ஒரு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவும் திட்டமிடவும் நாங்கள் மூன்று பேர் மட்டும் போதுமானதாகத் தெரியவில்லை. எனவே, எங்கள் புதுமுயற்சிக்கு வலுசேர்க்க பல கல்லூரிகளிலிருந்து சகமாணவர்களைச் சேர்த்துக்கொண்டோம். ஆகஸ்ட் 2012-ல் சென்னையில் 'மெட்ராஸ் டே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புகளை வைத்துக்கொண்டு காரின் மூலம் இடங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அது.
எங்கள் கம்பெனியைப் பற்றி கேள்விப்பட்ட அந்த அமைப்பினர் எங்களை இந்த நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு கேட்டனர். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே கொடுத்தனர்.
நாங்கள் மொத்தம் 16 பேர். கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், உளவியல் எனப் பல துறைகளில் படித்துக்கொண்டிருந்தோம். இதுவே எங்களை ஒரு நிகழ்ச்சியைப் பலகோணத்தில் திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. அதனால் நிகழ்ச்சிக்கான சிறு சிறு விஷயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம். எங்களுக்கு அப்போது போதுமான அனுபவம் இல்லை என்றாலும் வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சியை நடத்தித் தந்தோம். இந்த நிகழ்ச்சி மூலம் பொருளாதார ரீதியாகச் சம்பாதித்த லாபம் வெறும் நூறு ரூபாய்தான். ஆனால், நாங்கள் சம்பாதித்த பெயருக்கும் புகழுக்கும் அளவில்லை. இந்த நிகழ்ச்சியால் எங்கள் நிறுவனம் மக்கள் அனைவரிடமும் போய்ச்சேர்ந்தது.
முதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடித்தபிறகு பலபேர் எங்களைத் தொடர்புகொண்டு தங்கள் நிகழ்ச்சிகளையும் நடத்தித் தருமாறு கேட்டனர். எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொடுக்காமல் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருப்போம். 16 பேருக்கும் முழுச் சம்மதம் இருந்தால்தான் அந்த நிகழ்ச்சியைப் புக் செய்து நடத்தித் தருவோம். நிகழ்ச்சிக்கான மார்க்கெட்டிங்கில் ஆரம்பித்து டிக்கெட் புக்கிங் வரை அனைத்து வேலைகளையும் நாங்களே பார்த்துக்கொள்வோம்' என்றார் ராகவேந்திரா.
சதீஷ்பாபு என்பவர் பேசும்போது 'கம்பெனியைப் பொறுத்தவரை, நாங்கள் 16 பேரும் பார்ட்னர்கள்தான். முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு எங்களிடம் இல்லை. வரும் லாபத்தை இதுவரை யாரும் பிரித்துக்கொள்ளவில்லை; கம்பெனியின் வளர்ச்சிக்காகவே இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம். சொந்தமாக ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியை நடத்துவதே எங்களது தற்போதைய எண்ணம். அதற்காகத்தான் இப்போது உழைத்து வருகிறோம்' என்றார்.
இந்தக் குழுவின் பெண் உறுப்பினர் காயத்ரி பட்டானி. அவருடன் பேசினோம். 'நான் டபிள்யூசிசி கல்லூரியில் உளவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். குழுவாகச் சேர்ந்து பணியாற்றும்போது, புதிய புதிய விஷயங்களை எங்களால் கற்றுக்கொள்ள முடிகிறது. தொழில் ரீதியான அனுபவங்கள் எங்களுக்கு நடைமுறை வாழ்வியலை கற்றுத் தருகின்றன. ஆரம்பத்தில் தடுமாறினாலும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேறி வருகிறோம்'' என்றார் அவர்.
இந்த நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் திருவேங்கடம். அவர், ''கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, சுயமாகத் தொழில் ஆரம்பித்தாலும் அல்லது ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும், தொழில்ரீதியாக ஏற்படும் இடர்பாடுகளை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று எங்களின் நிறுவனம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
எங்களின் கல்லூரிப் பருவத்திலேயே இதுமாதிரி அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்திருப்பது பெரிய வரப்பிரசாதம்தான்'' என்றார்.
மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் படிக்கும் ஸ்நேஹா பாலசுப்ரமணியம், ''என்னுடைய படிப்புச் சார்ந்த தொழில் என்பதால்தான் நான் இதற்குச் சம்மதித்தேன். இதில் இணைந்ததும்தான் மற்ற நண்பர்களின் ஆர்வம் எனக்குப் புலப்பட்டது.
எங்கள் கம்பெனியை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே அனைவருக்குமான சிந்தனையாக இருக்கிறது. படிப்பதற்கும், அதையே பிராக்டிக்கலாக செய்வதற்குமான வேறுபாடுகளை இந்த பிசினஸ் செய்வதன் மூலம் கற்றுக்கொண்டேன்'' என்றார் நம்பிக்கையாக.
டி.எம்.ராஜரத்தினம் மஹால், மியூசிக் அகாடமி, ஜெர்மன் ஹால் ஆகிய இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கும் இந்த ஜாம்பவான்கள், பாலிவுட் பிரபலமான ஃப்ரஹான் அக்தரின் இசை நிகழ்ச்சியையும் கடந்த டிசம்பர் மாதம் நடத்தி அசத்தியுள்ளனர். பதினாறு பேரும் தங்களின் பிசினஸ் வெற்றிக்கு பின்னணி, தங்கள் பெற்றோர்கள் தரும் ஊக்கம்தான் என்கிறார்கள் கோரஸாக!

சனி, 10 மே, 2014

அமெரிக்காவின், 'டைம்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் முருகானந்தம்

சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் கோவையை சேர்ந்த முருகானந்தம்!
உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் முருகானந்தம். வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சேர்ந்த முருகானந்தம்.
அவர் சாதித்த சாதனை என்ன?
எந்த சகோதரியும் அழுக்குத் துணியை பயன்படுத்தக் கூடாது!
பெண்களுக்கான சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் முருகானந்தம். ஆனால், இதற்கு இவர் கொடுத்த விலை... நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவருடைய வார்த்தைகளிலேயே படிப்போம்!
'என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்தக் கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க. நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக் குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிட்டேன்.
அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன். இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒருகட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்பக் கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க. வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னை பைத்தியக்காரன் மாதிரி பார்த்துட்டு, திட்டினாங்க. சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனை எலியாக்க முடிவு பண்ணினேன்.
என் நண்பரின் கறிக் கடையில் இருந்து சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச் சேன். இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டினது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வரும். இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!
சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.
கண்ணீரோட நான் என் கிராமத்தைவிட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்துட்டேன். ரூம் பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.
நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 65 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை. சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.
அது என் பல வருஷக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்.
சமீபத்துல ஐ.ஐ.டி., 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ என் கண்டுபிடிப்பைத் தேர்வு செஞ்சது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ. இங்க எல்லாம் போய் சிறப்பு விருந்தினராகப் பேசி இருக்கேன். ரத்தன் டாடா, நாராயணமூர்த்தி ஆகியோரும் என் திட்டத்துக்கு உதவ முன்வந்து இருக்காங்க. என்னோட நோக்கம், இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பொண்ணுங்களுக்கும் என் கண்டுபிடிப்பு போய் சேரணும். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத் துணியைப் பயன்படுத்தக் கூடாது...'' -
எல்லோரும் ஒரு நல்ல தொழில்முனைவோர் ஆக வேண்டும்

ஏற்றுமதி & இறக்குமதி

ஏற்றுமதி & இறக்குமதி
இறக்குமதி
ஓர் முன்னுரை
            ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் இறக்குமதி வணிகமும் ஆரம்பிப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஏற்றுமதி வணிகம் போலவே, இறக்குமதி வணிகமும் அதிக இலாபம் தரக்கூடிய வணிகமாகும். இறக்குமதியாளர் சரியான வழிமுறையை பின்பற்றினால் அதிக லாபம் பெறலாம். எப்படியிருந்தாலும், இறக்குமதி வணிகத்தின் நீண்ட கால வெற்றி மற்றும் லாபகரம், இறக்குமதியாளரின் சர்வதேச சந்தை மற்றும் அயல்நாட்டு சந்தையை அலசிப்பார்க்கும் அறிவு மற்றும் புரிந்து கொள்ளுதலைப் பொறுத்தே அமையும்.
இந்தியாவில் இறக்குமதி

இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் மத்திய ஊதியம் பெறக்கூடிய பயனாளிகள் மற்றும் அவர்கள் பலதரப்பட்ட பொருட்களுக்காக செலவிடும் அளவும் அதிகரிப்பதால், இறக்குமதி வணிகத்திற்கு அதிக அளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கியமான இறக்குமதிகள்:
தானியங்கள், உணவு எண்ணெய்கள், இயந்திரங்கள், உரங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள்.
இறக்குமதியாகும் மொத்த இறக்குமதிகள் 187.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உணவு எண்ணெய்கள்,  சர்க்கரை, காகிதம் மற்றும் காகிதக் கூழ், ரப்பர், இரும்பு மற்றும் தகரம் இந்தியாவின் இறக்குமதிகள் ஆகும்.
இறக்குமதி வணிகத்தை நிர்வகிக்கும் அமைப்புகள்:
  1. வணிக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம்
  2. அயல் நாட்டு வணிக பொது இயக்குநரகம்
  3. மத்திய சுங்கவரி துறை

இறக்குமதி வணிகத்துறை ஆரம்பிப்பதற்கான முன்நடவடிக்கைகள்:
பண்டக சந்தையைத் தேர்வு செய்தல்
            இறக்குமதி செய்வதற்கு முன் பண்டக சந்தையை தேர்வு செய்வது மிக முக்கியமானது. ஆய்வு செய்யும் போது பெறப்பட்ட பண்டக சந்தை தரவு மற்றும் தகவல்களைக் கொண்டு பண்டக சந்தை அறிக்கை தயார் செய்ய வேண்டும். சரியான சந்தையை தேர்ந்தெடுக்க பின்வரும் கேள்விகளுக்கு  பதிலளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
  1. இறக்குமதியாளர் இறக்குமதி செய்யும் பொருளை உள்நாட்டு சந்தையில் விற்க முடியுமா?
  2. இறக்குமதி செய்யப்பட்ட பொருள் லாபகரமானதா? மற்றும் நல்ல முறையில் விற்பனையாகுமா?
  3. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்  உள்நாட்டு சந்தையில் போட்டியை ஏற்படுத்துமா?

இறக்குமதியாளர் இறக்குமதி செய்யப்போகும்  பொருள் உண்மையிலேயே லாபம் தரக்கூடியதாக இருந்தால் மட்டுமே, மேற்கொண்டு அதில் ஈடுபடவேண்டும்.
இறக்குமதியாளர் இறக்குமதி செய்யலாம் என்று தீர்மானித்த பின்னரே, இறக்குமதி வணிகத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இறக்குமதி திட்டத்தை செய்யும் போது, இந்தியாவின் இறக்குமதியாளர் அயல்நாட்டு வணிக கொள்கை, வழிமுறைகள் 2004 – 09 ல்  குறிப்பிட்டுள்ள அரசின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள், நெறிமுறைகளை அலசி பார்த்து தீர்மானிக்க வேண்டும்.
இறக்குமதியாளர் ஐ.டி.சி – ஹெச்.எஸ் வகைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள ஏற்றுமதி அட்டவனையில் உள்ள பொருட்களை இறக்குமதி செய்வதால் இறக்குமதியாளர் இந்தியாவில் இறக்குமதி செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.சி – ஹெச்.எஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய இறக்குமதி பற்றிய அனைத்து வழிமுறைகளும், விதிமுறைகளும்  ஐ.டி.சி பிரிவு1-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. ஆனால் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் இந்திய அரசு, வணிக அமைச்சகத்தால் பெறப்பட்ட சிறப்பு அனுமதி மூலமே இறக்குமதி செய்ய முடியும்.
இந்தியாவின் மாநில வணிக நிறுவனம்:
சில பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமே இறக்குமதி செய்ய முடியும். அந்த வகையில் இந்தியாவின் மாநில வணிக நிறுவனம் தேவையான பொருட்களை உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படும் போதும், விலை நிலவரத்தை ஒரே மாதிரி வைத்துக் கொள்ளவும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய உதவுகிறது.
மாநில வணிக நிறுவனம் குறித்த நேரத்தில், குறித்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த முறையில் இந்த நிறுவனம் இறக்குமதி பொருட்களை கையாளுவதும், மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டும், 40 வருட அனுபவத்துடனும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் வனஸ்பதி, உணவு எண்ணெய்கள், பருப்புகள், ஹைட்ரோ – கார்பன்கள், உலோகங்கள், கனிமங்கள் மற்றும் உரங்களை இறக்குமதி செய்கிறது.
இறக்குமதி வணிகத்திற்கான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள்
  1. ஏற்றுமதி இறக்குமதி கொள்கை (1997 – 2002)
  2. வழிமுறைகளின் கையேடு
  3. எஸ்.ஐ.ஓ.என்
  4. ஐ.டி.சி – ஹெச்.எஸ் குறியீடுகள்
இந்திய அரசின் கீழ் இயங்கும் வணிக அமைச்சகம் அளித்த வெளியீடுகளில் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தரப்பட்டுள்ளன.
  1. ஏற்றுமதி இறக்குமதி கொள்கை,1997 – 2002.
31.03.1999 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  1. வழிமுறைகளின் கையேடு
  2. தரமான பொருட்களின் விதிகள், 1997 – 2002
  3. ஐ.டி.சி – ஹெச்.எஸ் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களின் வகைப்பாடு

புதன், 7 மே, 2014

விதம் விதமா மிதியடி செய்வோம


Matting will do nicely manner?

வீட்டுக்கு வீடு வாசல்படி...வாசல்படி உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிற அதி அத்தியாவசியமான ஒன்று மிதியடி. பழைய கோணிகளை மிதியடிகளாக உபயோகித்த காலம் மாறி, இன்று வாசலையே அழகாக்கும் அளவுக்கு விதம் விதமான மாடல்களிலும் மெட்டீரியல்களிலும் மிதியடிகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஹேமலதாவின் கைவண்ணத்தில் அழகழகான வடிவங்களில் மிதியடிகள் உருவாகின்றன!

‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். வேலைக்குப் போக வேண்டிய தேவையில்லைன்னாலும் பொழுது போகணுமேன்னு நிறைய கைவினைக் கலைகளைக் கத்துக்கிட்டேன். அதுல ஒண்ணுதான் மிதியடி பின்றது. சணல் கயிறு, பழைய துணி, புதுசா தைக்கிறதுல வீணாகிற துணிகள்னு எதைக் கொண்டும் மிதியடி பின்னலாம். மிதியடி என்ன கடைகள்ல கிடைக்காத பொருளான்னு கேட்கலாம். கடைகள்ல ரெடிமேடா வாங்கற மிதியடிகள் 3 மாசம் உழைக்கும்னா, நாம கைப்பட பின்ற மிதியடிகள் ஏழெட்டு மாசங்களுக்கு உழைக்கும்” என்கிறார் ஹேமலதா.

‘‘சணல் கயிறு கொண்டு பின்ற மிதியடிக்கு நிறைய வரவேற்பு உண்டு. அதற்கடுத்த இடம் துணிகளால் பின்ற ரகத்துக்கு. கடைசியாதான் பழைய துணிகள்ல செய்யற மிதியடிகளுக்கு. பழைய துணிகள்ல தைக்கிற மிதியடிகளை பெரும்பாலும் நம்ம வீட்டு உபயோகத்துக்குத்தான் வச்சுக்க முடியும். விற்பனை செய்ய முடியாது. விருப்பப் படறவங்க, பழைய துணிகளுக்கு சாயம் போட்டு, புதுசாக்கி, பிறகு மிதியடி செய்ய உபயோகிக்கலாம்.

சணல் கயிறு ஒரு கிலோ 20 ரூபாய்க்குக் கிடைக்கும். அதுல 4 மிதியடி பண்ணலாம். துணிகள்ல பண்ற மிதியடிகளுக்கு செலவு கம்மி. ஒருநாளைக்கு 5 மிதியடிகள் வரைக்கும் பின்னலாம். ஒரு மிதியடியை 40 முதல் 50 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற ஹேமலதாவிடம் 4 மாடல் மிதியடி வகைகளை தேவையான பொருட்களுடன் 2 நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.(95001 48840)

அன்பளிப்புப் பை


Will love gift bag




பரிசுப் பொருட்களைவிட அவற்றைச் சுமந்து வருகிற பைகளும் பெட்டிகளும் பல நேரங்களில் நம் கவனம் ஈர்க்கும். பரிசுப் பொருட்களுக்கு இணையாக  அந்தப் பைகளைக் கூடப் பத்திரப்படுத்துவோம். அப்படிப்பட்ட அழகுப்பைகளைத் தயாரிப்பதில் நிபுணி, அரக்கோணத்தைச் சேர்ந்த ஹேமாவதி!

‘‘ஒரு சின்ன சாக்லெட்டை அன்பளிப்பா கொடுத்தாக்கூட, அதையும் ஒரு அழகான அலங்காரப் பைக்குள்ள வச்சுக் கொடுக்கிறதுதான் இன்னிக்கு  ஃபேஷன். அப்படிக் கொடுக்கிறபோது அன்பளிப்போட மதிப்பு பல மடங்கு கூடும். பிளாஸ்டிக்கை தவிர்க்கணும்னு நினைக்கிறவங்களும், பெரிய  பிளாஸ்டிக் பைகள்ல அன்பளிப்புகளைப் போட்டுக் கொடுக்கிறதுக்குப் பதிலா இது மாதிரி சுற்றுச்சூழலுக்கு உகந்த மெட்டீரியல்கள்ல உருவாகிற  பைகளை உபயோகிக்கலாம்” என்கிற ஹேமாவதி தையல் மெஷினின் உதவியின்றி, முழுக்க முழுக்க கைகளாலேயே இந்தப் பைகளை  உருவாக்குவதாகச் சொல்கிறார்.

‘‘அன்பளிப்புப் பைகளுக்கான மெட்டீரியல்னு கேட்டாலே கடைகள்ல கிடைக்கும். அது தவிர பளபளா துணிகள், மேட் கிளாத்லயும் பண்ணலாம். லேஸ்,  குட்டிக்குட்டி பூக்கள், பசைனு இதுக்கான தேவைகள் ரொம்பக் கம்மி. 500 ரூபாய் முதலீடு போதும். கல்யாணங்கள்ல பீடா போட்டுக் கொடுக்கிற  குட்டிக்குட்டி பை, நிச்சயதார்த்தம், கல்யாணங்களுக்கான தாம்பூலப் பை, கொலுவுக்கான வெற்றிலைப்பாக்குப் பை, பிறந்தநாள் அன்பளிப்புக்கான பை,  சாக்லெட் பை... இப்படி ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு மாடல்ல செய்யலாம்.

பெரிய பைகளா இருந்தா ஒரு நாளைக்கு அஞ்சும், சின்னதானா 10 பைகளும் செய்யலாம். நம்ம கற்பனைக்கேத்தபடி பத்துக்கும் மேலான மாடல்கள்  பண்ண முடியும். விற்பனை வாய்ப்புக்கும் பஞ்சமே இருக்காது. உங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள ஃபேன்சி ஸ்டோர், கல்யாண கான்ட்ராக்டர், பிறந்த  நாள் பார்ட்டிகளை ஒருங்கிணைக்கிறவங்க... இப்படி பல இடங்கள்லயும் மாடல்களை காட்டி ஆர்டர் பிடிக்கலாம்.  அளவைப் பொறுத்து 8  ரூபாய்லேருந்து 15 ரூபாய் வரைக்கும் விற்கலாம்‘‘ என்கிற  ஹேமாவதியிடம் ஒரே நாள் பயிற்சியில் தேவையான பொருட்களுடன் சேர்த்து 5 மாடல்  பைகளை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (75984 91814)

மெழுகு விளக்கு மேஜிக்!



மாற Wax Magic Lantern!EPP Group Urges Governments to Use ...

தீபாவளியைத் தொடர்ந்து, கார்த்திகை தீபம், புத்தாண்டு என வெளிச்சத் திருவிழாக்கள் வரிசை கட்டி நிற்கும் நேரமிது. விதம் விதமாக விளக்கேற்றி  ஒளிரச் செய்வதன் மூலம் வீடே சுபிட்சமாகப் பிரகாசிக்கும். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன் செய்கிற மிதக்கும் மெழுகு விளக்குகள்  புதுமையானவை... அழகானவை!

‘‘நிறைய கைவினைக் கலைகள் தெரியும். அதுல மெழுகு உருவங்கள் செய்யறதும் ஒண்ணு. மெழுகுல பொம்மைகள் செய்திட்டிருந்த நான், அதோட  அடுத்தகட்டமா, விளக்குகள் செய்ய ஆரம்பிச்சேன். ரோஜா, செம்பருத்தி, சூரியகாந்தின்னு பூக்கள் வடிவ விளக்குகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கு.  அடுத்து பந்து வடிவ மெழுகுகளையும், ஜெல் கேண்டில்களையும் அதிகம் விரும்பறாங்க.  ஜெல் கேண்டில்கள் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். குட்டிக்  குட்டி கண்ணாடி டம்ளர்ல ஜெல் மெழுகை நிரப்பி, அப்படியே ஏத்தி வைக்கலாம். இந்த எல்லாமே எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்க  ஏற்றவை. இதையே இன்னும் கொஞ்சம் கிராண்டா கொடுக்கணும்னு விரும்பறவங்க, இதுலயே சென்ட் கலந்து செய்யப்படற மெழுகுவர்த்திகளை  விரும்பறாங்க. ஆப்பிள், கிரேப், லெமன், ஆரஞ்சுன்னு நிறைய வாசனைகள் கிடைக்குது’’ என்கிறார் சாந்தி.

வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாமாம். ‘‘மோல்டுக்கான முதலீடுதான் அதிகம். மெட்டல் மோல்டுன்னா 2  ஆயிரத்துக்கும், சிலிக்கான் மோல்டை 500 ரூபாய்க்குள்ளேயும் வாங்கலாம். மெட்டல் மோல்டு எத்தனை வருஷங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.  ஒருமுறை பண்ற முதலீடுதான்... மத்தபடி மெழுகு சிப்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு கிடைக்கும். அதுல 25 முதல் 30 விளக்குகள் பண்ணலாம்.

திரி, வாக்ஸ் கலர், சென்ட்டை எல்லாம் தேவைக்கேற்ப அப்பப்ப வாங்கிக்கலாம். 10 விளக்குகள் 50 ரூபாய்க்கும், சூரியகாந்தி, ரோஜா மாதிரியான  விளக்குகளை ஒன்று 10 ரூபாய்க்கும், பந்து வடிவ விளக்கை 25 ரூபாய்க்கும் கொடுக்கலாம். இதுல வேஸ்ட்டேஜ் கிடையாது. உடலை வருத்தற  உழைப்பு கிடையாது. 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிறவரிடம் ஒரே நாளில் 12 விதமான மெழுகு விளக்குகளை தேவையான பொருட்களுடன்  1,500 ரூபாய்  கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.  (99414 46275)

பஞ்சலோக நகைகளில் பிசியாகலாமா


busy in Panchaloha  jewelry

பெண்களின் விருப்பப் பட்டியலில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு அடுத்த இடம் பஞ்சலோக நகைகளுக்குத்தான். கவரிங் நகைகளைப்  போல பத்தே  நாட்களில் பல் இளிக்காது. பளீரென மின்னி, தன்னைப் போலி எனக் காட்டிக் கொள்ளாது. தங்கத்தோடு தங்கமாக  சமர்த்தாகப் பொருந்திப்  போவதுதான் பஞ்சலோக நகைகளின் சிறப்பம்சமே. ஐம்பொன் என்றும் அழைக்கப்படுகிற இந்த பஞ்சலோக  நகை விற்பனையில் பிசியாக  இருக்கிறார்  சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி!

‘‘என்னோட சொந்த உபயோகத்துக்காக வாங்கின பஞ்சலோக நகைகளைப் பார்த்துட்டு, நிறைய பேர் அவங்களுக்கும் அதே மாதிரி  வேணும்னு  கேட்டாங்க. அப்ப அந்த நகைகளை வாங்கி, வீட்லயே வச்சு விற்பனை பண்ணிட்டிருந்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது  தெரிஞ்சதும், நாமே ஏன்  செய்து விற்கக் கூடாதுனு தோணினது. முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டு, இப்ப தனியா கடையே வச்சு  விற்பனை பண்ற அளவுக்கு  வளர்ந்திருக்கேன். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்புனு அஞ்சு விதமான உலோகங்கள் கலந்து  செய்யறதாலதான் இது பஞ்சலோக நகை.

உடம்புல உள்ள சூட்டைக் குறைச்சு, டென்ஷன் இல்லாம வைக்கும். மோதிரம், தோடு, வளையல், சங்கிலி, கொலுசு, ஆரம், அட்டி கைனு எல்லா  அயிட்டங்களும் உண்டு. சிலது சுத்தமான ஐம்பொன்லயும், சிலது கவரிங் கலந்தும் வரும். தங்க நகைகளுக்கு  இணையா கல், நவரத்தினம் பதிக்கிறது  வரைக்கும் எல்லாம் இதுலயும் பண்ண முடியும்’’ என்கிறார் காந்திமதி. ‘‘ஐம்பொன் நகை களுக்கான மெட்டீரியல் முழுமை செய்யப்படாத  வடிவத்துலதான் கிடைக்கும். அதை வாங்கி, பஃப்பிங் மெஷின்ல ஃபைல் பண்ணி,  பாலீஷ் ஏத்தி, சரியான வடிவத்துக்குக் கொண்டு வரணும்.

முழுமை செய்யப்படாத நகைகள், பஃப்பிங் மெஷின், மோட்டார், பிரஷ், புஷ்... எல்லாத்துக்கும் சேர்த்து ரூ.7,500 முதல் 10 ஆயிரம்  வரை முதலீடு  தேவை...’’‘‘ஒரு நாளைக்கு ஒரே ஆளா வேலை பார்த்தா, 25 முதல் 50 பீஸ் வரைக்கும் பண்ணலாம். உதவிக்கு ஆள்  இருந்தா 200-300 பீஸ்  வரைக்கும் பண்ண முடியும். குறைந்தது 25 ரூபாய்லேருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் அயிட்டங்கள் இருக்கு.  30 சதவிகித லாபம் பார்க்கலாம்’’  என்கிறவரிடம் 2 நாள் பயிற்சியில் இந்தத் தொழிலின் நுணுக்கங்களை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (98404 30258)

வாவ் வாக்ஸ் கிராஃப்ட்!

Wow Wax Craft !



4 இட்லியும் மூன்று விதமான சட்னியும் 200 ரூபாய்... ஒரே ஒரு தோசை 150 ரூபாய்... ஒரு கேக் 500 ரூபாய்... இதெல்லாம் எந்த ஸ்டார்  ஹோட்டலில் என்று கேட்கிறீர்களா? இவற்றில் எதுவுமே சப்புக் கொட்டி சாப்பிடக் கூடியவை அல்ல. ஷோ கேஸில் வைத்து அழகு பார்ப்பவை.  யெஸ்... சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமாரின் கைவண்ணத்தில் உருவாகும் இவை அனைத்தும் மெழுகினால் செய்யப்படுகிற  அழகுப் பொருட்கள். வாக்ஸ் கிராஃப்ட் எனப்படுகிற இந்த முறையில், இட்லி, தோசை, சட்னி, கேக் தவிர, மைசூர்பாகு, லட்டு, பாதுஷா, குலோப்  ஜாமூன் உள்ளிட்ட எல்லா உணவு வகைகளையும் செய்ய முடியுமாம்!

‘‘வீடுகள்ல அழகுக்காக வைக்கலாம். புதுசா ஸ்வீட் ஸ்டால், ஹோட்டல் ஆரம்பிக்கிறவங்க, கடையோட வரவேற்புல அழகுக்காக இந்த மாதிரி மெழுகு  உணவுப் பொருட்களை வாங்கி வைக்கிறாங்க. நிஜ சாப்பாட்டை வச்சா, கொஞ்ச நேரத்துல பழசாயிடும்... கெட்டுப் போகும்... ஈ மொய்க்கும். மெழுகுல  செய்ததை வச்சா, வருஷக்கணக்கானாலும் அப்படியே இருக்கும். அழுக்கானாலும் அலசியோ, துடைச்சோ உபயோகிக்கலாம். பார்க்கிறவங்கக்கிட்ட அது  மெழுகுன்னு சொன்னாதான் தெரியும்’’ என்கிற சுதா, பிறந்த நாள், கல்யாணம், புதுமனைப் புகுவிழா போன்றவற்றுக்கு அன்பளிப்பு கொடுக்கவும் இந்த  வாக்ஸ் கிராஃப்டை பலரும் விரும்பி வாங்குவதாகச் சொல்கிறார்.‘‘பிறந்த நாளைக்கு கேக், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் மாதிரி செய்து கொடுக்கலாம்.

உணவுப் பொருட்கள் வேண்டாம்னு நினைக்கிறவங்க, ஊஞ்சல் ஜோடி, கடிகாரம் அல்லது கண்ணாடி பதிச்ச அலங்காரப் பொருட்களைக் கொடுக்கலாம்.  பட்டன் சிப்ஸ் வாக்ஸ், பாளம் வாக்ஸ், வாக்ஸ் கலர், அலுமினியப் பாத்திரங்கள், அடுப்பு... இதெல்லாம் இந்தக் கலைக்குத் தேவையான பொருட்கள்.  ஒரு கிலோ வாக்ஸ் 200 - 250 ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு கிலோவுல 25 ஸ்வீட்ஸ் அல்லது 2 ஊஞ்சல் செய்யலாம். இட்லி, தோசைக்கு அரை  மணி நேரம் போதும். ஐஸ்கிரீமுக்கு 10 நிமிஷம். ஒரு கப் ஐஸ்கிரீமை 100 ரூபாய்க்கும், 4 இட்லியும் சட்னியும் 200 ரூபாய்க்கும் கொடுக்கலாம்.  கணிசமான லாபம் நிச்சயம்’’ என்கிற சுதாவிடம் ஒரே நாள் பயிற்சியில் 600 முதல் 1,500 ரூபாய் வரையிலான கட்டணத்தில், இந்த வாக்ஸ்  கிராஃப்டை கற்றுக் கொள்ளலாம். ( 93823 32600)

பூசு மஞ்சள் புன்னகை!


Apply yellow smile!



நாகரிகத்தின் தாக்கத்தால் நாளுக்கொரு கலாசாரமும் பாரம்பரியமும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று பெண்களின் மஞ்சள்  தேய்த்துக் குளிக்கிற பழக்கம். மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள்.  ஆனாலும், மஞ்சளை மறக்காத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் பூசு மஞ்சள் தூள் தயாரிப்பில் பிசியாக  இருக்கிறார் கண்ணம்மா. குழந்தைகள், இளம்பெண்களுக்கு ஒரு  வகை, கொஞ்சம் வயதான பெண்களுக்கு ஒரு வகை என இரண்டு வித மஞ்சள் தூள்  தயாரிக்கிறார் இவர்.

‘‘நான் வீட்லயே உலக்கைல மஞ்சள் இடிச்சு உபயோகிச்சுத்தான் பழக்கம். கடைகள்ல வாங்கற மஞ்சள் தூள் சருமத்துல எரிச்சலை  உண்டாக்கிறதாகவும், வெள்ளைப் புள்ளிகளை ஏற்படுத்தறதாகவும் நிறைய பேர் சொன்னாங்க. அப்ப நாங்க தயார் பண்ணினதைக் கொடுத்து யூஸ்  பண்ணச் சொன்னேன். எல்லாருக்கும் திருப்தி. அப்படியே ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்கவும் அதையே பிசினஸா ஆரம்பிச்சுட்டேன். பிறந்த குழந்தை  நிறம் கம்மியா இருந்தா, கிராமங்கள்ல கஸ்தூரி மஞ்சள் தேய்ச்சுக் குளிப்பாட்டுவாங்க. தேமலைப் போக்கி, கரும்புள்ளி, வெண்புள்ளிகளை நீக்கி, சரும  நோய்கள் வராமத் தடுக்கிற குணம் அதுக்கு உண்டு.

பருத்தொல்லை வராம இருக்கவும் மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கத்தை இள வயசுப் பொண்ணுங்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். மஞ்சள் பூசணும்,  ஆனா, அது தெரியக் கூடாதுன்னு நினைக்கிற இளம் பெண்களுக்கும் ஏற்றது. கூடவே வெட்டிவேர், பூலாங்கிழங்கு சேர்த்து அரைக்கிறதால, ரோம  வளர்ச்சியும் இருக்காது.  மஞ்சள் பூசினது தெரியணும்னு நினைக்கிறவங்களுக்காக குண்டு மஞ்சள் நிறைய சேர்த்து அரைக்கிற இன்னொரு தூளும்  தயாரிக்கிறேன்’’ என்கிறார்.

‘‘நல்ல மஞ்சளைத் தரம் பிரிச்சுக் கண்டுபிடிக்கிறது, பதப்படுத்தி, என்னென்ன சேர்த்து அரைக்கிறது, எப்படி மார்க்கெட் பண்றதுங்கிற விவரங்களைக்  கத்துக்கலாம். 50 கிராம், 100 கிராம் பாக்கெட்டாவும், 1 ரூபாய் பாக்கெட்டாவும் போட்டு கடைகள், கோயில்கள்ல கொடுத்தாலே  அதிக லாபம்  பார்க்கலாம். ஒரு கிலோ 250 ரூபாய். கிலோவுக்கு 40 ரூபாய் லாபம் நிச்சயம்’’ என்பவர், தனக்கு ஏற்றம் தந்த இந்த பிசினஸை மற்றவர்களுக்கும்  கற்றுத் தரக் காத்திருக்கிறார். ஒரே நாள் பயிற்சி தான். கட்டணம் 200 ரூபாய். (95661 12724)

மாத்தி யோசிக்கும் பிசினஸ்மேன்கள்! - வெற்றிக்கு வித்திடும் வித்தியாசமான சூழல்கள்

ஒரு தொழில் ஓஹோவென வளர்வதற்கு முக்கியமான தேவை, அந்தத் தொழில் மூலம் கஸ்டமர்களுக்குக் கிடைக்கும் வித்தியாசமான அனுபவம்தான். இந்த அனுபவம் மட்டும் ஒரு கஸ்டமருக்கு பிடித்துப்போய்விட்டால், அந்த கஸ்டமர் அந்த நிறுவனத்தைத் தேடி அடிக்கடி வருவார் என்பதே பிசினஸ் ரகசியம். சென்னையில் வித்தியாசமான சூழலைத் தரும் சில நிறுவனங்களை தேடிப்போய், அந்தச் சூழலை உருவாக்கும் ஐடியா எப்படி பிறந்தது என்று விசாரித்தோம். நாங்கள் முதலில் கோடம்பாக்கத்தில் உள்ள டவுன்பஸ் ஹோட்டலுக்குச் சென்றோம்.
கோடம்பாக்கத்தின் அடையாளம்!
பெயருக்கேற்ப முழு ஹோட்டலை யும் டவுன்பஸ் வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். உண்மையான பஸ் போன்றே சக்கரம், கண்ணாடி ஜன்னல், சைடுமிரர் என்று இருக்கிறது வெளிப்புறம். அப்படியே உள்ளே சென்றால் பஸ்ஸில் உள்ளது போன்றே உட்காரும் சேர் உள்ளது. வெளியே காத்திருக்கும் இடத்தில் உள்ள சேர்களும் இதே வடிவம்தான். மேற்புறத்தில் கைபிடி கம்பிகளையும் பஸ்ஸில் உள்ளதுபோன்றே இரண்டு வரிசைகளில் டேபிள்களையும் அமைத்திருக்கிறார்கள். சாப்பாடு மெனுவில்கூட 'டவுன்பஸ் சூப்பர் ஃபாஸ்ட்’, 'டவுன்பஸ் எல்.எஸ்.எஸ் ஸ்பெஷல்’ என வெரைட்டியான உணவு வகைகளைத் தருகிறார்கள்.
டவுன் பஸ் ஹோட்டலின் உரிமையாளர் வேலுவிடம் பேசினோம். ''எங்க அப்பா ஏகநாதன் பல்லவன் பஸ் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். 2008-ம் ஆண்டு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என யோசித்தபோது எங்க அப்பாதான், 'இந்தமாதிரி பஸ் வடிவத்தில் அமைத்தால் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடைய டிரைவர் வேலைக்கும் அடையாளமாக இருக்கும்’ எனச் சொன்னார். அவரது  விருப்பப்படியே இந்த ஹோட்டலை அமைத்தேன்.
கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹோட்டலை இப்படி வித்தியாசமாக வடிவமைத்தபோது அதுவே எங்களுக்கு ஒரு பெரிய விளம்பரமாக மாறியது. எங்கள் கடை கோடம்பாக்கத்தின் அடையாளமாகத் திகழ்வது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்தான்'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
வித்தியாசமான முகப்புகள்!
அடுத்து, நாங்கள் சென்றது போத்தீஸ் ஜவுளிக் கடைக்கு. போத்தீஸின் ஸ்பெஷாலிட்டியே பண்டிகைகள் மற்றும் பருவகாலத்துக்கேற்ப கடையின் இன்டீரியர்களை மாற்றுவது மற்றும் கடையின் முகப்பில் வித்தியாசம் காட்டுவதும்தான். இதன்மூலம் தங்களது கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த நிறுவனம். தீபாவளி, சம்மர் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் ஆடித் தள்ளுபடி என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப முகப்புத் தோற்றத்தையும் உள்ளே இருக்கும் இன்டீரியர் டிசைனையும் இந்த நிறுவனம் மாற்றத் தவறுவதில்லை.
அதிலும் குறிப்பாக, சம்மர் சீஸனில் பசுமை கொண்டாட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனம் அமைக்கும் மாற்றங்களை மக்கள் கவனிக்காமல் இருக்க முடிவதில்லை. கடையின் முன்புறம் செடிகளை வளைவாக அமைக்கிறார்கள். வாடிக்கையாளர் களுக்கு இலவச மரக்கன்றுகள், உள்ளே வருபவர்களுக்கு குடிக்க மோர், லஸ்சி போன்றவற்றைத் தருகிறார்கள்.
இதுபற்றி போத்தீஸின் விளம்பரப் பிரிவு மேனேஜர் ஆரோக்கியராஜுடன் பேசினோம். ''ஒவ்வொரு சீஸனுக்கேற்ப இப்படி ஏதாவது வித்தியாசமாக செய்வதால், வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர முடிகிறது. இந்த வித்தியாசமான அனுபவத்துக்காகவே எங்கள் கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்கள் பலர்'' என்றார் அவர்.
திகில் தரும் ராக்!
'தி ராக் ரெஸ்டாரன்ட்’ - சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் இந்த ஹோட்டலின் நுழைவு வாயிலை குகை வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். கதவு ஒரு மனித குரங்கு பொம்மை மாதிரி இருக்கிறது. உள்ளே சென்றால், ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்துவிட்ட மாதிரி ஓர் அனுபவம்.  குறுகலான பாதைகள், ஆதிமனிதனின் சிலைகள், தீப்பந்தம் போன்ற லைட்கள், சுற்றிலும் பாறைகளைச் செதுக்கியது போன்ற அமைப்பு, இருட்டறைகள், மரத்தூண்கள் என வித்தியாசமான சூழலை அனுபவிக்க முடிகிறது. இங்கே கிடைக்கும் உணவுப்பொருட்களும் இப்படி வித்தியாசமாக இருக்குமோ என்று கேட்டால், அப்படி எல்லாம் இல்லை; எல்லா உணவுவகைளும் எங்களிடம் கிடைக்கும் என்கிறார்கள் இங்கு பணிபுரியும் ஊழியர்கள்.
இந்த ஹோட்டலின் மேனேஜர் ரவிச்சந்திரனுடன் பேசினோம். ''2009-ம் ஆண்டு இதன் உரிமையாளர் கலைவாணன் மற்ற ரெஸ்டாரன்ட்கள் மாதிரி அல்லாமல் வாடிக்கையாளர்களைக் கவருகிற மாதிரி புது ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க நினைத்தபோது இப்படி அமைக்க முடிவெடுத்தார். வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் திருப்தியை விளம்பரமாக்குவது தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்று எண்ணினோம். இதை அமைப்பதற்குக் கொஞ்சம் செலவு அதிகம்தான். ஆனாலும், வருகிற வருமானத்துக்குக் குறையில்லை. நாங்கள் வித்தியாசமாக அமைத்திருக்கும் சூழ்நிலை எங்களது கஸ்டமர்களுக்குப் பிடித்துப்போகவே, சென்னையில் ஆறு இடங்களில் இதேமாதிரி கிளைகளை வடிவமைத் திருக்கிறோம்'' என்றார்.
கஸ்டமர்கள்தான் முதுகெலும்பு!
வித்தியாசமான சூழலை உருவாக்கி வெற்றிகரமாக பிசினஸ் செய்துவரும் நிறுவனங்கள் பற்றி பிராண்ட்காம் நிறுவனத்தின் சிஇஓ-வான ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம். ''ஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடக்கவேண்டுமெனில், இந்த வித்தியாசமான அணுகுமுறை கட்டாயம் வேண்டும். இதுவே அந்த நிறுவனத்துக்கு வெற்றி தேடித்தரும் விளம்பரமாகவும் அமையும். வித்தியாசமான சூழலை அமைத்துத் தரும்போது அது வெறும் விளம்பர உத்தியாக மட்டும் இல்லாமல், கஸ்டமர்களுக்கு திருப்தி தருகிறமாதிரி இருப்பது நல்லது.
வித்தியாசம் காட்டும் மருத்துவமனை!
இதற்கு பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையை உதாரணமாக சொல்வேன். பொதுவாக, மருத்துவமனையில் ஐசியூ வார்டுகளை மற்றவர்களுக்குத் தெரியாதபடி அமைத்திருப்பார்கள். ஆனால், இந்த மருத்துவமனையில் மட்டும் ஐசியூ வார்டில் இருப்பவருடைய நன்மைக்காகவும், அவரது உறவினர்களின் திருப்திக்காகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்படி, ஐசியூ வார்டு  அமைத்திருக்கிறார்கள். இதனால் நோயாளிக்கு உறவினர்களைப் பார்க்க முடியவில்லை என்கிற கவலை இல்லை. இதனால் நோயாளிகளும் அவர்களை பார்க்க வருகிறவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
யதார்த்தமாக இருக்க வேண்டும்!
இப்படி வித்தியாசமான சூழலை உருவாக்கும்போது கஸ்டமர்கள் முகம் சுழிக்கிறமாதிரி எதையும் செய்துவிடக் கூடாது. நமது வாழ்க்கையின் யதார்த்தமான விஷயங்கள் கஸ்டமர்களுக்கு நினைவூட்டுகிற மாதிரி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வித்தியாசம் என்கிற பெயரில் கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னால், பலருக்கும் அது சங்கடமான அனுபவமாகவே இருக்கும்.
ஆனால், கஸ்டமர்களின் மனத்தில் தைக்கிறமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும்போது, அதுவே அந்த நிறுவனத்துக்கு பெயர் பெற்றுத்தரும் விளம்பரமாக மாறிவிடுகிறது. அதன்பிறகு அந்த நிறுவனம் விளம்பரத்துக்காக பெரிதாக செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
தொழில் செய்பவர்கள் கவனத்துக்கு!
வித்தியாசமான சூழலைத் தருகிறோம் என விளம்பரம் செய்துவிட்டு, அதைப் பார்த்து கஸ்டமர்கள் கடையைத் தேடிவந்தால், அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் சிறிய அளவிலான கடை என்றாலும் அங்கு தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி சாதாரணமாக இன்னொருவருடன் பேசும்போதும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்வார்கள் கஸ்டமர்கள்.
மோசமான அனுபவமாக இருந்தால், அதையும் மறக்காமல் மற்றவர்களிடம் சொல்லி, சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து, வரநினைக்கிற ஒன்றிரண்டு கஸ்டமர்களையும் வராமல் தடுத்துவிடுவார்கள். எனவே, வெறும் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், கஸ்டமர்களை உபசரிப்பதிலும் கவனம் காட்டினால்தான் உங்கள் ஸ்மார்ட் ஐடியா நிச்சயம் வெற்றி பெறும்'' என்றார் அவர்.
தொழிலில் ஜெயிக்க நினைப்பவர்கள் இந்த விதத்தில் யோசித்து வெற்றி