என் பெற்றோர்கள் சொத்து சேர்த்துவைக்கவில்லை; என் நண்பர்கள் என்னைக் கைதூக்கிவிடவில்லை; என் மனைவி என் முயற்சிகளுக்குக் கைகொடுக்கவில்லை; என் உறவினர்கள் எனக்கு ஆதரவு காட்டவில்லை; என் முதலாளி என்னை முன்னேறவிடவில்லை; என் பாஸ் எனக்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார் என மற்றவர்கள் மீது பணம் சம்பாதிக்க முடியாததற்கான பழியினைப்போட முயற்சிக்காதீர்கள். பழிபோட ஆரம்பிக்கிற நேரத்திலேயே உங்கள் வாழ்க்கையை முடிவு செய்வதற்கான சக்தியை நீங்கள் இழக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இதனை மனமார உணர்ந்துகொண்ட நிமிடமே நீங்கள் மாற்றத்தை நோக்கி அடியெடுத்துவைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். பணரீதியான தோல்வியும் சரி, வெற்றியும் சரி ஒரேநாளில் யாருக்கும் வந்துவிடுவதில்லை. தொடர்ந்து செய்துவரும் சிறுசிறு காரியங்களினாலேயே வருகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பணம் நோக்கிய உங்கள் பயணத்தை உடனடியாக ஆரம்பியுங்கள்.
|
திங்கள், 17 மார்ச், 2014
பயணத்தைத் தொடங்குங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக