இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

வியாழன், 20 மார்ச், 2014

பேக்_தயாரிப்பு!

எல்.கே.ஜி முதல் உயர்கல்விப் படிப்பு வரை அத்தியாவசிய தேவைகளில் ஒன்று, ஸ்கூல் பேக். புத்தகங்கள், நோட்டுகள், லேப்டாப் என அனைத்துவகையான பயன்பாட்டுக்கும் ஏற்றவகையில் நல்ல, தரமான, உறுதியான பல வண்ண பைகள் தயாரிப்பதும் வருமானம் தரும் தொழில்களில் ஒன்று.

ஸ்கூல் பேக் தவிர, அன்பளிப்பு பை, பெண்களுக்கான ஹேண்ட்பேக், திருமண அன்பளிப்பு பை, டிராவல் பேக் என எல்லா இடங்களிலும் இந்தத் தொழிலுக்கான வாய்ப்புகள் பிரகாசமானது. எனவே, இந்த வாரம் இந்த பை தயாரிப்பு தொழிலுக்கான திட்ட அறிக்கை குறித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு பையும் பல வண்ணங்களில், பல வடிவங்களில் இருக்க வேண்டும். டிசைனுக்கு ஏற்பவே மார்க்கெட்டில் இடம்பிடிக்க முடியும். சாதாரணமாக நைலான் ஃபேப்ரிக், ரெக்ஸின், காட்டன் துணி, கேன்வாஸ் துணி எனப் பல மெட்டீரியல்களைக் கொண்டு இந்த பைகள் தயாரிக்கப் படுகின்றன. எனினும், ரெக்ஸின் மெட்டீரியலைக்கொண்டு பைகள் தயாரிப்பது குறித்து மட்டுமே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ரெக்ஸின் மெட்டீரியல் தவிர, ஜிப்புகள், சோல்டர் டேப், பக்கில்ஸ் போன்றவை பல நிறங்களில், பல அளவுகளில் தேவைப்படும். ஒவ்வொரு டிசைனுக்கேற்ப மெட்டீரியலை கட்டிங் செய்துகொள்ள வேண்டும்.

இதற்கேற்ப ஓர் அட்டையில் மாடல் செய்துகொண்டு கட்டிங் இயந்திரத்தின் உதவியால் மெட்டீரியலை பல பாகங்களாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட பாகங்களை இணைத்து, ஜிப் வைத்து தைத்து இணைப்புக்கொடுக்கப்படும்.

மொத்தமாகத் தைத்தபிறகு தலைகீழாக மாற்றி, அதாவது தையல்கள் அனைத்தும் உட்புறம் செல்லும்படி செய்துவிட்டால் பை தயாராகிவிடும்.

தேவையான மூலப்பொருட்கள்!

ரெக்ஸின் கேன்வாஸ், நைலான் ஃபேப்ரிக், பக்கில்ஸ், ஜிப்புகள், நூல், டேப், குறைந்தபட்சம் 10 தையல் இயந்திரம்.
திட்ட அறிக்கை! (ரூ.)
10 இயந்திரங்கள் உள்ள தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க...

10 இயந்திரங்கள் மற்றும்
கட்டிங் இயந்திரம் : 2.50 லட்சம்
கட்டிங் டேபிள் மற்றும்
இதர உப பொருட்கள் : 1.50 லட்சம்
நடைமுறை மூலதனம் : 6 லட்சம்
மொத்தம் : 10 லட்சம்
இந்தத் தொழில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் நீட்ஸ் திட்டம் இரண்டிலும் ஊக்குவிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு திட்டத்தில் மானியம் பெற முடியும்.
நமது மூலதனம் 5% : 0.50 லட்சம்
மானியம் 25% : 2.50 லட்சம்
வங்கிக் கடன் : 7 லட்சம்

மூலப்பொருட்கள் செலவு!

ஒரு பை தயாரிக்க ஃபேப்ரிக், ஜிப், டேப், நூல் என அனைத்தும் சேர்த்து மொத்த செலவு ரூ.230 - 240 வரை ஆகும். நாம் ரூ.240 என்று கணக்கு வைத்துக்கொள்வோம். ஒரு நாள் உற்பத்தி 150 பைகள் எனில், மாதத்துக்கு 25 வேலை நாட்களுக்கான மூலப்பொருட்கள் செலவு ரூ.9 லட்சம் (3,750ஙீ240 = 9,00,000)

விற்பனை வருமானம்!

ஒரு தையல் இயந்திரத்தின் மூலம் தினசரி 15 - 20 பைகள் வரை தயாரிக்க முடியும். நாம் 15 பைகள் என்று கணக்கு எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் ஒருநாள் உற்பத்தி 150 பைகள். மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிடும்போது மொத்தம் 3,750 பைகள் தயாரிக்க முடியும்.
பைகளின் விற்பனை விலை டிசைனைப் பொறுத்து மாறுபடும். நாம் விற்பனை விலை ரூ.300 என்று கணக்கு வைத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் ஒரு மாத விற்பனை வருமானம்: 3,750ஙீ300 = 11,25,000 (நாம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் சந்தை விலை ரூ.500-600 வரை இருக்கும்!).

செலவு விவரங்கள்! (ரூ.)
மின்சாரம் 5 ஹெச்.பி : 2,000
பணியாளர் சம்பளம்
மேற்பார்வையாளர் (1) : 8,000
தையல் பணியாளர்கள் : 10X6000 = 60,000
வேலையாட்கள் : 10X5000 = 50,000
விற்பனையாளர் (1) : 8000
மொத்தம் : 1,26,000
மொத்த செலவு! (ரூ)
மூலப்பொருட்கள் : 9,00,000
வாடகை : 10,000
மின்சாரம் : 2,000
சம்பளம் : 1,26,000
கடன் வட்டி (12.5) : 7,300

கடன் தவணை:

(60 மாதம்) : 11,700
இயந்திரப் பராமரிப்பு : 5,000
விற்பனை செலவு : 5,000
மேலாண்மை செலவு : 5,000
தேய்மானம் : 3000
மொத்த செலவு : 10,75,000
________
ஆக, மொத்த வரவு : 11,25,000
மொத்த செலவு : 10,75,000
________
லாபம் : 50,000
படங்கள்: தே.தீட்ஷித்
(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், (HP:9345104264) திட்டமேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக