இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

ஞாயிறு, 12 மே, 2013


பல வகையான ஐஸ் கிரீம் எப்படி தயாரிப்பது-வீட்டில் வைத்து செய்து விற்பனை செய்யலாம
ஃபளூடாமுதலில் துளசி விதையை தண்ணீரில் போட்டுஊறவைக்கவும்.
    * 
    * பாலையும் தண்ணீரையும் கலந்து காய்ச்சிசர்க்கரையை கலந்து ஆறவைத்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும்.
    * 
    * வேகவைத்த அரிசி நூடுல்ஸை குளிர்ந்த நீரில்போட்டு அலசி வடித்து வைக்கவும்.
    * 
    * பிறகு அரவை இயந்திரத்தில் ஐஸ்க்ரீமை போட்டுசிறிது பாலை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.தொடர்ந்து எல்லாப் பாலையும் சேர்த்து ஒரு சுற்றுசுற்றி ஒரு பெரிய கோப்பையில் ஊற்றி ரோஸ்எசன்ஸை கலந்து வைக்கவும்.
    * 
    * பிறகு நான்கு பெரிய பீங்கான் குவளையில் ஊறியதுளசி விதை சிறிதைப் போட்டு பிறகு சிறிது நூடுல்ஸைபோட்டு தயாரித்த பால் கலவையை அதன் மேல் ஊற்றிநீண்ட கரண்டியால் இலேசாக கலந்து ஜில்லென்றுபரிமாறவும்.யோக்கட் * ஒரு பாத்திரத்தில் பால்சீனி இரண்டையும் போட்டுநன்றாக கரைத்து கொள்ளவும்இன்னொரு பாத்திரத்தில்ஜெலற்றீனை போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டிகொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.

    * 

    * அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அந்தபெரிய பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால்உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்கவைக்கவும்.

    * 

    * அதன் பின்பு பாலின் வெப்பநிலையை தேமாமீற்றரினால் அளக்கவும்பாலின் வெப்பநிலை 90 க்குவந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    * 

    * அதன் பின்பு 30 நிமிடத்திற்கு அடுப்பிலே வைத்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.

    * 

    * பால் ஆற தொடங்கும் போது தேமோ மீற்றரினால்அளக்கவும்பாலின் வெப்பநிலை 60க்கு வந்தபின்புஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்துஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    * 

    * அதன் பின்பு பாலின் வெப்பநிலை 40 அடையும் போதுயோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாககலக்கவும்பின்பு கலறிங்எசன்ஸ் கலந்து யோக்கற்கப்பில் ஊற்றி 40 வெப்பநிலையில் 5 மணித்தியாலம்இக்குபேற்றரில் வைக்கவும்.

    * 

    * யோக்கற் இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்கவும் பின்பு எடுத்து 24 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும். பின்பு எடுத்து அறை வெப்பநிலையில் 2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.ஜெலி ஐஸ் கிரீம்ஜெல்லி பவுடரை அரை கோப்பை கொதிக்கும் நீரில்கரைத்து ஆறவிடவும்பாலை நன்றாகக் காய்ச்சிசர்க்கரை கலந்து ஆறவிடவும்.இரண்டும் ஆறிய பிறகு ஒன்றாக்கி கடைந்த கிரீம்,எஸன்ஸ் சேர்த்து குளிர்விக்குவும்வண்ணமயமானஜெல்லி ஐஸ் கிரீம் தயார்.அவல் ஆரஞ்சுப்பழ ஐஸ் கிரீம்அவலை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும், நீரில் கழுவி, இரண்டு நிமிடம் ஊறவிட்டு கையால் நன்கு பிசறி வைக்கவும் (தண்ணீரை வடித்துவிட்டு).பால் எடுத்துக் கொண்டால் அதை சுண்டக்காய்ச்சி ஆற வைத்து சர்க்கரையைப் போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
மில்க் மெய்ட் எடுத்துக் கொண்டால் சர்க்கரை சேர்க்காமல் காய்ச்சி ஆறவிட்டு எடுத்துக் கொள்ளவும்ஜி.எம்.எஸ்.ஐ கால் கோப்பை வெதுவெதுப்பான பாலில் நன்றாகக் கரையவிட வேண்டும். பின் ஜெலடீனை அரைக்கோப்பை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கரைய விட வேண்டும்.
ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் ஐஸ் கிரீம் ஸ்டெபிலைஸரைக் கலந்து வைக்கவும். தயார் செய்திருக்கும் சர்க்கரை கலந்த பால் அல்லது மில்க் மெய்ட்டில் ஜி.எம்.எஸ்.ஐஸ் கிரீம் ஸ்டெபிலைசர், ஜெலடின், கிரீம், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, ட்டி ஃப்ரூட்டி மற்றும் அவல் இவற்றை நன்கு கலந்து, ஐஸ் கிரீம் கப்புகளில் விட்டு, ஃப்ரீஸரில் வைக்கவும் தேவைப்படும்போது பரிமாறலாம்
காபி ஐஸ் கிரீம்ஐஸ் கிரீம் விரும்பாத குழந்தைகள் இருக்க முடியாது. அதிலும் கோடை காலத்தில் பெரியவர்களும் விரும்புவது ஐஸ் கிரீம் வகைகளை. 
கடையில் பெரியவர்களும் விரும்புவது ஐஸ் கிரீம் தரம் எப்படி இருக்குமோ, ஏதாவது கெடுதல் செய்து விடுமோ என்ற எண்ணம் இருப்பவர்களுக்காக வீட்டிலேயே தரமான ஐஸ் கிரீம் தயாரிப்பதற்கான செய்முறைகள் தரப்பட்டுள்ளன.
ஐஸ் கிரீம் தயாரிக்கும் போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை.ஐஸ் கிரீம் செய்ய வேண்டும் என விரும்புகிறவர்கள் முன்னதாகவே ஃப்ரிட்ஜை டீப்ராஸ் செய்தால் ஐஸ் கிரீம் மிகவும் சீக்கிரமாக செட்டாகும்.
ஐஸ் கிரீம் ஃபிரிட்ஜில் வைக்கும்போது மூடி வைக்க வேண்டும். ஃப்ரீஸரில் மட்டுமே வைக்கவும்.ஐஸ் கிரீம் தயாரிக்க தரமான எஸன்சை பயன்படுத்த வேண்டும். ஐஸ் கிரீமில் ஜெலட்டின் என்ற ஒரு பொருளை சேர்ப்பர். ஜெலட்டினுக்கு பதிலாக சைனா கிராஸும் சேர்க்கலாம்.
சில சமயம் வீட்டில் ஐஸ் கிரீம் செய்யும்போது கடையில் வாங்குவது போல இல்லாமல் க்ரிஸ்டல்களாக இருக்கும். அவ்வாறு வராமல் இருக்கத் தேவையான பொருள்களை கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின் ஒரு முறை எடுத்து மீண்டும் மிக்ஸியில் அடித்து வைத்தால் ஐஸ் கிரீம் நன்றாக வரும்.
பில்டர் காபி சூடாக இருக்கும்போதே அதில் கோகோ பவுடரை நன்கு கலந்து கொள்ளவும். பாதி பாலில் சோளமாவை கலந்து குழம்பாக வரும் வரை மிதான தீயில் வைத்து கிளறி எடுக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் பாலேட்டுடன் கலந்து 5 நிமிடம் நன்கு அடித்துக் கொள்ளவும். கலவையை கப்புகளில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்துக் குளிர விடவும். புது சுவையுடன் காபி ஐஸ் கிரீம் தயார்.கலர்புல் பழ சாலட்பழத்துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். கிரீமைத் தவிர்த்து சர்க்கரையும் மீதியுள்ள பொருட்களையும் சேர்த்து முள் கரண்டியால் நன்றாகக் கலக்கவும்.
பிறகு கிரீம் சேர்க்கவும்.பாதாம் முந்திரி மேலே தூவவும். கலர்புல்லான, சுவையான பழ சாலட் தயார்.
பிஸ்தா ஐஸ்கிரீம்பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில்பாலை ஊற்றி, காய்ச்சவும். 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்துகொதிக்கும் பாலில் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரையையும் சேர்த்துகரையும் வரை கொதிக்கவிட்டு, அடுப்பில் வைத்து இறக்கி நன்றாக ஆறவிடவும். எசன்ஸும்கலரும் சேர்க்கவும். இந்தக் கலவையை, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடித்து,க்ரீமை சேர்க்கவும். பிறகு இந்தக் கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம்கழித்து, வெளியே எடுத்து மறுபடியும் ‘பீட்’ செய்யவும். உடைத்த பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும்.ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூடி, ஃப்ரீஸரில் வைக்கவும்.
ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம்கோவாவை ஃப்ரிட்ஜில் வைத்து, கெட்டியானதும் எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.அத்துடன் மைதாவைக் கலந்து பிசையவும். தண்ணீர் சேர்க்காமல் சோடா உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து பாகு காளிணிச்சவும். (சர்க்கரை உருகி கொதி வரும் வரை காய்ச்சினால் போதும்).பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுத்து, ஜீராவில் போடவும். குங்குமப்பூவைக் கரைத்து, அதை குலோப்ஜாமூன் + ஜீராவுடன் கலக்கவும்.பிறகு எசன்ஸையும் கலந்து, குலோப்ஜாமூனுடன் ஒரு கரண்டி ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும். வித்தியாசமான ‘ஜில்’ ஸ்வீட் & ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம்.பப்பாளி ஆப்பிள் ஐஸ்கிரீம்பழங்களின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கவும். ஐஸ்கிரீமுடன் தேன், சர்க்கரை,பழத்துண்டுகள் சேர்த்து கலந்து உடனே பரிமாறவும். குளிர வைத்தும் சாப்பிடலாம்.முதலீடுகிரீம் உற்பத்திக்கு தேவையான பாய்லர் மெஷின் ரூ.1.5 லட்சம், ஹோமோஜினேஷன் மெஷின் ரூ.2 லட்சம், ஏஜிங்வெட் மெஷின் ரூ.2 லட்சம், மெஷின்களை நிறுவ 20க்கு 60 அடி நீள, அகலமுள்ள  கட்டிடத்துக்கு அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம், ஐஸ் ப்ரீஸர் ரூ.15 ஆயிரம் என கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.85 லட்சம் தேவை.
உற்பத்தி செலவு: தினசரி 200 லிட்டர் கிரீம் தயாரிக்க ரூ.10 ஆயிரம் வீதம் மாதம் ரூ.3 லட்சம். வாடகை, மின்கட்டணம், ஊழியர்கள் 4 பேர் சம்பளம் ஆகியவற்றுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் என மாதம்தோறும் உற்பத்தி செலவுக்கு ரூ.3.5 லட்சம்.
துவக்கத்தில் கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ.9.35 லட்சம் வேண்டும்.
ஐஸ் கிரீம் பார்லர் மட்டும் வைக்க சாப்டி மெஷின் ரூ.3 லட்சம், இன்டீரியர் டெக்கரேஷன் ரூ.2 லட்சம். 10க்கு 20 அடி நீள, அகலமுள்ள கடை வாடகை அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம் என ரூ.5.5 லட்சம் தேவை.
பார்லருக்கு மாத செலவு மின்கட்டணம், 2 ஊழியர் சம்பளம், வாடகை ஆகியவற்றிற்கு மாதம் ரூ.20 ஆயிரம். விற்பனைக்குத் தேவையான வெண்ணிலா க்ரீம் 600 லிட்டர் ரூ.30 ஆயிரம். கப், கோன், ஸ்ட்ரா மற்றும் பல்வேறு வகை எசென்ஸ் ஆகியவை ரூ.5 ஆயிரம் என ரூ.55 ஆயிரம் தேவை. பார்லர் வைக்க துவக்கத்தில் ரூ.6.05 லட்சம் வேண்டும். உற்பத்தியோடு பார்லரும் சேர்த்து வைக்க ரூ.15.4 லட்சம் தேவை.
இயந்திரங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், உற்பத்தி பொருட்கள் பெரு மற்றும் சிறு நகரங்களிலும் கிடைக்கிறது.பராமரிப்புஒரு மணி நேர பயணத்தில் சப்ளை செய்யும் இடங்களுக்கு ஐஸ் ப்ரீஸர் மூலம் எடுத்து செல்லலாம். அதற்கு மேலான தூரத்துக்கு மைனஸ் 80 டிகிரி வெப்பநிலை நிலவும் வகையில் டிரை ஐஸ்களை, பெட்டிகளை சுற்றி வைத்து கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் ஐஸ் கிரீம் உருகாமல் இருக்கும். ஐஸ் உருகிவிட்டால் அதில் பாக்டீரியா உருவாகும். பின்னர் மீண்டும் ப்ரீஸரில் வைத்தாலும், சாப்பிடுபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, சளி பிடிக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும்.வெப்பநிலை முக்கியம்ஐஸ்க்ரீமில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் உள்ளது. உடலுக்கு தேவையான சக்தி அளிக்க கூடியது. பொதுவாக ஐஸ்கிரீம் உடலுக்கு உஷ்ணம் தருபவை. அவற்றை குளிர் மற்றும் மழை காலத்தில் சாப்பிட்டால் உடல் கதகதப்பாக இருக்கும். ஹார்டு ஐஸ் கிரீம்களை மைனஸ் 30 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்காவிட்டால் பாக்டீரியா உருவாகும் வாய்ப்புள்ளது. மைனஸ் 5 டிகிரியுள்ள சாப்டி ஐஸ் கிரீம்கள் அனைவருக்கும் பாதுகாப்பானது. குளிர், மழை காலத்தில் சாப்பிட்டாலும் சளி பிடிக்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக