இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

திங்கள், 10 மார்ச், 2014

வங்கிகளில் தொழில் கடன் வாங்கும் பெண்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்!

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங் களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்க ளின் முன்னேற்றத்தை மன தில்கொண்டு தொழில்கட ன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலு கைகளையும் முன்னுரி மைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பலபெண்களுக்குத் தெரிவதில்லை.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு நிறுவனம்(எம்.எஸ்.எம்.இ), சிறு மற்றும் நடுத்தரத் தொ ழில்களைச் செய்ய விரும்பு ம் பெண்களுக்குப் பொதுத் துறை வங்கிகளில் தொழில் கடன் வாங்க உதவுகிறது. அப்படி வாங்கும்போது பெண்களுக்கு என்னென்ன சலுகை கள் கிடைக்கும் !புதிய தொழில் முனைவோர்க ளுக்கு..?”புதிதாகத் தொழில் செய்ய வி ருப்பமுள்ளவர்களுக்கு புதிய தொழில்முனைவோர் அபிவி ருத்தித் திட்டம் மிக உகந்ததாக இருக்கும். இந்தத் திட்டத்தில் கடன் பெற ஆண்களுக்கு 21 – 35 வயது எனில், பெண்கள் 21 – 45 வயது வரம்பில் கடன் பெ றலாம். இந்தத் திட்டத்தில் 50 சத விகிதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.கடன் தொகையாக ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை வழங்கப்ப டுகிறது. தொழில் தொடங்குபவ ர்கள் தங்கள் பங்காக (மார்ஜின் தொகை) 5 சதவிகித பணத்தைத் தரவேண்டும்.வேலையில்லாதவர்களுக்கு..!வேலையில்லா இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பைஉருவாக்கும் திட்டத்தில் உ ற்பத்தி சார்ந்த வாய்ப்புக ளுக்கு ரூ.5 லட்சமும், சே வை சார்ந்த வாய்ப்புகளுக் கு ரூ.3 லட்சமு ம் கடன் தொகையாக வழங்கப்படு கிறது. இதற்கு ஆண்களுக் கு வயது வரம்பு 18 – 35 வயது எனில், பெண்களுக் கான வய து வரம்பு 18 – 45 ஆகும். தொழில் தொடங்குபவர்கள் தங்கள் பங்காக (மார்ஜி ன் தொகை) 5 சதவிகித பணத்தைத் தர வேண்டும்.சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்!பாரதப் பிரதமர் சுய வே லைவாய்ப்பு உருவாக்கு ம் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப் பை உருவாக்கும் திட்டத் துக்கு ரூ.5,000 முதல் 25 லட்சம் வரை கடன் தொகை வழங்கப் படுகிறது. இதுவே சேவைத் துறைக்கு வே லைவாய்ப்பை உருவாக் கும் திட்டத்துக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தொ கை வழங்கப்படுகிறது. இந்த சுயவேலை வாய்ப் புத் திட்டத்துக்கு 18 வய துக்குமேல் இருக்கவே ண்டும். தொழில் தொட ங்கும் பெண்கள் தங்கள் பங்காக 5 சதவிகித தொகையைச் செலு த்த வேண்டும்’.பெண்களுக்கான கடன் திட்டங்கள்!இரண்டாவதாக, சமையலறையை நவீன மாக்க வழங்கப்படும் பி.எம்.பி கிச்சன் மார் டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்யும் பெண்களுக் குத் தரப்படுகிறது (ஆண்டு நிகர வருமானம் 3 லட்சத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் ). குறைந்தபட்ச வயது 21, அதிகபட்சம் வரம்பு, சம்பளம் வாங் கும் பெண்களுக்கு 60 வயது. மற்றவர்களுக்கு 55 வயது. மா ர்ஜின் தொகை 15% முதல் 20%. குறை ந்தபட்ச கடன்தொகையாக ரூ.50,000 மும்அதிகபட்சமாக ரூ.5லட்சம் வரை யிலும் கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் 12.25%மூன்றாவதாக, காப்பகங்களை விரி வுபடுத்தவும் கடன் வழங்கப்படுகிறது . இந்தக் கடன்பெற பட்டதாரியாக இ ருக்க வேண் டும். வயது வரம்பு 21-55. குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 50,000. கிராமம் மற்றும் சிறு நகரங்க ளுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலு ம், நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரை யில் வழங்கப்படுகி றது. மார்ஜின் தொகை ரூ.1 ல ட்சத்துக்கு 15சதவிகிதமு ம், ரூ.1 லட்சத்துக்கு மே ல் வழங்கப்படும்தொகை க்கு 23 சதவிகிதமுமாக உள்ளது. வட்டி 12.25%.நான்காவது திட்டமாக, பியூட்டி பார்லர்கள், சலூன்கள் அமைக்க கடன் வழங்கப்படு கிறது. இதற்கு வயது வர ம்பு 20 -60 வயது. குறைந் தபட்ச கடன் தொகை ரூ .50,000. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10லட்சம் வரையில் வழங்கப்படும். அதே சமயம் கிராமம் மற் றும் சிறிய நகரங்களுக் கு ரூ.5 லட்சம் வரை வழ ங்கப்படுகிறது. மார்ஜின் தொகையாக ரூ.2 லட்சம் வரையி லான கடனுக்கு 15 சதவிகிதமும், ரூ.2 லட்சத்துக்கு மேலான கடன் தொகைக்கு 25 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . வட்டி விகிதம் 12.25 சதவிகிதமாகும்.- சே.புகழரசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக