அவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால் நகர்ப்புறங்களில் சேமியாவைப் பயன்படுத்துபவர்கள் அதிகம்!
காலை உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது சேமியா. அவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால், நகர்ப்புறங்களில் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உற்பத்தி நடைமுறை!
சுத்தமான மைதா மாவை கலவை இயந்திரத்தில் கொட்டி, தேவையான அளவுக்குத் தண்ணீர்விட்டு மாவு பதமாக வந்ததும் அதை எடுத்து சேமியாவுக்கான அச்சு இயந்திரத்தில் கொட்டித் தயாரிக்க வேண்டியதுதான். அச்சு இயந்திரத்திலிருந்து வெளிவரும் சேமியாவை இதற்கென உள்ள தாங்கியில் தொங்கவிட்டு, அதை நீராவியில் வேகவைக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி, வேகவைக்க வேண்டும். பிறகு அதைச் சூரியஒளியில் காயவைக்க வேண்டும். நவீன வெப்பக் கூடாரம் அமைத்துக்கொண்டால், இன்னும் விரைவாகச் சேமியா உலரும். இப்படிப் பதப்படுத்தப்பட்ட சேமியாவை பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான்.
இடத் தேவை!
மூலப்பொருள் மற்றும் தயாரான பொருட்களை ஸ்டாக் வைக்க ஓர் அறை, இயந்திரம் வைக்க ஓர் அறை என இரண்டு அறைகள் போதும். பாய்லர் பெட்டகத்தைக் (நீராவி இயந்திரம்) கட்டடத்துக்கு வெளியில் வைத்துக்கொள்ளலாம். தவிர, சூரிய ஒளியில் உலர்த்த தளம் வேண்டும். தளத்தில் வெப்பக் கூடாரம் அமைத்தால், சேமியா விரைவாக உலரும்.
தேவையானவை!
மாவு கலக்கும் இயந்திரம்,
சேமியா பிழியும் இயந்திரம்,
நீராவி இயந்திரம் (பாய்லர் பெட்டகம்),
எடை மற்றும் பேங்கிங் இயந்திரங்கள்,
மின்சாரம் 10 ஹெச்பி.
திட்ட அறிக்கை! ()
இடம்: வாடகை (உள்ளூர் நிலவரத்துக்கேற்ப)
இயந்திரம் : 3 லட்சம்
சூரிய ஒளிக்கொட்டகை : 80 ஆயிரம்
மின்சார இணைப்பு : 1.20 லட்சம்
நடைமுறை மூலதனம் : 4 லட்சம்
மொத்தம் : 9 லட்சம்
சேமியா பிழியும் இயந்திரம்,
நீராவி இயந்திரம் (பாய்லர் பெட்டகம்),
எடை மற்றும் பேங்கிங் இயந்திரங்கள்,
மின்சாரம் 10 ஹெச்பி.
திட்ட அறிக்கை! ()
இடம்: வாடகை (உள்ளூர் நிலவரத்துக்கேற்ப)
இயந்திரம் : 3 லட்சம்
சூரிய ஒளிக்கொட்டகை : 80 ஆயிரம்
மின்சார இணைப்பு : 1.20 லட்சம்
நடைமுறை மூலதனம் : 4 லட்சம்
மொத்தம் : 9 லட்சம்
மானியம்!
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் மானியம் பெற முடியும் என்பது முக்கியமான விஷயம்!
முதலீடு! ()
நமது பங்கு 5% : 45 ஆயிரம்
மானியம் 25% : 2.25 லட்சம்
வங்கிக் கடன் 70% : 6.30 லட்சம்
மானியம் 25% : 2.25 லட்சம்
வங்கிக் கடன் 70% : 6.30 லட்சம்
திட்ட அனுமானங்கள்!
* தினசரி 600 முதல் 1,000 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். (1 மணி நேரத்துக்குள் 80 - 90 கிலோ வரை தயாரிக்கும் இயந்திரத்தின் மூலம்!)
* உற்பத்தி செய்யும்போது அதிகபட்சமாக 5 சதவிகிதம் இழப்பு ஏற்படும்.
* ஒரு பாக்கெட் 170 கிராம் வீதம் பேக் செய்து 20 பாக்கெட்களைக் கொண்ட பண்டலாக அனுப்பலாம்.
ஒரு பாக்கெட்டின் விலை ரூ.7.50. ஒரு பண்டல் விலை ரூ.150. (20X7.50=150) சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பாக்கெட் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்பனை செய்ய வாய்ப்புண்டு.
* பாய்லர் பெட்டகத்துக்கான எரிபொருளாக விறகினைப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு ஒரு மாதத்துக்கு: ரூ.10,000
பணியாளர்கள்! ()
மேற்பார்வையாளர் : 1X10,000 = 10,000
தொழிலாளர்கள் : 5X6,000 = 30,000
பேக்கிங் மற்றும்
இதர வேலைகள் : 2X5,000 = 10,000
விற்பனையாளர் : 2X6000 = 12,000
_______
மொத்தம் 62,000
_______
தொழிலாளர்கள் : 5X6,000 = 30,000
பேக்கிங் மற்றும்
இதர வேலைகள் : 2X5,000 = 10,000
விற்பனையாளர் : 2X6000 = 12,000
_______
மொத்தம் 62,000
_______
மொத்த விற்பனை!
600 கிலோவுக்கு 5% கழிவுபோக 570 கிலோ உற்பத்தி.
ஒரு பாக்கெட் 170 கிராம் எனில், 570 கிலோவில் 3,352 பாக்கெட்கள் கிடைக்கும். இதை 20 பாக்கெட்கள் வீதம் பண்டலாக்கினால் 167 பண்டல் கிடைக்கும்.
இதன்படி ஒருநாள் உற்பத்தி வரவு: ரூ.25,050. (167X150 = ரூ.25,050) மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒருமாத விற்பனை வரவு 25Xரூ.25,050 = ரூ.6,26,250.
செலவுகள்!
மூலப்பொருள் செலவு:
மைதா மாவு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,200-க்குக் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால், விலையைக் குறைத்து வாங்கலாம். (ஒரு கிலோ ரூ.24)
ஒருநாள் உற்பத்தி தோராயமாக 600 கிலோ X ரூ.24 = ரூ.14,400. மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாத செலவு : ரூ.25Xரூ.14,400 = ரூ.3,60,000
பேக்கிங் செலவு:
ஒரு பாக்கெட்டுக்கு 60 காசு. 20 பாக்கெட்களைக்கொண்ட பண்டலுக்கு ஆகும் பேக்கிங் செலவு ரூ.12. பண்டல் செலவு ரூ.3-ஆக ஒரு பண்டலுக்கான பேக்கிங் செலவு ரூ.15. தினசரி 167 பண்டலுக்கான செலவு 167X15 = ரூ.2505. ஒரு மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கான பேக்கிங் மற்றும் பண்டல் செலவு: ரூ.2505X25= ரூ.62,625
10 ஹெச்பி மின்சாரம்: ரூ.10,000
மொத்தச் செலவு! ()
மூலப்பொருள் : 3,60,000
பேக்கிங் : 62,625
மின்சாரம் : 10,000
வேலையாட்கள் : 62,000
விற்பனைச் செலவு : 5,000
மேலாண்மைச் செலவு : 5,000
இயந்திரப் பராமரிப்பு : 5,000
எரிபொருள் செலவு : 10,000
வட்டி 12.5% : 6,600
தவணை (60 மாதம்) : 10,500
தேய்மானம் : 6,250
இதரச் செலவு : 10,000
மொத்தச் செலவு : 5,52,975
மொத்த விற்பனை வரவு : 6,25,000
மொத்த செலவு : 5,53,000
______
லாபம் (வாடகை தவிர்த்து) 72,000
______
பேக்கிங் : 62,625
மின்சாரம் : 10,000
வேலையாட்கள் : 62,000
விற்பனைச் செலவு : 5,000
மேலாண்மைச் செலவு : 5,000
இயந்திரப் பராமரிப்பு : 5,000
எரிபொருள் செலவு : 10,000
வட்டி 12.5% : 6,600
தவணை (60 மாதம்) : 10,500
தேய்மானம் : 6,250
இதரச் செலவு : 10,000
மொத்தச் செலவு : 5,52,975
மொத்த விற்பனை வரவு : 6,25,000
மொத்த செலவு : 5,53,000
______
லாபம் (வாடகை தவிர்த்து) 72,000
______
இங்கு நாம் குறிப்பிட்டிருப்பது தினசரி ஒரு ஷிப்ட் வீதம் மாதம் 25 வேலைநாட்களுக்கான வரவு செலவுத் திட்டத்தை மட்டுமே. வேலை நேரத்தைக் கூட்டினால் வருமானமும் அதிகரிக்கும்.
திறமையான மார்க்கெட்டிங் அவசியம்!
எஸ்.கார்த்திக், ஸ்டார் சேமியா, ஈரோடு.
''நான் கடந்த மூன்று வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். இதற்குமுன் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கையில் இருந்த சிறிய முதலீடு மற்றும் கடன் வாங்கித்தான் இந்தத் தொழிலில் இறங்கினேன். அதிக முதலீடுகள் போட்டு பெரிய அளவில் செய்தால் ப்ராண்டடு நிறுவனங்களோடு போட்டிப் போடலாம். ஆனால், சிறிய அளவில் என்பதால் லோக்கல் கடைகளுக்கு மட்டுமே சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும்போக மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. மூலப்பொருளான மைதா மாவை மொத்தமாகக் கொள்முதல் செய்தால் குறைந்த விலைக்கு சப்ளை செய்ய முடியும். இந்தத் தொழிலுக்கு நல்ல திறமையான மார்க்கெட்டிங் அவசியம். நான் எனது ப்ராண்டு தவிர, வேறு ப்ராண்டுகளுக்கும் சேமியா உற்பத்தி செய்து கொடுத்து வருகிறேன்.''
படங்கள்: மு.சரவணக்குமார்.
(திட்டவிவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக